என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    முடிஞ்சா அடிச்சுபாரு..! பவர்பிளேயில் மெய்டன் ஓவர் வீசிய ஓமன் பந்து வீச்சாளர்
    X

    முடிஞ்சா அடிச்சுபாரு..! பவர்பிளேயில் மெய்டன் ஓவர் வீசிய ஓமன் பந்து வீச்சாளர்

    • 3ஆவது பந்தில் சுப்மன் கில் க்ளீன் போல்டானார்.
    • சஞ்சு சாம்சன் அடுத்த 3 பந்தில் ரன் அடிக்கவில்லை.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் பிரிவு கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா, ஓமனை எதிர்த்து விளையாடி வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் பும்ரா, வருண் சக்ரவர்த்தி இடம் பெறவில்லை.

    அபிஷேக் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரில் இந்தியா 6 ரன்கள் அடித்தது. 2ஆவது ஓவரை ஷா பைசல் வீசினார். இந்த ஓவரின் முதல் இரண்டு பந்தில் சுப்மன் கில் ரன் அடிக்கவில்லை. 3ஆவது பந்தில் க்ளீன் போல்டானார்.

    அதனைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன் களம் இறங்கினார். இவர் அடுத்த 3 பந்தில் ரன்ஏதும் அடிக்கவில்ல. இதனால் பைசல் ஷா இந்த ஓவரை மெய்டனாக வீசினார்.

    இதன்மூலம் ஐசிசி-யின் முழு உறுப்பினர் நாடு அல்லது, Associate நாட்டை வீரர் ஒருவர் இந்திய அணிக்கு எதிராக பவர்பிளேயில் மெய்டன் ஓவர் விசியவர் என்ற சாதனையை பைசல் ஷா படைத்துள்ளார்.

    Next Story
    ×