search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டென்மார்க் நாட்டில் பயணிகள் ரெயிலுடன் சரக்கு ரெயில் மோதல் - 6 பேர் பலி
    X

    டென்மார்க் நாட்டில் பயணிகள் ரெயிலுடன் சரக்கு ரெயில் மோதல் - 6 பேர் பலி

    டென்மார்க் நாட்டில் இன்று சரக்கு ரெயிலுடன் பயணிகள் ரெயில் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். #Trainaccident #DenmarkTrainaccident
    கோபென்ஹாகென்:

    டென்மார்க் நாட்டில் உள்ள ஜிலாந்து மற்றும் புனேன் தீவுகளை இணைக்கும் பாதை வழியாக இன்று காலை ஒரு பயணிகள் ரெயில் வந்துகொண்டிருந்தது.

    (உள்நாட்டு நேரப்படி) காலை ஏழரை மணியளவில் கிரேட் பெல்ட் பிரிட்ஜ் என்னும் பாலத்தின் மீது வந்தபோது அந்த பயணிகள் ரெயில் மீது பக்கவாட்டில் சென்ற ஒரு சரக்கு ரெயில் பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 16 பேர் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    மோதிய வேகத்தில் சரக்கு ரெயிலில் இருந்த கன்டெய்னர்கள் பெயர்ந்து கிடக்கும் காட்சிகளை உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டன. இவ்விபத்தை தொடர்ந்து அந்த பாலத்தின் வழியாக செல்லும் பிற ரெயில்களின் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.



    அப்பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசுவதால் விபத்துக்குள்ளான ரெயில்களை அங்கிருந்து அகற்றும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இவ்விபத்துக்கான காரணம் தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    இருப்பினும், ஏதோவொரு மர்மப் பொருள் மீது மோதாமல் இருப்பதற்காக பயணிகள் ரெயிலின் டிரைவர் எதிர்பாராத வகையில் ‘பிரேக்’ போட்டதால் நிலைதடுமாறி பக்கவாட்டில் கடந்து சென்ற சரக்கு ரெயிலின் மீது மோதியதால் இந்த விபத்து நேர்ந்திருக்கலாம என கருதப்படுகிறது. #Trainaccident #DenmarkTrainaccident
    Next Story
    ×