என் மலர்
தலைப்புச்செய்திகள்
- விஜயின் பிரசார கூட்டத்திற்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
- கூடும் கூட்டம் வாக்காக மாறாது என அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் தாடி பாலாஜி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள குமார சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-
த.வெ.க. தலைவரும், நண்பருமான விஜயின் சுற்றுப் பயணம் வெற்றியடைய சாமி தரிசனம் செய்தேன். மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு. வரும் கூட்டம் வாக்காக மாறும். நிச்சயமாக மாறும்.
இவ்வாறு தாடி பாலாஜி தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். சனிக்கிழமை தோறும் இரண்டு மாவட்டங்களில் முக்கிய இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். அவரது பிரசார கூட்டத்திற்கு மக்கள் அதிக அளவு திரண்டு வருகிறார்கள்.
இது மற்ற கட்சிகளுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இருந்தபோதிலும், பிரசாரத்திற்கு கூடும் கூட்டம் வாக்காக மாறாது எனத் தெரிவித்து வருகின்றனர்.
இது சும்மா கூட்டம், இந்த கூட்டம் வாக்காக மாறாதமே எனக் கூறுகிறார்கள். இது உண்மையா? என திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தின்போது தொண்டர்களை நோக்கி கேள்வி எழுப்பினார். அதற்கு தொண்டர்கள் உண்மையில்லை. வாக்காக மாறும் என குரல் எழுப்பினர்.
- இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன.
- இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளது.
அபுதாபி:
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (டி20) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.
லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன.
இந்நிலையில், இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு ஆட்டம் தொடங்கும் நிலையில், 7.30 மணியளவில் டாஸ் போடப்பட்டது. இதில், இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளது.
இதையடுத்து, பாகிஸ்தான் அணி பந்து வீச, இலங்கை பேட் செய்ய களமிறங்குகிறது.
- பாராசிட்டமால் மாத்திரையை எடுக்காதீர்கள். எவ்வளவு முடியுமோ தவிர்க்க வேண்டும்.
- மிகுந்த அவசரம் என்றால்தான் எடுத்துக் கொள்ளலாம்.
பாராசிட்டமால் மாத்திரையை எடுக்காதீர்கள். எவ்வளவு முடியுமோ தவிர்க்க வேண்டும். மிகுந்த அவசரம் என்றால்தான் எடுத்துக் கொள்ளலாம். கர்ப்பிணிகள் பாராசிட்டமால் எடுத்துக் கொண்டால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் அல்லது அதிக கவன சிதறல் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அவரது குற்றச்சாட்டை உலக சுகாதார மையம் மறுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள விளக்க அறிக்கயைில் "அமெரிக்க அதிபர் டிரம்பின் கூற்றில் எந்த உண்மையும் இல்லை" எனத் தெரிவித்துள்ளது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு பாதுகாப்பான சில மருந்துகளில் பாராசிட்டமால் முக்கியமானது. காய்ச்சல் மற்றும் வலி குறைக்க இது அவசியம். உலகளவில் கர்ப்பிணிப் பெண்களில் சுமார் 50% பேர் பாராசிட்டமால் பயன்படுத்துவதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. பல நாடுகளில் இது பல பெயர்களில் விற்பனை செய்யப்படுகிறது.
காய்ச்சல் கர்ப்பிணி பெண்களுக்கும், கருவில் வளரும் குழந்தைக்கும் ஆபத்தானதாக இருக்கக்கூடும். அதனால், டாக்டர்கள் பாராசிட்டமாலை பாதுகாப்பான தேர்வாகக் கருதுகின்றனர்.
- இந்த பாடலின் வரிகளை மாரி செல்வராஜ் எழுதியுள்ளார்.
- விஜய் யேசுதாஸ் மற்றும் சின்மயி ஸ்ரீபதா இந்த பாடலை பாடியுள்ளனர்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் பைசன். இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
பைசன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17-ம் தேதி வெளியாக இருக்கிறது.
இப்படத்தின் முதல் சிங்கிளான தீக்கொளுத்தி பாடலை படக்குழு அண்மையில் வெளியிட்டது. இப்பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து பைசன் படத்தின் 2-வது பாடலான றெக்க றெக்க பாடலும் சமீபத்தில் வெளியாகியது. இந்த பாடலை வேடன் மற்றும் அறிவு பாடினர். இதனால் பெரிய அளவில் இந்த பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்த படத்தின் 3-வது பாடலான சீனிக்கல்லு, பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலின் வரிகளை மாரி செல்வராஜ் எழுதியுள்ளார். விஜய் யேசுதாஸ் மற்றும் சின்மயி ஸ்ரீபதா இந்த பாடலை பாடியுள்ளனர்.
- டிரம்பின் அமெரிக்க குடியரசு கட்சி பிரமுகர் அனுமன் குறித்து வெளியிட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது.
- அமெரிக்காவை சேர்ந்த ஹிந்து அமைப்பினர் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நியூயார்க்:
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், சுகர்லேண்ட் நகரில் அமைந்துள்ள அஷ்டலட்சுமி கோவிலில் 90 அடி உயர அனுமன் சிலை அமைந்துள்ளது. கடந்தாண்டு திறக்கப்பட்ட இந்தச் சிலை வட அமெரிக்காவின் மிக உயரமான கடவுள் சிலைகளில் ஒன்று என்றும், அமெரிக்காவின் ஒற்றுமை சிலை என்றும், நாட்டின் 3வது உயரமான சிலை என்றும் போற்றப்படுகிறது.
இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியரசு கட்சியைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர் டங்கன். இவர் டெக்சாஸ் மாகாண குடியரசு கட்சி தலைவராக இருந்து வருகிறார்.
