என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • அக்டோபர் 5ம் தேதி கிருஷ்ணகிரியில் தொடங்கி 13ம் தேதி வரை பிரசாரம்.
    • ஈரோடு வடக்கில் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற தலைப்பில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா மேற்கொள்ளும் 3ம் கட்ட பிரசார பயணப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    அக்டோபர் 5ம் தேதி கிருஷ்ணகிரியில் தொடங்கி 13ம் தேதி கோவை வடக்கு வரை பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    மேலும், 5ம் தேதி கிருஷ்ணகிரி, 6ம் தேதி தருமபுரி, 7ம் தேதி ஈரோடு நகரம், ஈரோடு வடக்கில் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    8ம் தேதி ஈரோடு தெற்கு, 9ம் தேதி திருப்பூர் நகரம், திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு பகுதிகளிலும், 10ம் தேதி திருப்பூர் வடக்கு, 11ம் தேதி கோவை நகர், கோவை தெற்கு, 12ம் தேதி நீலகிரி, கோவை வடக்கில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    • இஷான் கட்டர், விஷால் ஜெத்வா, ஜான்வி கபூர் ஆகியோர் முன்னணி காதாபாதிரத்தில் நடித்துள்ளனர்.
    • நீரஜ் கய்வான் இயக்கிய நிலையில், கரன் ஜோஹர் மற்றும் ஆதார் பூனவல்லா ஆகியோர் படத்தை தயாரித்திருந்தனர்.

    ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை குழு 2026 ஆஸ்காரின் சிறந்த சர்வதேச படம் விருதுக்கு ஹோம்பவுண்ட் (Homebound) படத்தை பரிந்துரை செய்துள்ளது.

    இது தொட்பாக கொல்கத்தாவில், தேர்வுக்குழு கமிட்டி என். சந்திரா பத்திரிகையாளர் சந்திப்பின்போது கூறியதாவது:-

    பல்வேறு மொழிகளின் 24 படங்கள், பரிந்துரைக்கு பரிசீலிக்கப்பட்டன. இது மிகவும் கடினமான தேர்வு. இந்த படங்கள் மக்களின் வாழ்க்கையை தொட்டவை. நாங்கள் தேர்வாளர்கள் கிடையாது. பயிற்சியாளர்கள். முத்திரை பதிக்கும் வீரர்கள் நாங்கள் தேடுகிறோம்.

    இவ்வாறு என். சந்திரா தெரிவித்தார்.

    தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், எழுத்தாளர்கள், எடிட்டர்கள், பத்திரிகையாளர்கள் என 12 பேர் கொண்ட குழு ஹோம்பவுண்ட் படத்தை துர்வு செய்துள்ளது.

    இப்படத்தில் இஷான் கட்டர், விஷால் ஜெத்வா, ஜான்வி கபூர் ஆகியோர் முன்னணி காதாபாதிரத்தில் நடித்துள்ளனர். நீரஜ் கய்வான் இயக்கிய நிலையில், கரன் ஜோஹர் மற்றும் ஆதார் பூனவல்லா ஆகியோர் படத்தை தயாரித்திருந்தனர்.

    வட இந்தியாவின் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பால்ய நண்பர்கள், காவல்துறை அதிகாரிகளாக வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். அந்த வேலை தங்களுக்கு ஒருபோதும் கிடைக்காத மரியாதையைக் கொண்டு வரும் என்று நம்புகிறார்கள். இருப்பினும், அவர்கள் தங்கள் இலக்கை நெருங்கும்போது, அழுத்தமும் போராட்டங்களும் அவர்களின் நட்பில் சிக்கல்களை உருவாக்குகின்றன. இதுதான் படத்தின் கதைக்களம் ஆகும்.

    படையாண்ட மாவீரன் படம் மறைந்த 'காடுவெட்டி' குருவின் சுயசரிதையை தழுவி தயாராகி இருக்கிறது.

    வ. கௌதமன் இயக்கி நடித்திருக்கும் படம் 'படையாண்ட மாவீரா'. திரைப்படத்தில் வ. கௌதமன், சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

    கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் மற்றும் சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார்கள்.

