என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    DUDE படத்தின் செகண்ட் சிங்கிள் நல்லாயிரு போ வெளியானது
    X

    DUDE படத்தின் செகண்ட் சிங்கிள் "நல்லாயிரு போ" வெளியானது

    கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார்.

    இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ஊரும் பிளட் வீடியோவை படக்குழு கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இந்த பாடல் யூடியூபில் 15 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

    இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    இந்நிலையில், ட்யூட் படத்தின் இரண்டாம் சிங்கிளான நல்லாரு போ பாடல் இன்று மாலை வெளியானது.

    Next Story
    ×