search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிப் கபூர்
    X
    ஆசிப் கபூர்

    இந்தியா, போருக்கான விதைகளை தூவுகிறது -பாகிஸ்தான் ராணுவ அதிகாரி குற்றச்சாட்டு

    காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா, போருக்கான விதைகளை தூவுகிறது என பாகிஸ்தான் ராணுவ அதிகாரி குற்றச்சாட்டி உள்ளார்.
    இஸ்லாமாபாத்:

    காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பாகிஸ்தான், இது தொடர்பாக ஆத்திரமூட்டும் கருத்துகளை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது அந்த நாட்டு ராணுவ செய்தி தொடர்பாளரும், மூத்த அதிகாரியுமான ஆசிப் கபூர் போர் நடவடிக்கைகள் குறித்து பேசியுள்ளார்.

    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ‘காஷ்மீரின் தற்போதைய சூழல் இந்த பிராந்தியத்துக்கு மிகவும் ஆபத்தாக மாறியுள்ளது. காஷ்மீரில் இந்தியா மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் போருக்கான விதைகளை தூவும் வகையில் அமைந்துள்ளன. எங்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டு எங்களை பலவீனப்படுத்த முடியும் என இந்தியா நினைக்கலாம். ஆனால் போர் என்பது வெறும் ஆயுதங்கள் மற்றும் பொருளாதாரத்தை மட்டும் கொண்டு நடத்தப்படும் சண்டை அல்ல. மாறாக நாட்டுப்பற்றுடனும் நடத்தப்படும் மோதல் என்பதை இந்தியாவுக்கு தெரிவிக்க விரும்புகிறோம்’ என்று கூறினார்.

    அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்தமாட்டோம் என்ற கொள்கையில் மாற்றம் வரலாம் என மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கூறியிருப்பது குறித்து கேட்டதற்கு, ‘எங்களிடம் அதுமாதிரியான ‘முதலில் பயன்படுத்தமாட்டோம்’ என்ற கொள்கை எதுவும் இல்லை. எங்கள் ஆயுதங்கள் அனைத்தும் மோதலை தடுப்பதற்காகவே வைக்கப்பட்டு இருக்கின்றன’ என்று பதிலளித்தார்.
    Next Story
    ×