என் மலர்

  செய்திகள்

  ஜெருசலேத்தில் ராணுவ வீரர்கள் மீது லாரி ஏற்றி தாக்குதல்: 4 பேர் பலி
  X

  ஜெருசலேத்தில் ராணுவ வீரர்கள் மீது லாரி ஏற்றி தாக்குதல்: 4 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜெருசலேத்தில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் மீது மர்ம மனிதன் லாரி ஏற்றி தாக்குதல் நடத்தினான். இதில் நான்கு இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பலியானார்கள்.
  இஸ்ரேல் நாட்டின் தலைநகரான ஜெருசலேத்தில் ராணுவப்படையைச் சேர்ந்த ஏராளமான வீரர்கள் பஸ்சில் ஏறுவதற்கு தயாராக இருந்தனர். அப்போது திடீரென ராணுவ வீரர்களுக்கு மத்தியில் லாரி ஒன்று புகுந்தது. இதில் நான்கு வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

  இந்த நான்கு வீரர்களில் மூன்று பேர் பெண்கள் ஆவார்கள். லாரி ஏறியதுடன் ராணுவ வீரர்கள் அந்த லாரியை நோக்கி துபாக்கியால் சுட்டனர். இதில் லாரி டிரைவர் உயிரிழந்தார். அவர் பாலஸ்தீனத்தை சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும், இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் எனக்கூறப்படுகிறது.

  ஏற்கனவே, பாலஸ்தீனத்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையில் மோதல் இருந்து வரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  Next Story
  ×