search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செயத் அப்பாஸ் அர்காச்சி
    X
    செயத் அப்பாஸ் அர்காச்சி

    தங்கள் நாட்டு ஆளில்லா விமானத்தையே அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதாக ஈரான் மந்திரி தகவல்

    ஈரான் நாட்டின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த நிலையில் வீழ்த்தப்பட்டது எங்கள் நாட்டு விமானமல்ல என ஈரான் மந்திரி அறிவித்துள்ளார்.
    டெஹ்ரான்:

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், ‘ஹார்மோஸ் ஜலசந்தி பகுதியில் இருந்த அமெரிக்க கடற்படை கப்பலுக்கு மிக அருகே நெருங்கி அச்சுறுத்தும் வகையில் ஈரானின் ஆளில்லா விமானம் இன்று (வியாழக்கிழமை) பறந்து வந்தது. 

    கோப்பு படம்

    உடனடியாக அந்த விமானத்தை அமெரிக்க வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அமெரிக்காவின் எச்சரிக்கையை புறக்கணித்து ஈரான் விமானம் வந்ததால் அமெரிக்க தரப்பு தற்காப்புக்காக இந்த நடவடிக்கையை மேற்கொண்டது’ என குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், சுட்டு வீழ்த்தப்பட்டது எங்கள் நாட்டு விமானமல்ல என ஈரான் இன்று அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று கருத்து தெரிவித்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை இணை மந்திரி செயத் அப்பாஸ் அர்காச்சி, ‘ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியிலோ வேறு எங்கும் எங்கள் நாட்டின் ஆளில்லா விமானத்தை நாங்கள் இழக்கவில்லை. அங்குள்ள கடல் பகுதியில் உள்ள அமெரிக்காவின் யூ.எஸ்.எஸ். பாக்சர் கப்பல் தவறுதலாக தங்கள் நாட்டு ஆளில்லா விமானத்தையே சுட்டு வீழ்த்தியிருக்கலாம். இதற்காக நான் வருத்தப்படுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×