என் மலர்

  செய்திகள்

  ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்: சிங்கப்பூர் முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு
  X

  ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்: சிங்கப்பூர் முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிங்கப்பூர் மீது ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்ட தகவல் தெரியவந்துள்ளதால் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
  சிங்கப்பூர்:

  இந்தோனேஷியா நாட்டில் உள்ள பட்டாம் தீவுப்பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 6 தீவிரவாதிகள் சிக்கினர். அவர்கள் சிங்கப்பூர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதும், இவர்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாதி பஹ்ருன் நயிமுடன் தொடர்பு இருந்ததும் தெரியவந்தது.

  மேலும், பட்டாம் தீவில் இருந்தவாறே சிங்கப்பூரில் ராக்கெட் தாக்குதலில் ஈடுபட திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது. சிங்கப்பூருக்கு மிக அருகே வெறும் 15 கி.மீ. தொலைவிலேயே படாம் இருப்பதால் ராக்கெட் வீச்சு சாத்தியப்படும் என பாதுகாப்பு வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

  பட்டாமில் இருந்து சிங்கப்பூருக்கு படகு போக்குவரத்து நடக்கிறது. சுற்றுலா பிரதேசங்களான இந்த பகுதிகளில் மக்கள் அடிக்கடி கூடி தங்கள் விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். எனவே, இந்த பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் மிகப்பெரும் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

  எனவே, பட்டாம் தீவில் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் சிங்கப்பூரில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

  இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதை உறுதிசெய்த சிங்கப்பூர் உள்துறை மந்திரி கே.சண்முகம், கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் மெரினா வளைகுடா பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருக்கலாம் என கூறினார்.
  Next Story
  ×