என் மலர்
தலைப்புச்செய்திகள்
- கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி பிரதமர் மோடி தனது 75வது பிறந்தநாளை கொண்டாடினார்.
- Ek Ped Maa Ke Naam' என்ற முன்முயற்சியின் கீழ் மன்னர் சார்லஸுக்கு "சோனோமா" மரக்கன்றை பரிசளித்திருந்தார்.
கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி பிரதமர் மோடி தனது 75வது பிறந்தநாளை கொண்டாடினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ், கடம்ப மரக்கன்றை பரிசாக அனுப்பி வைத்தார்.
கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடி பிரிட்டனுக்குச் சென்றபோது, 'Ek Ped Maa Ke Naam' என்ற முன்முயற்சியின் கீழ் மன்னர் சார்லஸுக்கு "சோனோமா" மரக்கன்றை பரிசளித்திருந்தார். இதற்கு பதிலாக கடம்ப மரக்கன்றை மன்னர் சார்லஸ் அனுப்பி வைத்ததாக பிரிட்டன் தூதரகம் தெரிவித்தது.
காலநிலை மற்றும் தூய்மையான எரிசக்தி ஒத்துழைப்பு என்பது காமன்வெல்த் மற்றும் பிரிட்டன்-இந்தியா கூட்டாண்மையின் முக்கிய தூண்களில் ஒன்றாகும் என்றும் பிரிட்டன் தூதரகம் கூறியது.
இந்நிலையில் நேற்று, அந்த மரக்கன்றை பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான, ' 7 லோக் கல்யாண் மார்க்கில்' மோடி நட்டு வைத்தார்.
இது தொடர்பாக வெளியாகி உள்ள 40 வினாடிகள் கொண்ட வீடியோவில் பிரதமர் மோடி மரக்கன்றை நட்டு, தண்ணீர் பாய்ச்சும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Ek Ped Maa Ke Naam "ஒரே மரம் தாயின் பெயரால்" என்ற முன்முயற்சியின் நோக்கம், ஒரு மரத்தை ஒருவரின் தாயின் பெயரால், அடையாளபூர்வமாக நடுவது ஆகும்.
- ஜி ஜின்பிங்கைச் சந்திக்க உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.
- அமெரிக்க பொருட்கள் மீதான வரியை 125 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக சீனா குறைத்தது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் நேற்று தொலைபேசியில் உரையாடினார்.
இந்த உரையாடலில் வர்த்தகம், ஃபென்டனில் போதைப்பொருள் விவகாரம், மற்றும் டிக்டாக் ஒப்பந்தம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாக டிரம்ப் கூறினார்.
அடுத்த மாதம் தென் கொரியாவில் நடைபெறவுள்ள ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டில் ஜி ஜின்பிங்கைச் சந்திக்க உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.
மேலும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில்தான் சீனாவுக்குச் செல்வதாகவும், தொடர்ந்து ஜி ஜின்பிங் அமெரிக்காவுக்கு வருகை தருவார் என்றும் அவர் தெரிவித்தார்.
டிக்டாக் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்ததற்காகவும் டிரம்ப் தனது நன்றி தெரிவித்தார்.
முன்னதாக, இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக மோதல் காரணமாக இருதரப்பும் பரஸ்பரம் வரிகளை அதிகரித்தன.
பேச்சுவார்த்தைக்கு பின் ஏற்பட்ட தற்காலிக ஒப்பந்தத்தின்படி, சீன பொருட்கள் மீதான வரியை 145 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அமெரிக்கா குறைத்தது. அதேபோல், அமெரிக்க பொருட்கள் மீதான வரியை 125 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக சீனா குறைத்தது. இந்த ஒப்பந்தம் நவம்பரில் முடிவடைகிறது.
- 4ஆவது ஓவரில் சஞ்சு சாம்சன் ஒரு சிக்ஸ் அடித்தார்.
- ஓமன் அணி சார்பில் ஷா பைசல், ஜிதேன் ராமநந்தி, ஆமிர் கலீம் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் பிரிவு கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா, ஓமனை எதிர்த்து விளையாடி வருகிறது.
டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் பும்ரா, வருண் சக்ரவர்த்தி இடம் பெறவில்லை. அபிஷேக் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
ஆட்டத்தின் 2ஆவது ஓவரில் சுப்மன் கில் க்ளின் போல்டானர். அவர் 5 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து சஞ்சு சாம்சன் களம் இறங்கினார்.
இந்த ஜோடி அபாரமான விளையாடியது. அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாட, சஞ்சு சாம்சன் நிதானமாக விளையாடினார். 3ஆவது ஓவரில் அபிஷேக் சர்மா 2 பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார். 4ஆவது ஓவரில் சஞ்சு சாம்சன் ஒரு சிக்ஸ் அடித்தார்.
