search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீவிரவாதிகளை பாதுகாக்க வேண்டாம்: பாக். ராணுவத்துக்கு எச்சரிக்கை விடுத்த நவாஸ் ஷெரீப்
    X

    தீவிரவாதிகளை பாதுகாக்க வேண்டாம்: பாக். ராணுவத்துக்கு எச்சரிக்கை விடுத்த நவாஸ் ஷெரீப்

    பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட தீவிரவாத குழுக்களை பாதுகாக்க வேண்டாம் என ராணுவத்துக்கு பிரதமர் நவாஸ் ஷெரீப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    இஸ்லாமாபாத்:

    உரி தாக்குதலைத் தொடர்ந்து இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் சென்று சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனப்படும் அதிரடி தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளை கொன்றதுடன், அவர்களின் முகாம்களையும் அழித்தது. இந்த தாக்குதலையடுத்து பல்வேறு நாடுகள் பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பியுள்ளன. தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் செயலபடுவதாகவும் குற்றம்சாட்டுகின்றன. எனவே, பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்படும் நிலை உருவாகி உள்ளது.

    இந்தியாவுக்கு சார்க் நாடுகள், அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளும் தற்போது ஆதரவு தெரிவித்துள்ளன. நெருங்கிய நட்பு நாடான சீனா கூட நேரடியாக பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

    எனவே, பாகிஸ்தான் சர்வதேச சமூகத்தில் இருந்து தனித்துவிடப்படும் நிலையை உணர்ந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப், முன்னெப்போதும் இல்லாத வகையில் ராணுவத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நடவடிக்கைகளில் ஒருமித்த கருத்துடன் சம்மதத்தையும் கேட்டார்.

    மேலும், பதான்கோட் தீவிரவாத தாக்குதல் மற்றும் ராவல் பிண்டி தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் மும்பை தாக்குதல் விசாரணையை தீவிரபடுத்தி முடிக்க அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டிருப்பதாகவும் பாகிஸ்தானின் முன்னணி நாளிதழான டான் செய்தி வெளியிட்டு உள்ளது.

    பிரதமர் நவாஸ் செரீப் தொடர்ச்சியாக ராணுவ அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதன் விளைவாக இந்த இரண்டு கட்ட நடவடிக்கைக்கு ஒப்புதல் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

    ‘தடை செய்யப்பட்ட தீவிரவாத குழுக்கள் மீது சட்ட அமலாக்க ஏஜென்சிகள் நடவடிக்கை எடுத்தால் ராணுவம் தலைமையிலான உளவுத்துறை அமைப்புகள் அதில் தலையிட வேண்டாம்’ என்ற செய்தியை உளவு அமைப்பான ஐஎஸ்ஐ டைரக்டர் ஜெனரல் ரிஸ்வான் அக்தர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நசீர் ஜன்ஜூ ஆகியோர் அனைத்து மாகாணங்களுக்கும் தெரிவிக்க உள்ளனர்.

    உளவுத்துறை தீவிரவாதிகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியாததால் இது ராணுவ உளவுத்துறைக்கு தகவல்களாக கொடுக்கப்படுவதாக பாகிஸ்தான் டான் இணையதளம் செய்தி வெளியிட்டு உள்ளது.
    Next Story
    ×