    வட தமிழகத்தில் பெரும்பான்மையாக வாழும் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வாழ்ந்து மறைந்த 'காடுவெட்டி' குருவின் சுயசரிதையை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வி கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    படையாண்ட மாவீரன் படம் இன்று வெளியான நிலையில், படையாண்ட மாவீரா படத்தில் சந்தனக்கடத்தல் வீரப்பனின் தனித்துவமான தோற்றத்தை பயன்படுத்த தடை கோரி அவரது மனைவி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    வீரப்பனின் தனித்துவமான அடையாளங்கள், தொற்றத்தை அனுமதி பெறாமல் படத்தில் பயன்படுத்தி உள்ளதாக வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி குற்றம்சாட்டியுள்ளார்.

    இதனால், வீரப்பனின் தனித்துவ அடையாளங்களை சினிமா, விளம்பரங்களில் பயன்படுத்த தடை விதிக்க மனைவி முத்துலட்சுமி கோரிக்கை வைத்துள்ளார்.

    இந்த மனு மீதான விசாரணையின் போது, வி.கே.புரடக்சன்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் செப்டம்பர் 26ம் தேதிக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • நாகை, திருவாரூர் மாவட்டங்களில் விஜய் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.
    • வடசென்னை மற்றும் திருவள்ளூரில் பிரசாரம் செய்ய விஜய் திட்டமிட்டிருந்தார்.

    தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் கடந்த 13-ந் தேதி சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார்.

    அந்த வகையில், நாளை (சனிக்கிழமை) நாகை, திருவாரூர் மாவட்டங்களில் விஜய் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.

    இந்நிலையில், தவெக பிரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, டிசம்பர் மாதம் 13ம் தேதியில் சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் தவெக பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தது.

    மேலும், வரும் 27ம் தேதி வடசென்னை மற்றும் திருவள்ளூரில் பிரசாரம் செய்ய விஜய் திட்டமிட்டிருந்தார்.

    இந்நிலையில், வரும் 27ம் தேதி அன்று சேலம் மற்றும் நாமக்கல்லில் பிரசாரம செய்ய உள்ளதாக விஜய் அறிவித்துள்ளார்.

    • பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
    • அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி தனது குரூப் கடைசி லீக் போட்டியில் இன்று ஓமனை எதிர்த்து விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

    இந்திய அணியில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. ஹர்ஷித் ராணா இடம் பிடித்துள்ளார்.

    இந்திய அணி விவரம்:-

    1. அபிஷேக் சர்மா, 2. சுப்மன் கில், 3. சூர்யகுமார் யாதவ், 4. ஹர்திக் பாண்ட்யா, 5. சஞ்சு சாம்சன், 6. அக்சர் படேல், 7. ஹர்ஷித் ராணா, 8. குல்தீப் யாதவ், 9 திலக் வர்மா, 10. ஷிவம் துவே, 11 அர்ஷ்தீப் சிங்,

    • இம்பாலில் இருந்து பிஷ்னுபூர் மாவட்டத்திற்கு வாகனத்தில் செல்லும்போது தாக்குதல்.
    • காயம் அடைந்த மூன்று வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மணிப்பூரில் ஆயுதமேந்திய குழு அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் சென்ற வாகனம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒரு வீரர் உயிரிழந்த நிலையில், 3 பேர் காயம் அடைந்தனர்.

    வீரர்கள் இம்பாலில் இருநது பிஷ்னுபூர் மாவட்டத்திற்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆயுதமேந்திய ஒரு கும்பல் திடீரென வானத்தின் மீது தாக்கதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் மாலை 6 மணிக்கு நம்போல் சபால் லெய்கை என்ற இடத்தில் நடந்துள்ளது. இதில் வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். காயம் அடைந்த வீரர்கள் போலீஸ் மற்றும் பொதுமக்கள் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மணிப்பூரில் இரண்டு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட சண்டை, வன்முறையாக வெடித்தது. இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் மணிப்பூரில் இன்னும் முழுமையாக அமைதி திரும்பவில்லை. மணிப்பூர் கலவரத்திற்குப் பிறகு கடந்த வாரம் முதன்முறையாக பிரதமர் மோடி, அம்மாநிலத்திற்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மணிப்பூரில் தற்போது ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    • ரோபோ சங்கரின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.
    • ரோபோ சங்கர் உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

    நடிகர் ரோபோ சங்கர் (46) உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார்.

