என் மலர்tooltip icon

    உலகம்

    • வழக்கமான மாதவிடாய் ஏற்படுவதில் எந்த மாறுபாடும் இல்லாமல் இருந்துள்ளது.
    • வயிற்று வலியால் கழிவறைக்கு சென்றபோது, பெண் குழந்தை பிறந்துள்ளது.

    இங்கிலாந்தை சேர்ந்தவர் மைக்கேல் க்ரீன். இவரது மனைவி ஹெலன். இவர்களுக்கு 6 வயதில் டார்சி என்ற பெண் குழந்தை உள்ளது.

    மைக்கேல் க்ரீன் தனது குடும்பத்துடன் 10 நாள் சுற்றுப் பயணமாக கனடா சென்றுள்ளார். டோரான்டோவில் தங்கியிருந்தபோது ஹெலனுக்கு சற்று வயிறு வலித்துள்ளது. இதனால் கழிவறைக்கு சென்றுள்ளார். திடீரென வயிற்றில் இருந்து வெளியே ஏதோ ஒன்று தள்ளுவது போன்று உணர்ந்துள்ளார். அப்போது கீழே பார்த்தபோதுதான், அவரது வயற்றில் இருந்து குழந்தை பிறந்துள்ளது தெரியவந்துள்ளது.

    ஹெலன், தான் கர்ப்பிணியாக இருப்பதாக உணர்ந்ததே இல்லையாம். அதற்கான அறிகுறி ஏதும் தெரியவில்லையாம் எனத் தெரிவித்துள்ளார். இந்த வகையான கர்ப்பத்திற்கு cryptic pregnancy ஆகும். அவருக்கு வழக்கமாக வரக்கூடிய மாதவிடாயில் எந்த மாறுபாடும் ஏற்படவில்லையாம். அப்படி இருந்தும் குழந்தை பிறந்துள்ளது.

    என்றாலும், தற்போது தங்களது குடும்பத்தில் கூடுதலான ஒரு பெண் குழந்தை இணைந்துள்ளதால் மகிழ்ச்சியாக உள்ளனர். இது மிக மிகப்பெரிய ஷாக். இருந்தாலும் லவ்லி சர்ப்பிரைஸ் என ஹெலன் தெரிவித்துள்ளார்.

    • விமானியின் செயலை விமானியில் இருந்த மற்ற பணியாளர்கள் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்திடம் தெரிவித்தனர்.
    • பின்னர் விமானம் தரையிறக்கப்பட்டபின் அவர் கைது செய்யப்பட்டார்.

    இங்கிலாந்தின் லண்டனில் இருந்து அமெரிக்காவின் நியூ யார்க்குக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது.

    அப்போது, விமானத்தை எப்படி ஓட்டுவது என்பதை அதே விமானத்தில் பயணித்த தனது குடும்பத்தினருக்குக் காட்டுவதற்காக விமானத்தின் காக்பிட்-ஐ (விமானி அறைக்கதவை) விமானி ஒருவர் திறந்து காட்டியுள்ளார். இந்த சம்பவத்தால் பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகினர்.

    பொதுவாக, விமானக் கடத்தல் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்க பயணத்தின்போது காக்பிட் எப்போதும் பாதுகாப்பாக மூடப்பட்டிருக்கும்.

    இந்நிலையில் விதிமுறைகளை மீறியதற்காக விமானி இடைநீக்கம் செய்யப்பட்டார். விமானியின் செயலை விமானியில் இருந்த மற்ற பணியாளர்கள் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்திடம் தெரிவித்தனர்.

    • 994 பேர் காசா மனிதாபிமான அறக்கட்டளை தளங்களுக்கு அருகிலும், 766 பேர் விநியோக வாகனங்களின் பாதைகளிலும் கொல்லப்பட்டனர்.
    • கடந்த 15 நாட்களில் 387 பேர் உதவிக்காக காத்திருந்தபோது கொல்லப்பட்டுள்ளனர்.

