search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோலர் கோஸ்டர் திடீர் பழுது - 100 அடி உயரத்தில் தலைகீழாக தொங்கிய பயணிகள்
    X

    ரோலர் கோஸ்டர் திடீர் பழுது - 100 அடி உயரத்தில் தலைகீழாக தொங்கிய பயணிகள்

    ஜப்பானில் பொழுதுபோக்கு பூங்கா ஒன்றில் ரோலர்கோஸ்டர் இயந்திரம் பழுதானதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொங்கிகொண்டிருந்த பயணிகள் சுமார் 2 மணி நேரம் கழித்து மீட்கப்பட்டுள்ளனர். #rollercoaster #Japan
    டோக்கியோ:

    ஜப்பானின் ஓசாகா நகரில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் ரோலர்கோஸ்டர் விளையாட்டில் ஏராளமானோர் ஈடுபட்டனர். அப்போது 64 பேர் கொண்ட குழுவினர் ரோலர்கோஸ்டரில் பயணிக்கும் போது தலைகீழாக திரும்பிய நிலையில் அந்த இயந்திரம் செயலற்றுப் போனது.

    இயந்திரம் பழுதானதால் 100 அடி உயரத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்தனர். இதனால் உயிருக்குப் பயந்து அலறியவர்களை மீட்புப் படையினர் நிதானமாக மீட்டனர். கிட்டத்தட்ட இந்த மீட்புப் பணி 2 மணி நேரம் நீடித்ததால் அதுவரை ரோலர்கோஸ்டரில் பயணித்தவர்கள் தலைகீழாக தொங்கிய வண்ணம் இருந்தனர்.


    4 மணிக்கு இயந்திரம் பழுதானது. 7 மணிக்கு பின்னர்தான் மீட்பு பணியினர் அனைத்து பயணிகளையும் மீட்டனர். இதுபோன்று ஜப்பானில் நடப்பது இது ஒன்றும் முதல் முறை கிடையாது. கடந்த ஆண்டில் மட்டும் 3 முறை ரோலர்கோஸ்டர் இயந்திரம் பழுதாகி பயணிகள் விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. #rollercoaster #Japan
    Next Story
    ×