search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க அதிபர் தேர்தல் ஹேக்கிங்: ரஷ்ய புரோகிராமர் ஸ்பெயினில் கைது
    X

    அமெரிக்க அதிபர் தேர்தல் ஹேக்கிங்: ரஷ்ய புரோகிராமர் ஸ்பெயினில் கைது

    அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக ஹேக்கிங் செய்யப்பட்டதாக எழுந்த புகார்கள் தொடர்பாக, ரஷ்ய புரோகிராமர் ஸ்பெயினில் கைது செய்யப்பட்டார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெறுவதற்கு ரஷ்யா உதவி இருந்ததாக அந்நாட்டின் உளவு அமைப்பு சி.ஐ.ஏ. குற்றம் சாட்டியது. 

    மேலும், ட்ரம்ப் வெற்றி பெறுவதற்கு ரஷ்ய அதிகாரிகள் உறுதுணையாக இருந்தனர் என்று அமெரிக்காவின் பசுமை கட்சி வேட்பாளர் ஜில் ஸ்டீன் ஏற்கெனவே குற்றம்சாட்டியிருந்தார்.

    அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரி கிளிண்டன், குடிமக்கள் போடும் ஓட்டுகளான ‘பாப்புலர் ஓட்டு’களை பெரும்பான்மையாகப் பெற்றிருந்தாலும், தேர்தல் சபை வாக்குகளான ‘எலெக்டோரல் ஓட்டு’களை, அதிகமாகப் பெற்று ட்ரம்ப் வெற்றிபெற்றார் என அடுத்தடுத்த புகார்கள் ட்ரம்ப்-க்கு எதிராக எழுந்தன.



    இது தொடர்பாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. இதை ரஷ்யா மறுத்தது. டிரம்ப் தரப்பிலும் மறுப்பு வெளியானது.

    இந்நிலையில், அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக ஹேக்கிங் செய்யப்பட்டதாக எழுந்த புகார்கள் தொடர்பாக, ரஷ்ய புரோகிராமர் ஸ்பெயினில் கைது செய்யப்பட்டார்.

    ராய்ட்டர் செய்திகளின் படி, ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் கம்ப்யூட்டர் புரோகிராமர் பையோடர் லெவஷோவ் கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் பையோடர் லெவஷோவ் கைது செய்யப்பட்டதை ரஷ்ய தூதரகம் மற்றும் ஸ்பெயின் உள்துறை அமைச்சகம் இன்னும் உறுதி செய்யவில்லை.

    Next Story
    ×