    காசாவில் கடந்த மே மாத இறுதியிலிருந்து உணவு மற்றும் உதவிப்பொருட்களாக காத்திருந்த 1,760 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

    அறிக்கைப்படி, "மே 27 முதல் ஆகஸ்ட் 13 வரை, உதவி கோரும் போது குறைந்தது 1,760 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக நாங்கள் பதிவு செய்துள்ளோம்.

    994 பேர் காசா மனிதாபிமான அறக்கட்டளை தளங்களுக்கு அருகிலும், 766 பேர் விநியோக வாகனங்களின் பாதைகளிலும் கொல்லப்பட்டனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஐ.நா அறிவித்த இறப்பு எண்ணிக்கை 1,373 ஆகும். இந்நிலையில் கடந்த 15 நாட்களில் 387 பேர் உதவிக்காக காத்திருந்தபோது கொல்லப்பட்டுள்ளனர்.

    நேற்று (வெள்ளிக்கிழமை) இஸ்ரேலிய பீரங்கி தாக்குதலில் குறைந்தது 38 பேர் கொல்லப்பட்டதாக காசாவில் சிவில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்தது. இதில் உதவிக்காக காத்திருந்த 12 பேர் அடங்குவர். 

    இருப்பினும், இஸ்ரேலிய இராணுவம் ஹமாஸின் ராணுவத் திறன்களை அழிக்க தங்கள் படைகள் செயல்படுவதாகக் கூறுகிறது. மேலும் பொதுமக்கள் உயிரிழப்புகளைக் குறைக்க இராணுவம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக இஸ்ரேல் கூறி வருகிறது. 

    இதற்கிடையே காசாவில் பட்டினியால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 200 ஐ கடந்துள்ளது.

    மேலும், அண்மையில் காசாவில் 5 அல் ஜசீரா பத்திரிகையாளர்களை மருத்துவமனையில் வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி கொலை செய்தது. இதன் மூலம் 2023 முதல் காசாவில் இஸ்ரேல் கொன்று குவித்த பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 238 ஆக அதிகரித்துள்ளது.  

    • மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • வெள்ளப்பெருக்கில் மக்கள் அடித்துச் செல்லப்பட்டனர்.

    வடமேற்கு பாகிஸ்தான் மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 307 பேர் உயிரிழந்துள்ளனர்.

    வருகிற 21ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் 307 பேர் உயிரிழந்துள்ளனர். மேகவெடிப்பு மற்றும் வெள்ளப்பெருக்கால் இந்த உயிரிழப்பு நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    279 ஆண்கள், 15 பெண்கள், 13 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். புனர் மாவட்டம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு 184 பேர் உயிரிழந்துள்ளனர். மன்சேரா மாவட்டத்தில் 23 பேரும், ஷங்லா மாவட்டத்தில் 36 பேரும், பஜாயுர் மாவட்டத்தில் 21 பேரும், பட்டாக்ராம் மாவட்டத்தில் 15 பேரும் உயிரிழந்துள்ளனர். 74 வீடுகள்முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.

    • டிரம்ப் புதினை வரவேற்றபோது, குண்டுவீச்சு விமானங்கள் மேலே பறக்கும் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
    • ஈரான் அணுசக்தி தளங்கள் மீது இதே ஜூன் B2 Bomber விமானங்களை வைத்தே அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.

    உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக பேசுவாரத்தை நடத்த நேற்று ரஷிய அதிபர் புதின் அமெரிக்கா சென்றிருந்தார்.

    இந்நிலையில் விமான நிலையத்தில் புதின் தரையிறங்கும் போது ஒரு B2 Bomber குண்டுவீச்சு விமானம் அவர் மீது பறந்தது.

    அமெரிக்காவின் இராணுவ வலிமையை ரஷியாவுக்கு காட்ட இந்த விமானம் பறக்கவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

    டிரம்ப் புதினை வரவேற்றபோது, குண்டுவீச்சு விமானங்கள் மேலே பறக்கும் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. 

