என் மலர்

  செய்திகள்

  நியூசிலாந்தில் கர்ப்பிணி காதலியை கொன்ற இந்திய மாணவருக்கு ஆயுள் தண்டனை
  X

  நியூசிலாந்தில் கர்ப்பிணி காதலியை கொன்ற இந்திய மாணவருக்கு ஆயுள் தண்டனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நியூசிலாந்தில் கர்ப்பிணி காதலியை கத்தியால் குத்திக்கொன்ற இந்திய மாணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
  வெலிங்டன்:

  இந்தியாவை சேர்ந்தவர் ஆகாஷ், இவர் நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் தங்கி பட்ட மேற்படிப்பு படித்து வந்தார். இவரது காதலி குர்பிரீத்கவுர்(22) இவர் கர்ப்பிணி ஆனார். அதற்கு தானே காரணம் என ஆகாஷ் கருதினார். அது குறித்து குர்பீரீத்கவுரிடம் பேசினார்.

  ஆனால் தனது கர்ப்பத்துக்கு ஆகாஷ் காரணமல்ல என்றும் தனது வயிற்றில் வளரும் குழந்தை அவருடையது அல்ல என்றும் ஏளனமாக கூறியதாக தெரிகிறது.

  இதனால் ஆத்திரம் அடைந்த ஆகாஷ் தனது காதலி குர்பிரீத்கவுரை கொடூரமாக கத்தியால் குத்தி படுகொலை செய்தார். அதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

  அவர்மீது ஆக்லாந்து ஐகோர்ட்டில் வழக்கு தொரடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி மாத்யூ பால்மர் குற்றவாளி ஆகாசுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். எனவே இவர் குறைந்தது 17 ஆண்டு ஜெயிலில் இருந்து தண்டனை அனுபவிக்க வேண்டும்.
  Next Story
  ×