என் மலர்
செய்திகள்

வாரத்தில் 5 நாட்கள் 30 நிமிடம் நடந்தால் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 66 ஆயிரம் சேமிக்கலாம் - ஆய்வில் தகவல்
‘வாரத்தில் 5 நாட்கள் 30 நிமிடம் நடந்தால் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 66 ஆயிரம் சேமிக்கலாம்‘ என புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
லண்டன்:
உடல் நலனுக்காகவும், எடையை குறைக்கவும் கடுமையான உடற்பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் அவை எதுவும் தேவையில்லை. வாரத்தில் 5 நாட்கள் 30 நிமிடம் நடைபயிற்சி செய்தாலே போதும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
இதுகுறித்து அறிய 26,239 ஆண்கள் மற்றும் பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் வாரத்தில் 5 நாட்கள் குறைந்தது 30 நிமிட நேரம் மட்டுமே நடைபயிற்சி மேற்கொண்டவர்கள் இருதய நோய் உள்ளிட்ட பல நோய்களில் இருந்து மீண்டனர்.
இதன் மூலம் ஆண்டொன்றுக்கு தலா ரூ. 1 லட்சத்து 66 ஆயிரம் (2,500 டாலர்) மருத்துவ செலவு குறைந்து சேமிப்பு ஏற்பட்டது. இத்தகவல் அமெரிக்க இருதய சங்கத்தின் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Next Story