என் மலர்

  செய்திகள்

  நாகசாகி மேயர்
  X
  நாகசாகி மேயர்

  அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் ஜப்பான் கையெழுத்திட வேண்டும்- நாகசாகி மேயர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அணு ஆயுதங்களை சர்வதேச அளவில் தடை செய்யும் ஒப்பந்தத்தில் ஜப்பான் கையெழுத்திட வேண்டும் என நாகசாகி மேயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
  நாகசாகி:

  இரண்டாம் உலகப்போரின்போது நாகசாகியில் அணுகுண்டு தாக்கி உயிரிழந்தோரின் 74வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. நாகசாகியில் உள்ள அமைதி பூங்காவில் நடைபெற்ற நினைவு தின நிகழ்ச்சியில், உலகம் முழுவதும் 70 நாடுகளில் இருந்து பொதுமக்கள் மற்றும் பிரதிநிதிகள் என மொத்தம் 5200 பேர் பங்கேற்றனர்.

  இந்நிகழ்ச்சியில் பேசிய நாகசாகி நகரின் மேயர் டொமிஹிசா தாயு, அணு ஆயுதங்களை தடை செய்யும் ஐ.நா.வின் ஒப்பந்தத்தில் ஜப்பான் கையெழுத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

  “அமைதியை கடைபிடியுங்கள், மீண்டும் யுத்தத்தை விரும்ப வேண்டாம், அமைதியை உலகிற்கு பரப்புங்கள்” என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

  இரண்டாம் உலகப்போர் நினைவு தினம் நாகசாகி , ஜப்பான்

  ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பேசுகையில், “அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகளுக்கும் அணு ஆயுதங்கள் இல்லாத நாடுகளுக்கும் இடையே ஜப்பான் ஒரு பாலமாக செயல்படும். மேலும் அணு ஆயுதங்கள் அற்ற உலகை உருவாக்க ஜப்பான் முயற்சி செய்யும்” என கூறினார்.

  இரண்டாம் உலகப்போரின் போது, ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களை அமெரிக்கா அணுகுண்டு மூலம் சரமாரியாக தாக்கியதைத் தொடர்ந்து, ஜப்பான் அமெரிக்காவிடம் சரணடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×