என் மலர்

  செய்திகள்

  பிலிப்பைன்சில் போர் குற்ற நடவடிக்கையில் நாள் தோறும் 44 பேர் கொலை: அதிர்ச்சி தகவல்
  X

  பிலிப்பைன்சில் போர் குற்ற நடவடிக்கையில் நாள் தோறும் 44 பேர் கொலை: அதிர்ச்சி தகவல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிபர் ரோட்ரிகோ மேற்கொண்டு வரும் போர் குற்ற நடவடிக்கையில் நாள் தோறும் 44 பேர் கொலை செய்யப்பட்டதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.
  மணிலா:

  பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட், போதை மருந்து வலைப்பின்னலை அழிப்பதாக சபதம் மேற்கொண்டு கடுமையான நடவடிக்கைகளில் சில ஜனநாயக முறைகளற்ற விதத்தில் சட்டவிரோத கொலைகள், என்கவுண்டர்களுக்கு உத்தரவிட்டார். இது போர் குற்ற நடவடிக்கை என்று கருதப்படுகிறது.

  இது அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தியது. கடந்த ஜூன் 30-ம் தேதி ரோட்ரிகோ அதிபராக பதவியேற்றது முதல் சுமார் 2,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் போர் குற்ற நடவடிக்கை காலத்தில் நாள்தோறும் சுமார் 44 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளது.

  காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி கொலைகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கிட்டத்தட்ட எட்டியுள்ளது.

  ”கடைசி போதைப் பொருள் கடத்தல்காரர் கொலை செய்யப்படும் வரை, நாங்கள் தொடர்வோம், நான் தொடர்வேன்” என்று அதிபர் ரொட்ரிகோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

  Next Story
  ×