search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூக்கத்தில் நீதிபதி தீர்ப்பளித்ததால் மேல்கோர்ட்டில் குற்றவாளி விடுதலை
    X

    தூக்கத்தில் நீதிபதி தீர்ப்பளித்ததால் மேல்கோர்ட்டில் குற்றவாளி விடுதலை

    டென்மார்க்கில் தூக்கத்தில் நீதிபதி தீர்ப்பளித்ததால் மேல் கோர்ட்டில் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டார்.

    கோபன்ஹகன்:

    ‘தூங்காதே தம்பி தூங்காதே’ ‘சோம்பேறி என்ற பெயர் வாங்காதே’ நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் தானும் கெட்டதுடன் நாட்டையும் கெடுத்து விட்டார்’ என பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல் வரிகள் எக்காலத்துக்கும் பொருந்தும் என்பதற்கு ஏற்ப ஒரு சம்பவம் டென்மார்க் நாட்டில் நடந்துள்ளது.

    டென்மார்க் தலைநகர் கோபன்ஹகனை சேர்ந்த ஒரு நபர் தனது 14 வயது மகளை கற்பழித்ததாக கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கு விசாரணை கோபன்ஹகன் ஐகோர்ட்டில் நடந்தது. அதில் அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இச்சம்பவம் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்தது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றவாளி மேல்கோர்ட்டில் அப்பீல் செய்தார். அப்போது வழக்கு விசாரணையின் போது எனது தரப்பு வக்கீலின் வாதத்தை கேட்காமல் ஒரு நீதிபதி தூங்கி கொண்டே இருந்தார்.

    இதனால் தவறாக தீர்ப்பளித்து விட்டார் எனக்கூறி அதற்கான வீடியோ ஆதாரத்தையும் கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

    அதை போட்டுப்பார்த்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அடங்கிய ‘பெஞ்ச்‘ அவரது குற்றச்சாட்டை உறுதி செய்தனர். எனவே கற்பழிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற அந்த நபர் விடுதலை செய்யப்பட்டார். 6 நீதிபதிகளில் 5 பேர் இவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தனர்.

    Next Story
    ×