search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடுக்கடலில் 9 நாட்கள் தத்தளித்த 629 அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்க ஸ்பெயின் சம்மதம்
    X

    நடுக்கடலில் 9 நாட்கள் தத்தளித்த 629 அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்க ஸ்பெயின் சம்மதம்

    ஐரோப்பிய நாடுகளில் குடியேறும் நோக்கத்தில் படகுகளில் வந்து நடுக்கடலில் 9 நாட்கள் தத்தளித்த 629 அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்க ஸ்பெயின் அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. #migrants #spain
    மேட்ரிட்:

    உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும், வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.

    பல்வேறு நாடுகளுக்கு கடல் கடந்து செல்லும் இந்த அகதிகள், ரப்பர் படகுகள் போன்றவற்றில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்கின்றனர்.

    மத்திய தரைக்கடல் வழியாக இவ்வாறு அகதிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லும் படகுகள், நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது. சமீப காலமாக ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள மக்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 25 லட்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, இத்தாலி நாட்டில் மட்டும் சுமார் 6 லட்சம் அகதிகள் தஞ்சம் அடைந்துள்ளனர்.


    கடந்த ஆண்டில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் பேர் ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் அடைந்துள்ளனர்.

    இதுதவிர, கடந்த ஆண்டில் மட்டும் இத்தாலி நாட்டுக்கு புகலிடம் தேடிச் செல்லும் வழியில் சுமார் ஐயாயிரம் பேர் காணாமல் போனதாகவும், கடலில் மூழ்கி இறந்துவிட்டதாகவும் தெரிகின்றது. இருப்பினும், உள்நாட்டில் பசி, பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள லிபியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் இன்றும் அடைக்கலம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக படையெடுத்தவாறு உள்ளனர்.

    இவ்வகையில், ஐரோப்பிய நாடுகளில் குடியேறும் நோக்கத்தில் சஹாரா பாலைவனப்பகுதியில் இருக்கும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வந்த அகதிகள் படகு மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரின் அருகே நடுக்கடலில் தடுத்து நிறுத்தப்பட்டது.

    அவர்களை தங்களது நாட்டுக்குள் அனுமதிக்க இத்தாலியும், மால்டாவும் மறுத்து விட்ட நிலையில் நடுக்கடலில் கடந்த 9 நாட்களாக தவிக்க நேரிட்டது. படகுகளில் இருந்தவர்களுக்கு தேவையான உணவு, மருந்துப் பொருட்கள் செஞ்சிலுவை சங்கம் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டன.


    இந்நிலையில், இந்த 629 அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்க ஸ்பெயின் அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சிறிய கப்பல் மற்றும் இரு படகுகளில் அவர்கள் ஸ்பெயின் நாட்டை நோக்கி சென்று கொண்டுள்ளனர்.

    அவர்களில் பலர் உடல்நலக்குறைவால் பாதிகப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், 123 சிறுவர் - சிறுமியர் மற்றும் 7 கர்ப்பிணி பெண்களும் அந்த கப்பலில் வருவதால் தொண்டு நிறுவன ஊழியர்கள், டாக்டர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் என சுமார் 2 ஆயிரம் பேர் அவர்களுக்கு உதவி செய்ய காத்திருக்கின்றனர். #migrants #spain
    Next Story
    ×