என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
எனது கணவர் ‘ஜென்டில்மேன்’ டிரம்ப் மீதான செக்ஸ் புகார்கள் பொய்யானவை: மனைவி ஆவேசம்
நியூயார்க்:
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மீது ‘செக்ஸ்’ வீடியோ புகார் எழுந்தது. அதில் பெண்கள் பற்றி அவர் இழிவாக கூறியதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. அதை தொடர்ந்து பல பெண்கள் டிரம்ப் மீது நேரடியாக ‘செக்ஸ்’ குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தினர். இதை அவர் மறுத்தார்.
இருந்தும், பெண்கள் மற்றும் வாக்காளர்கள் மத்தியில் டொனால்டு டிரம்பின் செல்வாக்கு சரிந்தது. இது சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்து வாக்கெடுப்பில் பிரதிபலித்தது.
இந்த நிலையில் முன்னாள் மாடல் அழகியும், டொனால்டு டிரம்பின் மனைவியுமான மெலானியா (45) பேட்டி அளித்தார். அதில் பெண்கள் பற்றி இழிவான கருத்துக்களை டிரம்ப் கூறியதாக வெளியான வீடியோ டேப் ஏற்றுக் கொள்ள முடியாது.
மேலும் டிரம்ப் மீது பெண்கள் கூறிய ‘செக்ஸ்’ புகார்கள் பொய்யானவை. ஏனெனில் எனது கணவர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர் ஒரு ‘ஜென்டில்மேன்’. அவர் எப்போதும் இது போன்ற தவறுகள் செய்யமாட்டார்.
பெண்கள் மீது அவருக்கு மதிப்பும் மரியாதையும் உள்ளது என்றார். மேலும் தனது கணவர் மீது கூறப்பட்டுள்ள செக்ஸ் புகார்களை மறுத்து பெண்களிடம் பிரசாரம் செய்து வருகிறார்.