என் மலர்

  செய்திகள்

  இந்தியாவுடன் பாகிஸ்தான் நட்பு கொள்ள வேண்டாம்: ஹபீஸ் சயீத்
  X

  இந்தியாவுடன் பாகிஸ்தான் நட்பு கொள்ள வேண்டாம்: ஹபீஸ் சயீத்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவுடன் நட்பு கொள்வதில் இருந்து விலகி இருக்க வேண்டுமென பாகிஸ்தான் அரசாங்கத்தினை ஹபீஸ் சயீத் கேட்டு கொண்டுள்ளார்.
  லாஹூர்,

  இந்தியாவுடன் நட்பு கொள்வதில் இருந்து விலகி இருக்க வேண்டுமென பாகிஸ்தான் அரசாங்கத்தினை ஜமாத் உத் தவா இயக்க தலைவர் மற்றும் 2008ம் ஆண்டு மும்பை தீவிரவாத தாக்குதலில் முக்கிய குற்றவாளியான ஹபீஸ் சயீத் இன்று கேட்டு கொண்டுள்ளார்.

  காஷ்மீரின் மக்கள் தொகை நிலையை மாற்ற பாரதீய ஜனதா அரசு முயற்சித்து கொண்டிருக்கிறது என கூறியுள்ள அவர், காஷ்மீரிகளுக்கு ஆதரவாக நாங்கள் நிற்கிறோம். காஷ்மீரின் விடுதலை போராட்டத்திற்கு நாங்கள் முழு ஆதரவு அளிக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

  இந்திய படைகள் காஷ்மீரில் வன்முறையில் ஈடுபடுகிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

  காஷ்மீரிகளின் பிரச்னைகளை தீர்க்க வேண்டும் என பாகிஸ்தான் அரசினையும் அவர் வலியுறுத்தியுள்ளார். அவர், பாகிஸ்தான் அரசாங்கம் இந்தியாவின் நட்பினை எதிர்நோக்கி இருக்க கூடாது.  ஆகவே, அவர்களின் பிரச்னைகளை தீர்க்க வேண்டியது பாகிஸ்தான் அரசாங்கத்தின் பொறுப்பு என கூறியுள்ளார்.
  Next Story
  ×