search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிரியா-துருக்கி எல்லையில் ஐ.எஸ். தற்கொலைப்படை தாக்குதல்: 29 பேர் பலி
    X

    சிரியா-துருக்கி எல்லையில் ஐ.எஸ். தற்கொலைப்படை தாக்குதல்: 29 பேர் பலி

    சிரியா-துருக்கி எல்லையில் இன்று நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் சிரியாவைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் உள்பட 29 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
    சிரியா:

    சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வரும் சிரிய கிளர்ச்சிப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை வான் தாக்குதல் நடத்துகிறது. மற்றொரு புறம், அண்டை நாடான துருக்கியும் அங்கே தனியாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், ஐ.எஸ். அமைப்பினர் தவிர ஏராளமான பொதுமக்களும் பலியாகின்றனர்.

    இந்நிலையில், சிரியாவின் இட்லிப் மாகாணத்திற்கு உட்பட்ட ஆத்மே என்ற இடத்தில இன்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், சிரியா கிளர்ச்சியாளர்கள் உள்பட 29 பேர் பலியாகினர். சுமார், 20 பேர் வரை காயம் அடைந்துள்ளனர்.

    இந்த குண்டுவெடிப்பை சிரியாவின் செய்தி நிறுவனங்களில் ஒன்றான அனடோலியா உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இந்தத் தாக்குதலை தாங்கள் தான் நடத்தியதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுபேற்றுக் கொண்டுள்ளனர். கிளர்ச்சியாளர்களை குறிவைத்து கார் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×