search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காதலியை சந்திப்பதற்காக பாகிஸ்தானுக்கு சென்ற இந்தியருக்கு சிறையில் அடி - உதை: சுஷ்மா கவலை
    X

    காதலியை சந்திப்பதற்காக பாகிஸ்தானுக்கு சென்ற இந்தியருக்கு சிறையில் அடி - உதை: சுஷ்மா கவலை

    காதலியை சந்திப்பதற்காக பாகிஸ்தானுக்கு சென்று கைதான இந்தியர் ஹமீது அன்சாரி பெஷாவர் சிறையில் உடன் தங்கியிருந்த கைதிகளால் மூன்றுமுறை தாக்கப்பட்டு உள்ளார் என்று வெளியாகிவரும் தகவல்கள் கவலை அளிப்பதாக மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் குறிப்பிட்டுள்ளார்.
    பெஷாவர்:

    மும்பையை சேர்ந்த ஹமீது நெகால் அன்சாரி சமூக வலைதளத்தில் சந்தித்த காதலியை சந்திப்பதற்காக கடந்த 2012-ம் ஆண்டு சட்டவிரோதமாக ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானிற்குள் சென்றபோது கைதுசெய்யப்பட்டு பெஷாவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். போலி பாகிஸ்தான் அடையாள அட்டை வைத்திருந்த குற்றத்திற்காக பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் அன்சாரிக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

    பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அன்சாரியை உள்ளூர் சிறைக்கைதிகள் தொடர்ந்து மூன்று முறை கடுமையாக தாக்கி உள்ளனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அன்சாரிக்கு நேர்ந்த இந்த கொடுமை சமீபத்தில் அவரது வக்கீல் மூலமாக பெஷாவர் நகர் கோர்ட்டில் அம்பலமாகியுள்ளது.

    இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டு சிறையில் இந்தியர் ஒருவர் தொடர்ந்து மூன்று முறை தாக்கப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகள் கவலை அளிப்பதாக குறிப்பிட்டுள்ள மத்திய உள்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், இவ்விவகாரம் தொடர்பாக ராஜதந்திர நடவடிக்கையை கையாளுமாறும் அங்கு சிறையிலோ, மருத்துவமனையிலோ வைக்கப்பட்டுள்ள அன்சாரியை சந்தித்து அவரது நிலவரம் குறித்து உடனடியாக தன்னிடம் விளக்கம் அளிக்குமாறு பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தை சேர்ந்த உயர் ஆணையாளரை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×