    ரோபோ சங்கரின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகரும் எம்பியுமான கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    மேலும் ரோபோ சங்கரின் மறைவு செய்தி அறிந்து அவரது உடலுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    ரோபோ சங்கரின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

    இவரது உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

    இதற்கிடையே, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய இயக்குனர் செல்லா அய்யாவு இரங்கல் தெரிவித்தார்.

    அப்போது அவர் கூறுகையில்," ஆறு மணி காமெடி ஹிட்டாக முக்கிய காரணம் ரோபோ சங்கர்தான்.. அது எடுக்கும்போது எங்களுக்கு தெரியாது இவ்வளவு பெரிய ஹிட்டாகும் என்று.

    நாள் முழுக்க ஒரே டோனில், ஒரே மீட்டரில் அட்சரம் பிசகாமல் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்.

    ரியாக்சன் மாறாமல் ஸ்பாட்டிலேயே எல்லோரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார். அதுதான் தியேட்டரிலும் எதிரொளித்தது. ரசிகர்களின் சிரிப்பினில் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். கண்ணீர் அஞ்சலி அண்ணா" என்றார்.

    இயக்குனர்  செல்லா அய்யாவு தற்போது, கட்டாகுஸ்தி 2 படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷென்சென் நகரில் நடந்து வருகிறது.
    • இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, தென் கொரிய வீராங்கனை செ யங் ஆகியோர் மோதினர் .

    ஷென்சென்:

    சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷென்சென் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, தென் கொரிய வீராங்கனை செ யங் ஆகியோர் மோதினர் .

    இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய செ யங் 21-14 , 21-13 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதனால் பிவி சிந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'ஜன நாயகன்'

    எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'ஜன நாயகன்'.இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் எனவும் அதற்கு பின் முழுநேர அரசியலில் விஜய் ஈடுப்படபோவதாக கூறப்படுகிறது.

    மேலும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இந்நிலையில் இயக்குநர் எச்.வினோத் சமீபத்தில் கலந்துக் கொண்ட விழாவில் படத்தை பற்றி சில சுவாரசிய விஷயங்களை பகிர்ந்துள்ளார் அதில் "நடிகர் விஜய்-க்கு PAKKA FAREWELL படமாக 'ஜனநாயகன்' இருக்கும்.. மாஸ், கமர்ஷியல், ஆக்ஷனை எதிர்பார்த்து வாங்க.. ரசிகர்களுக்கு COMPLETE MEALS-ஆக படம் ஜன நாயகன் இருக்கும்" என கூறியுள்ளார். இது ரசிகர்களுக்கு மிகவும் உற்சாகமளித்துள்ளது.

    • 1,600 கோடி ரூபாய்க்கு என்ன நடக்கும்? 1,600 கோடி ரூபாய்க்கு என்ன செய்வது?
    • அவர்கள் கேலி செய்கிறார்களா?. தொடக்க இழப்பு 13,800 ரூபாய். 1600 கோடி ரூபாய் என்பது கடலின் ஒரு துளிதான்.

    பருவமழை இந்தியாவின் வடக்கு மாநிலங்களான ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவில் பெய்து வருகிறது. ஓரிரு இடங்களில் மேகவெடிப்பு காரணமாக கனமழை கொட்டித் தீ்ர்த்தது. கனமழை காரணமாக பஞ்சாப் மாநிலம் வெள்ளத்தில் தத்தளித்தது.

    மழை வெள்ளத்தால் பஞ்சாப் மாநிலத்தில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. மாநில அரசு முதற்கட்டமாக 13,800 கோடி ரூபாய் அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது என மதிப்பிட்டுள்ளது. ஆனால், பிரதமர் மோடி 1600 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். 12 ஆயிரம் கோடி ரூபாயை SDRF கணக்கில் இருந்து எடுத்து பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மத்திய அரசின் நிதியுதவி குறித்து பஞ்சாப் மாநில முதல்வர் பகவத் மான் சிங்கிடம் என்.டி. டிவி கேள்வி எழுப்பியது.

    அதற்கு பகவத் மான் சிங் பதில் அளித்து கூறியதாவது:-

    1,600 கோடி ரூபாய்க்கு என்ன நடக்கும்? 1,600 கோடி ரூபாய்க்கு என்ன செய்வது? அவர்கள் கேலி செய்கிறார்களா?. தொடக்க இழப்பு 13,800 ரூபாய். 1600 கோடி ரூபாய் என்பது கடலின் ஒரு துளிதான்.