    கடந்த ஜூன் மாதம் ஈரான் அணுசக்தி தளங்கள் மீது இதே ஜூன் B2 Bomber விமானங்களில் பங்கர் பஸ்டர் குண்டுகளை நிரப்பி அதை வைத்தே அமெரிக்கா தாக்குதல் நடத்தி இருந்தது. B2 Bomber பெரிதும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளைத் தாக்கும் திறன் கொண்டவை.

    அமெரிக்க இராணுவத்தின் ஆயுதக் களஞ்சியத்தில் இருப்பதிலேயே B2B குண்டுவீச்சு விமானங்கள் மிகவும் விலையுயர்ந்த விமானங்கள் ஆகும்.

    ஒவ்வொன்றும் 2.1 பில்லியன் டாலர்கள் மதிப்புடையவை. இதில் ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 6,000 கடல் மைல்கள் வரை பறக்க முடியும். B2 Bomber குண்டுவீச்சு விமானங்கள் 18,144 கிலோ எடையை சுமக்கும் திறன் கொண்டவை. அணு குண்டுகளையும் அவற்றால் சுமந்து செல்ல முடியும்.

    B2 Bomber

     

    • நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என்று கூறினார்.
    • ஒப்பந்தத்தை முடிவு செய்ய வேண்டிய பொறுப்பு இப்போது உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியிடம் உள்ளது.

    அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆங்கரேஜ் நகரில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் புதின் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த சந்திப்பில் உக்ரைன், ரஷியா இடையிலான போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்பும், ரஷிய அதிபர் புதினும் சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதன் பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ரஷிய அதிபர் புதின், எங்களுக்கு இடையே நடந்த போர் நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என்று கூறினார்.

    பின்னர் பேசிய டிரம்ப், போர் நிறுத்தம் தொடர்பாக இன்னும் எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என தெரிவித்தார். மேலும், "ஒப்பந்தத்தை முடிவு செய்ய வேண்டிய பொறுப்பு இப்போது உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியிடம் உள்ளது.

    ஐரோப்பிய நாடுகளும் இதில் சிறிது தலையிட வேண்டும். ஆனால் முக்கிய பொறுப்பு ஜெலென்ஸ்கியிடம் உள்ளது" என்று கூறினார்.

    புதினுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் ஜெலன்ஸ்கி உடன் டிரம்ப் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். மேலும் ஐரோப்பாவின் நேட்டோ கூட்டமைப்பு தலைவர்களுடனும் அவர் தொலைபேசியில் உரையாடி உள்ளார்.

    இந்நிலையில் வரும் திங்கள்கிழமை, டிரம்ப்-ஐ நேரில் சந்திக்க ஜெலன்ஸ்கி அமெரிக்கா பயணப்பட உள்ளார். டிரம்ப் உடன் நீண்ட, பயனுள்ள பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்த ஜெலன்ஸ்கி, திங்கள்லன்று டிரம்ப்பை வாஷிங்டனில் சந்திக்க உள்ளதை உறுதிப்படுத்தினார்.  

    முன்னதாக அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், "பேச்சுவார்த்தை நாளில் கூட ரஷியா (உக்ரைனில்) கொலைகளை செய்கிறது. இது நிறைய விஷயங்களைச் சொல்கிறது. போருக்கு ஒரு நியாயமான முடிவு தேவை. போரை முடிவுக்குக் கொண்டுவர உக்ரைன் முடிந்தவரை உழைக்கத் தயாராக உள்ளது. மேலும் அமெரிக்காவின் வலுவான நிலைப்பாட்டை நாங்கள் நம்புகிறோம்" என்று தெரிவித்திருந்தார். 

    • ரஷியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் எந்தப் பிரதேசப் பரிமாற்றமும் இருக்க கூடாது.
    • போர் விவகாரத்தில் புதினுக்கு எவ்வித முக்கியத்துவமும் கிடைத்துவிடக்கூடாது.

    அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் நோபல் பரிசுக்கு நான் டிரம்ப் பெயரை பரிந்துரைப்பேன். ரஷியா-உக்ரைன் இடையேயான போரை டிரம்பால் முடிவுக்குக் கொண்டுவர முடிந்தால் அவரை பாராட்டுவேன். உக்ரைனை அதன் பிரதேசத்தை ரஷியாவிடம் விட்டுக்கொடுக்க வேண்டிய நிலையில் வைக்காமல் அந்த போரை முடிவுக்குக் கொண்டுவர முடிந்தால் டிரம்பின் பெயரை நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்வேன். ஒரு போர் நிறுத்தம் இருக்க வேண்டும். ரஷியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் எந்தப் பிரதேசப் பரிமாற்றமும் இருக்க கூடாது. இதை புதினுக்கு தெளிவுபடுத்த அலாஸ்கா உச்சிமாநாடு ஒரு வாய்ப்பாக டிரம்புக்கு இருக்கலாம்.

    போரை அவர் முடிவுக்கு கொண்டு வர இதுவே சரியான தருணம். அங்கு ஒரு குண்டு வீசும் சத்தம் கூட கேட்கக்கூடாது. போர் விவகாரத்தில் புதினுக்கு எவ்வித முக்கியத்துவமும் கிடைத்துவிடக்கூடாது என்பதே எனது குறிக்கோள் என்றார்.

    2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நிலநடுக்கம் காரணமாக குயின்ஸ்லாந்தில் ரெயில் சேவையில் சிறிது பாதிப்பு ஏற்பட்டது.
    • மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

    ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தின் சன்ஷைன் கடற்கரை பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. நூநாவுக்கு மேற்கே 60 கிமீ தொலைவிலும், பிரிஸ்பேனுக்கு வடக்கே 250 கிமீ தொலைவிலும் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது ரிக்டர் அளவில் 4.9-ஆக பதிவானது.

    சுமார் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் இருந்து பிரிஸ்பேன் மற்றும் சன்ஷைன் கடற்கரையிலிருந்து கோல்ட் கடற்கரை வரை உணரப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கம் காரணமாக குயின்ஸ்லாந்தில் ரெயில் சேவையில் சிறிது பாதிப்பு ஏற்பட்டது. முர்கன் உள்பட சில பகுதிகளில், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

    • எங்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தை உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் என நம்புகிறேன்.
    • திரைமறைவில் இருந்து சூழ்ச்சிகளை ஏற்படுத்தும் செயலில் ஐரோப்பிய நாடுகள் ஈடுபடக் கூடாது.

    அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆங்கரேஜ் நகரில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் புதின் நேரில் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சந்திப்பில் உக்ரைன், ரஷியா இடையிலான போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்பும், ரஷிய அதிபர் புதினும் சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதன் பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ரஷிய அதிபர் புதின், எங்களுக்கு இடையே நடந்த போர் நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. நானும், டிரம்பும் வெளிப்படையாக பேசினோம். டிரம்ப் அதிபராக இருந்திருந்தால் போர் தொடங்கியிருக்காது என கூறியிருந்தார். அது உண்மைதான். டிரம்பிற்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எங்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தை உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் என நம்புகிறேன். உக்ரைனில் காணப்படும் சூழ்நிலை எங்களுடைய பாதுகாப்புக்கு அடிப்படையில் ஓர் அச்சுறுத்தலாக உள்ளது. திரை மறைவில் இருந்து சூழ்ச்சிகளை ஏற்படுத்தும் செயலில் ஐரோப்பிய நாடுகள் ஈடுபடக் கூடாது என்றார்.

    இதன்பிறகு அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட ரஷிய எண்ணெய் வாங்குபவர்கள் மீதான வரிகள் குறித்து பேசினார்.

    இந்த நாடுகள் மீதான வரிகள் குறித்து 2 முதல் 3 வாரங்களில் யோசிக்க வேண்டியிருக்கும், ஆனால் உடனடியாக அல்ல. ஒருவேளை இந்தியா மீது இரண்டாம் நிலை வரிகளை விதிக்க வேண்டியதில்லை என்று கூறினார்.