5ஆவது ஓவரில் அபிஷேக் சர்மா 4 பவுண்டரிகள் விரட்டினார். அத்துடன் பவர்பிளேயின் கடைசி பந்தில் சிக்ஸ் அடிக்க இந்தியா 6 ஓவரில் 60 ரன்கள் குவித்தது.
8ஆவது ஓவரின் முதல் பந்தில் அபிஷேக் சர்மா 15 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 38 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா இதே ஓவரில் ரன்அவுட் ஆனார்.
4ஆவது விக்கெட்டுக்கு சஞச் சாம்சன் உடன் அக்சார் படேல் ஜோடி சேர்ந்தார். இவர் அதிரடியாக 13 பந்தில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதற்கிடையே இந்தியா 10 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.
ஷிவம் துபே (5) ரன்னில் வெளியேற சுஞ்சு சாம்சன் 41 பந்தில் அரைசதம் அடித்தார். இது அவருடைய மெதுவான டி20 அரைசதமாகும். தொடர்ந்து விளையாடிய அவர் 45 பந்தில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
திலக் வர்மா 29 ரன்கள் அடிக்க இந்தியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது. ஹர்ஷித் ராணா கடைசி பந்தில் சிக்ஸ் விளாசினார். அவர் 8 பந்தில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஓமன் அணி சார்பில் ஷா பைசல், ஜிதேன் ராமநந்தி, ஆமிர் கலீம் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
189 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஓமன் அணி, சிறப்பாக விளையாடியது. ஓமன் வீரர்கள் அமீர் கலீம் மற்றும் ஹம்மத் மிர்சா ஆகியோர் தலா அரைசதம் அடித்தனர்.
எனினும், இறுதிக்கட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டதால், ஓமன் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா குரூப் 'ஏ' பிரிவில் தனது போட்டிகளை வெற்றியுடன் முடித்துள்ளது.
காசாவில் போர் நிறுத்தம் கோரும் ஐ.நா. தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி மீண்டும் ஒருமுறை தோல்வி அடைய செய்துள்ளது.
இந்தத் தீர்மானத்திற்கு கவுன்சிலின் மற்ற 14 உறுப்பு நாடுகளும் ஆதரவு தெரிவித்திருந்தன.
தீர்மானத்தின்படி, காசாவில் உடனடி, நிபந்தனையற்ற மற்றும் நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் பிணைக்கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.
ஆனால், இதை அமெரிக்கா மீண்டும் நிராகரித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்திலும் அமெரிக்கா இதேபோல் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இஸ்ரேலுக்கு ஆதவராக முந்தைய தீர்மானத்தையும் தோல்வி அடைய செய்தது.
ஹமாஸின் தாக்குதல்களைக் கண்டிக்கவில்லை என்று கூறி அமெரிக்கா தீர்மானத்தை நிராகரித்தது.
காசாவில் இஸ்ரேலின் புதிய தரைவழித் தாக்குதல்கள் மற்றும் அங்கு நிலவும் பஞ்சம் உள்ளிட்ட நெருக்கடிகளுக்கு மத்தியில் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோ செய்ததற்கு பல்வேறு உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இதற்கிடையில், ஐ.நா.வுக்கான பாலஸ்தீன தூதர் ரியாத் மன்சூர், இந்தத் தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோ செய்தது வருத்தமளிக்கிறது என்று கூறினார். மேலும், பாலஸ்தீன மக்களை இனப்படுகொலையிலிருந்து பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
இந்த தீர்மானத்திற்கு எதிராக பேசிய இஸ்ரேல் தூதர், "இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானங்கள் பிணைக்கைதிகளை விடுவிக்கவோ அல்லது பிராந்தியத்திற்கு பாதுகாப்பைக் கொண்டுவரவோ உதவாது" என்று தெரிவித்தார்.
வரும் வாரத்தில் நடைபெறவுள்ள ஐ.நா. உச்சிமாநாட்டில் இந்த விவகாரம் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- 12-வது புரோ கபடி லீக் போட்டி தொடர் நடந்து வருகிறது.
- 12 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் 2-ம் கட்ட ஆட்டங்கள் ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது.
12-வது புரோ கபடி லீக் போட்டி தொடர் நடந்து வருகிறது. 12 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் 2-ம் கட்ட ஆட்டங்கள் ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது.
இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின.
ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே டைட்டன்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது. முதல் பாதி முடிவில் டைட்டன்ஸ் அணி 22-10 என வலுவான நிலையில் இருந்தது. இரண்டாவது பாதியிலும் டைட்டன்ஸ் அணியின் ஆதிக்கமே தொடர்ந்தது.
இறுதியில் 43-29 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
முன்னதாக நடப்பு தொடரில் தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிராக தொடங்கிய தமிழ் தலைவாஸ் அந்த அணியை 38-35 என்கிற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியது.
இந்நிலையில் தற்போதைய வெற்றியின் மூலம் தெலுங்கு டைட்டன்ஸ் அணி சீசனின் முதல் தோல்விக்கு பழிவாங்கியது.
- இன்று மாலை மும்பையில் இருந்து 176 பயணிகளுடன் தாய்லாந்துக்குக்கு விமானமானது புறப்பட்டது.
- சென்னை விமான நிலையத்தில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு மும்பை விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
மும்பை - தாய்லாந்து இடையே இயக்கப்படும் இண்டிகோ விமானம் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக சென்னையில் தரையிறங்கியது.
இன்று மாலை மும்பையில் இருந்து 176 பயணிகளுடன் தாய்லாந்துக்குக்கு விமானமானது பயணத்தை தொடங்கியது.
இதற்கிடையே மும்பை விமான நிலையத்திற்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து, விமானத்தின் கழிவறைக்குள் வெடிகுண்டு மறைத்து வைத்திருப்பதாகவும், நடுவானில் அது வெடித்துச் சிதற இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து உடனே சென்னை விமான நிலையத்தில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு மும்பை விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த விமானம் சென்னைக்கு திருப்பிவிடப்பட்டு இரவு 7.20 மணியளவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு விமானத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், விமானத்துக்குள் இதுவரையில் சந்தேகப்படும்படியான பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.
முழுமையான சோதனைக்கு பிறகு விமானம் சென்னையில் இருந்து தாய்லாந்து நாட்டுக்கு மீண்டும் புறப்பட்டு செல்லும் எனத் தெரிகிறது. மிரட்டல் விடுத்த மர்ம நபரை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
- சஞ்சு சாம்சன் அரைசதம் விளாசினார்.
- அபிஷேக் சர்மா 15 பந்தில் 38 ரன்கள் அடித்தார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் பிரிவு கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா, ஓமனை எதிர்த்து விளையாடி வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் பும்ரா, வருண் சக்ரவர்த்தி இடம் பெறவில்லை. அபிஷேக் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
ஆட்டத்தின் 2ஆவது ஓவரில் சுப்மன் கில் க்ளின் போல்டானர். அவர் 5 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து சஞ்சு சாம்சன் களம் இறங்கினார்.
இந்த ஜோடி அபாரமான விளையாடியது. அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாட, சஞ்சு சாம்சன் நிதானமாக விளையாடினார். 3ஆவது ஓவரில் அபிஷேக் சர்மா 2 பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார். 4ஆவது ஓவரில் சஞ்சு சாம்சன் ஒரு சிக்ஸ் அடித்தார்.
5ஆவது ஓவரில் அபிஷேக் சர்மா 4 பவுண்டரிகள் விரட்டினார். அத்துடன் பவர்பிளேயின் கடைசி பந்தில் சிக்ஸ் அடிக்க இந்தியா 6 ஓவரில் 60 ரன்கள் குவித்தது.
8ஆவது ஓவரின் முதல் பந்தில் அபிஷேக் சர்மா 15 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 38 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா இதே ஓவரில் ரன்அவுட் ஆனார்.
4ஆவது விக்கெட்டுக்கு சஞச் சாம்சன் உடன் அக்சார் படேல் ஜோடி சேர்ந்தார். இவர் அதிரடியாக 13 பந்தில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதற்கிடையே இந்தியா 10 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.
ஷிவம் துபே (5) ரன்னில் வெளியேற சுஞ்சு சாம்சன் 41 பந்தில் அரைசதம் அடித்தார். இது அவருடைய மெதுவான டி20 அரைசதமாகும். தொடர்ந்து விளையாடிய அவர் 45 பந்தில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
திலக் வர்மா 29 ரன்கள் அடிக்க இந்தியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது. ஹர்ஷித் ராணா கடைசி பந்தில் சிக்ஸ் விளாசினார். அவர் 8 பந்தில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஓமன் அணி சார்பில் ஷா பைசல், ஜிதேன் ராமநந்தி, ஆமிர் கலீம் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த 'மான் கராத்தே' படத்தை இயக்கிய திருக்குமரன் அடுத்ததாக அருண் விஜய் -யின் 'ரெட்ட தல' படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் அருண் விஜயின் ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். இவர் இதற்கு முன் சிம்பு நடித்த 'வெந்து தணிந்தது காடு' படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் தன்யா ரவிச்சந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தின் இசையை சாம். சி.எஸ் மேற்கொள்கிறார். பிடிஜி யூனிவர்சல் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
இப்படத்தில் அருண் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார். படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது.
இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான கண்ணம்மா இன்று மாலை வெளியானது. இப்பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார்.
தனுஷின் இட்லி கடை படத்தில் அருண் விஜய் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ஊரும் பிளட் வீடியோவை படக்குழு கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இந்த பாடல் யூடியூபில் 15 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், ட்யூட் படத்தின் இரண்டாம் சிங்கிளான நல்லாரு போ பாடல் இன்று மாலை வெளியானது.
- 3ஆவது பந்தில் சுப்மன் கில் க்ளீன் போல்டானார்.
- சஞ்சு சாம்சன் அடுத்த 3 பந்தில் ரன் அடிக்கவில்லை.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் பிரிவு கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா, ஓமனை எதிர்த்து விளையாடி வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் பும்ரா, வருண் சக்ரவர்த்தி இடம் பெறவில்லை.
அபிஷேக் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரில் இந்தியா 6 ரன்கள் அடித்தது. 2ஆவது ஓவரை ஷா பைசல் வீசினார். இந்த ஓவரின் முதல் இரண்டு பந்தில் சுப்மன் கில் ரன் அடிக்கவில்லை. 3ஆவது பந்தில் க்ளீன் போல்டானார்.
அதனைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன் களம் இறங்கினார். இவர் அடுத்த 3 பந்தில் ரன்ஏதும் அடிக்கவில்ல. இதனால் பைசல் ஷா இந்த ஓவரை மெய்டனாக வீசினார்.
இதன்மூலம் ஐசிசி-யின் முழு உறுப்பினர் நாடு அல்லது, Associate நாட்டை வீரர் ஒருவர் இந்திய அணிக்கு எதிராக பவர்பிளேயில் மெய்டன் ஓவர் விசியவர் என்ற சாதனையை பைசல் ஷா படைத்துள்ளார்.
- நாகை, திருவாரூர் மாவட்டங்களில் விஜய் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.
- விஜய் வரும் வழியில் உள்ள உயர் மின் அழுத்தக் கம்பிகளில் மின்சாரத்தை நிறுத்த வேண்டும் என கோரிக்கை.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் கடந்த 13-ந் தேதி சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார்.
அந்த வகையில், நாளை (சனிக்கிழமை) நாகை, திருவாரூர் மாவட்டங்களில் விஜய் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.
இந்நிலையில், நாகையில் நாளை த.வெ.க. தலைவர் விஜய் பரப்புரைப் பயணம் செல்லும் வழியில் மின்சாரத்தை நிறுத்தம் செய்ய அக்கட்சியின் மாவட்டச் செயலாளர், மின் வாரியத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
விஜய் வரும் வழியில் உள்ள உயர் மின் அழுத்தக் கம்பிகளில் மின்சாரத்தை நிறுத்த வேண்டும் அல்லது, மின் ஊழியர்களை நியமித்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், நாகை மாவட்டத்தில் நாளை தவெக தலைவர் விஜய், பிரசாரம் மேற்கொள்ள செல்லும் பகுதிகள் மற்றும் உரையாற்றும் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
நாகூர், புத்தூர் பகுதியில் விஜய் செல்லும்போது மின் விநியோகம் இருக்காது என மின்துறை தெரிவித்துள்ளது.
- அக்டோபர் 5ம் தேதி கிருஷ்ணகிரியில் தொடங்கி 13ம் தேதி வரை பிரசாரம்.
- ஈரோடு வடக்கில் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற தலைப்பில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா மேற்கொள்ளும் 3ம் கட்ட பிரசார பயணப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அக்டோபர் 5ம் தேதி கிருஷ்ணகிரியில் தொடங்கி 13ம் தேதி கோவை வடக்கு வரை பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொள்கிறார்.
மேலும், 5ம் தேதி கிருஷ்ணகிரி, 6ம் தேதி தருமபுரி, 7ம் தேதி ஈரோடு நகரம், ஈரோடு வடக்கில் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
8ம் தேதி ஈரோடு தெற்கு, 9ம் தேதி திருப்பூர் நகரம், திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு பகுதிகளிலும், 10ம் தேதி திருப்பூர் வடக்கு, 11ம் தேதி கோவை நகர், கோவை தெற்கு, 12ம் தேதி நீலகிரி, கோவை வடக்கில் பிரசாரம் மேற்கொள்கிறார்.