    பஞ்சாப் மாநிலம RDF-யை பயன்படுத்தி வந்தது. விவசாய பொருட்கள் விற்பனை, கொள்முதலுக்கு 3 சதவீதம் வரி விதிக்கப்பட்டு, அவை சாலைகள், மண்டிகள் அல்லது விவசாயிகள் மொத்த விற்பனை சந்தைகளை பராமரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த ஆர்டிஎஃப் எந்தவித காரணமும் இன்றி நிறுத்தப்பட்டது. பாஜக அல்லாத அரசாங்க மாநிலத்தில் வழக்கமாக இது நடக்கும்.

    SDRF கணக்கு 2010/11-ல் உருவாக்கப்பட்டது. அப்போது பஞ்சாப் மாநிலம் 84 கோடி ரூபாய் பெற்றது. ஆனால், 184 ரூபாய் செலவு செய்யப்பட்டது. 2011/12-ல் 171 கோடி ரூபாய் பெறப்பட்டது. 159 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது. அதேபோல் 2012/13 மத்திய அரசு 272 கோடி ரூபாய் அனுப்பியது. 10 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது. 2013/14-ல் 194 கோடி ரூபாய் பெற்ற நிலையில், 236 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது.

    மொத்தமாக பஞ்சாப் மாநிலம் 5012 ரூபாய் பெற்றுள்ளது. அதிலிருந்து எஸ்டிஆர்எஃப் 3820 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. இதில் சட்டவிரோதம் அல்லது மறைக்க ஒன்றுமில்லை. அதில் 1200 கோடி ரூபாய் மட்டுமே உள்ளது. இந்த ரூ.12,000 கோடி எங்கிருந்து வந்தது? பாஜக உண்மையான தொகையுடன் ஒரு பூஜ்ஜியத்தைச் சேர்த்தது.

    இவ்வாறு பகவத் மான் சிங் தெரிவித்துள்ளார்.

    • தமிழ் தலைவாஸ்- தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் இன்று மோதுகிறது.
    • தமிழ் தலைவாஸ் அணி 5 ஆட்டத்தில் 3 வெற்றி, 2 தோல்வி பெற்று 6 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது.

    12-வது புரோ கபடி லீக் போட்டி தொடர் நடந்து வருகிறது. 12 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் 2-ம் கட்ட ஆட்டங்கள் ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் புனேரி பால்டன்-அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதுகின்றன. புனேரி பால்டன் 8 ஆட்டத்தில் 6 வெற்றி, 2 தோல்வி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. அரியானா அணி 6 ஆட்டத்தில் 4 வெற்றி, 2 தோல்வி பெற்றுள்ளது.

    இரவு 9 மணிக்கு நடக்கும் போட்டியில் தமிழ் தலைவாஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. தமிழ் தலைவாஸ் அணி 5 ஆட்டத்தில் 3 வெற்றி, 2 தோல்வி பெற்று 6 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. தெலுங்கு டைட்டன்ஸ் அணி 8 ஆட்டத்தில் 3 வெற்றி, 5 தோல்வியை சந்தித்துள்ளது.

    இந்நிலையில் தமிழ் தலைவாஸ் அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் அருள்நந்தா பாபு இணைந்துள்ளார். இவர் தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரோபோ சங்கரின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.
    • திரைத்துறையினரின் படை சூழ, கண்ணீர் மல்க ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது.

    நடிகர் ரோபோ சங்கர் (46) உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார்.

    ரோபோ சங்கரின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகரும் எம்பியுமான கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    மேலும் ரோபோ சங்கரின் மறைவு செய்தி அறிந்து அவரது உடலுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    ரோபோ சங்கரின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

    பின்னர், பிற்பகல் 3 மணியளவில் சென்னை வளசரவாக்கம் இல்லத்தில் இருந்து நடிகர் ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.

    திரைத்துறையினரின் படை சூழ, கண்ணீர் மல்க ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது.

    ரோபோ சங்கரின் உடலுக்கு வளசரவாக்கம் மின்மயானத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து, ரோபோ சங்கரின் உடல் வளசரவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

    இதற்கிடையே, ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தின்போது அவரது மனைவி பிரியங்கா சங்கர் நடனமாடினார். தனது துக்கத்தை நடனம் மூலம் அவர் வெளிப்படுத்திய காட்சி காண்பர்களை கண்கலங்க வைத்தது.

    ×