    • பேச்சுவார்த்தை உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் என நம்புகிறேன்.
    • நானும், டிரம்பும் வெளிப்படையாக பேசினோம் என்று புதின் கூறினார்.

    வாஷிங்டன்:

    உக்ரைன், ரஷியா இடையிலான போரானது மூன்று ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை அமெரிக்க அதிபர் மேற்கொண்டு வருகிறார்.

    இதையடுத்து, அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆங்கரேஜ் நகரில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் புதின் நேரில் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதற்கிடையே, அமெரிக்காவில் அலாஸ்காவின் ஆங்கரேஜ் பகுதிக்கு அதிபர் டிரம்பும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் வந்து சேர்ந்தனர். அங்கு அதிபர் புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷிய அதிபர் புதினை, டிரம்ப் கைகுலுக்கி வரவேற்றார். அதன்பின், இரு நாட்டு தலைவர்களும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.

    சுமார் 3 மணி நேரத்திற்கு பின்னர் இந்தப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. டிரம்ப் மற்றும் புதின் இடையேயான போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தை முடிந்தது.

    இந்நிலையில், இரு நாட்டு அதிபர்களும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அதிபர் புதின் கூறியதாவது:

    எங்களுக்கு இடையே நடந்த போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.

    நானும், டிரம்பும் வெளிப்படையாக பேசினோம். டிரம்ப் அதிபராக இருந்திருந்தால் போர் தொடங்கியிருக்காது என கூறியிருந்தார். அது உண்மைதான்.

    டிரம்பிற்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எங்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தை உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் என நம்புகிறேன்.

    உக்ரைனில் காணப்படும் சூழ்நிலை எங்களுடைய பாதுகாப்புக்கு அடிப்படையில் ஓர் அச்சுறுத்தலாக உள்ளது.

    அதேவேளை, நீண்டகால தீர்வை உருவாக்குவதற்காக, போருக்கான முதன்மை விளைவுகள் எல்லாவற்றையும் நாம் நீக்க வேண்டிய தேவை உள்ளது என எங்களிடம் கூறப்பட்டது.

    உக்ரைனின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என டிரம்ப் இன்று கூறியதற்கு உடன்படுகிறேன்.

    அமெரிக்கா மற்றும் ரஷியா இடையே நல்ல பொருளாதார உறவு உருவாகி உள்ளது என தெரிவித்தார்.

    அடுத்த சுற்று பேச்சுவார்த்தை மாஸ்கோவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

    • வறட்சியான காலநிலை காரணமாக அடிக்கடி காட்டுத்தீ ஏற்படுகிறது.
    • சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகி உள்ளன.

    மாட்ரிட்:

    காலநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வெப்பநிலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் வறட்சியான காலநிலை காரணமாக அடிக்கடி காட்டுத்தீ ஏற்படுகிறது.

    அதன்படி, ஸ்பெயினின் மேற்கு பிராந்தியமான கலீசியா, காஸ்டில் உள்ளிட்ட 14 இடங்களில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது.

    கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பரவும் இந்த காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 1½ லட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகி உள்ளன. எனவே ஹெலிகாப்டர் மூலம் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    • சாங்கி பண்டா பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
    • அங்கு ஹெலிகாப்டரில் அரசாங்கம் நிவாரண பொருட்களை அனுப்பியது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

    இந்நிலையில், சாங்கி பண்டா பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் அங்கு ஹெலிகாப்டரில் அரசாங்கம் நிவாரண பொருட்களை அனுப்பியது.

    ஹெலிகாப்டர் தரையிறங்கிய போது மோசமான வானிலை காரணமாக திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. உடனடியாக அந்தப் பகுதியைச் சேர்ந்த 3 பேர் விமானிகளைக் காப்பாற்றினர். அதற்குள் எதிர்பாரா விதமாக விமானம் வெடித்ததில் விமானிகள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

    ×