search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 155 புதிய வீடுகள் வழங்கிய இந்தியா
    X

    இலங்கையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 155 புதிய வீடுகள் வழங்கிய இந்தியா

    இலங்கையில் உள்ள ஹட்டன் பகுதியில் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் 155 புதிய வீடுகள் தோட்டத்தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.#IndiaHousingProject #SrilankaPlantationworkers #RanilWickremesinghe #SriLankaPM
    கொழும்பு:

    இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கும் திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில், ஹட்டன் பகுதியில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.13.5 கோடி செலவில் 155 புதிய வீடுகள் கட்டும் திட்டம் தொடங்கப்பட்டது. இப்பணிகள் முடிவடைந்த நிலையில், நேற்று பயனாளிகளுக்கு வீடுகள் ஒப்படைக்கப்பட்டன.

    உள்கட்டமைப்புத்துறை மந்திரி பழனி திகம்பரம் முன்னிலையில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே, இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்து ஆகியோர் குடியிருப்பை திறந்து வைத்து பயனாளிகளிடம் வீடுகளை ஒப்படைத்தனர்.



    ஒவ்வொரு வீடும் 7 பெர்ச் (1905 சதுர அடி) நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது. மற்ற கட்டுமான வசதிகளுடன் ஒப்பிடும்போது, இந்த கட்டிடங்கள் பசுமை கிராமங்கள் எனும் அரசின் திட்டத்தின் கீழ் கூடுதல் வசதியுடன் சிறப்பாக கட்டப்பட்டுள்ளது.

    புதிய வீடுகளின் உரிமையாளர்களுக்கு இந்திய தூதர் தரஞ்சித் சிங், வாழ்த்துக்கள் கூறினார். மேலும் இலங்கைக்கு 5000 கோடி ரூபாய் செலவில் இந்தியா வீடு கட்டும் திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும், மொத்தம் நிர்ணயிக்கப்பட்ட 63000 வீடுகளில் 47000 வீடுகள் ஏற்கனவே கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும்  தெரிவித்தார்.

    இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே பேசுகையில், ‘இந்த சிறந்த திட்டத்தினை செயல்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவிற்கு இலங்கையின் முன்னேற்றம் மீதான முக்கியத்துவத்தினை வெளிப்படுத்தும் விதமாக இச்செயல் இருக்கிறது. இதேபோன்று இந்தியா- இலங்கை மக்களுக்கு இடையேயான நட்புறவு அமைதியாகவும், வளமாகவும் தொடர வேண்டும்’ என கூறினார். #IndiaHousingProject #SrilankaPlantationworkers #RanilWickremesinghe #SriLankaPM

    Next Story
    ×