என் மலர்

  செய்திகள்

  முன்னாள் நீதிபதியை இழுத்துச் செல்லும் காவலர்
  X
  முன்னாள் நீதிபதியை இழுத்துச் செல்லும் காவலர்

  முன்னாள் நீதிபதியை தரதரவென இழுத்துச் செல்லும் காவல்துறையினர் -என்ன நடந்தது?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்க நீதிமன்றத்தில் முன்னாள் நீதிபதி, காவலரால் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்.
  வாஷிங்டன்:

  அமெரிக்காவின் ஒஹியோ மாநில நீதிமன்றத்தில் சிறுவர்களுக்கான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதியாக இருந்தவர் டிரேசி ஹண்டர். இவருக்கு ஸ்டீபன் எனும் சகோதரர் உள்ளார்.

  ஸ்டீபன் மீது வாலிபர் ஒருவரை தாக்கியது தொடர்பாக டிரேசி நீதிபதியாக இருந்தபோது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் டிரேசி, ஸ்டீபனுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளார்.

  இந்த தீர்ப்பை எதிர்த்து அவர்மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் டிரேசி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக மேல் முறையீடு மனு, சமீபத்தில் நீதிபதியின் முன் விசாரணைக்கு வந்துள்ளது.

  வழக்கு

  அப்போது டிரேசியை காவலில் வைத்து விசாரிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். டிரேசி அங்கிருந்து நகர மறுத்துவிட்டார். இதனால் காவல் துறையினர் அவரை தரதரவென இழுத்துச் சென்றனர்.

  பின்னர் டிரேசியின் ஆதரவாளர்கள் அவரை விடுதலை செய்ய வேண்டும் எனவும், அவர் குற்றவாளி இல்லை எனவும் கூறி முழக்கங்கள் எழுப்பினர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
  Next Story
  ×