அலெக்சாண்டர் டங்கன் எக்ஸ் வலைதளத்தில் கடவுள் அனுமன் பற்றி ஒரு சர்ச்சை பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,
டெக்சாஸில் ஒரு பொய்யான இந்து கடவுள் சிலையை ஏன் அனுமதிக்கிறோம். இது ஒரு கிறிஸ்தவ நாடு என பதிவிட்ட அவர், பைபிளில் இடம்பெற்றுள்ள சில வாசகங்களையும் அதில் சுட்டிக்காட்டி இருக்கிறார். மேலும் அவர், அஷ்டலட்சுமி கோவிலில் உள்ள அனுமன் சிலை வீடியோவையும் அந்தப் பதிவில் இணைத்துள்ளார்.
இந்நிலையில், அலெக்சாண்டர் டங்கனின் கருத்துக்கு அமெரிக்க இந்து பவுண்டேஷன் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக புகார் ஒன்றை டெக்சாஸில் உள்ள குடியரசு கட்சி அலுவலகத்துக்கு எக்ஸ் வலைதள பதிவு மூலம் அனுப்பியுள்ளது.
- வருமானத்தை மறைத்ததாக ரூ. 1.50 கோடி அபராதம் செலுத்தும்படி வருமான வரிததுறை உத்தரவு.
- 2019-ல் பிறப்பிக்க வேண்டிய உத்தரவை 2022-ல் பிறப்பித்துள்ளதால் ரத்து செய்ய வேண்டும் என வழக்கு.
வருமானத்தை மறைத்ததாக ரூ. 1.50 கோடி அபராதம் செலுத்தும்படி வருமான வரிததுறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து விஜய் வழக்கு தொடர்ந்துள்ளார்.
2019-ல் பிறப்பிக்க வேண்டிய உத்தரவை 2022-ல் பிறப்பித்துள்ளதால் ரத்து செய்ய வேண்டும் என விஜய் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
வருமான வரிச் சட்டப்படி விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதால் அவரது வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதேபோன்ற வழக்கில் பிறப்பித்த உத்தரவு நகலை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
- மத்திய பிரதேச மாநிலத்தில் பாம்புடன் ஒருவர் ரெயிலில் ஏறியுள்ளார்.
- திடீரென பாம்பை காட்டி பணம் வசூலிக்க தொடங்கியதால், பயணிகள பயத்தில் உறைந்தனர்.
அகமதாபாத் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் மத்திய பிரதேச மாநிலம் வழியாக வந்துள்ளது. அப்போது மங்காலி (Mungaoli) என்ற ரெயில் நிலையத்தில் ஒருவர் ஏறியுள்ளார். ரெயில் புறப்பட்டதும், அவர் திடீரென மறைத்து வைத்திருந்த பாம்பை வெளியே எடுத்துள்ளார். இதனால் பயணிகள் பயத்தில் உறைந்துள்ளனர்.
பாம்பை காட்டி பயணிகளிடம் பணம் கேட்டுள்ளார். அவர்களும் பயந்துபோய், பணம் கொடுத்துள்ளனர். இதை ஒரு பயணி வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலான அதே நேரத்தில், பயணிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்த கொண்ட அந்த நபர் மீது ரெயில்வே கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வீடியோ எடுத்த நபர், ரெயில்வேக்கும் புகார் அளித்துள்ளார். அதற்கு ரெயில்சேவா எக்ஸ் பக்கத்தில், ஆர்.பி.எஃப்.-க்கு உத்தரவிட மேலும், விரிவான விவரங்களை பகிரவும் எனவும் பதில் அளித்துள்ளது. அத்துடன் "உங்களுடைய பயண விவரங்கள் (PNR/ UTS no.) மற்றும் செல்போன் நம்பர் எங்களுக்கு தேவைப்படும். DM வழியாக முன்னுரிமை அளிக்கப்படும். உங்களுடைய புகாரை http://railmadad.indianrailways.gov.in இதன் மூலம் அனுப்பலாம் அல்லது விரைவாக தீர்வு பெற 139 நம்பருக்கு டயல் செய்யலாம்" எனத் தெரிவித்துள்ளது.
- காவல் ஆய்வாளர் வனராஜ் மஞ்சாரியாவை 5 நாட்களுக்கு முன்பு அவரது வளர்ப்பு நாய் கீறியுள்ளது.
- வனராஜ் மஞ்சாரியா தனது வளர்ப்பு நாய்க்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியிருந்தார்.
நாடு முழுவதும் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து ரேபிஸ் தாக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், குஜராத்தில் வளர்ப்பு நாயின் நகம் கீறியதால் காவல் ஆய்வாளர் ஒருவர் ரேபிஸ் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல் ஆய்வாளர் வனராஜ் மஞ்சாரியாவை 5 நாட்களுக்கு முன்பு அவரது வளர்ப்பு நாய் கீறியுள்ளது. ஆனால் நாய்க்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியிருந்ததுடன், வெறும் நகக் கீறல்தானே என்று அவர் அலட்சியமாக இருந்துள்ளார். இதன் காரணமாக ரேபிஸ் நோய் பாதித்து அவர் உயிரிழந்துள்ளார்.
- எம்.எஸ்.பாஸ்கர் சிறந்த துணை நடிகருக்கான விருதைப் பெற்றார்.
- சிறந்த துணை நடிகை விருதைப் பெற்றார் நடிகை ஊர்வசி.
புதுடெல்லி:
இந்தியாவில் சிறந்த திரைப்பட இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை போன்ற பல துறைகளுக்கும் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன.
2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று மாலை 4 மணிக்கு தலைநகர் டெல்லியில் நடைபெற்றது.
விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
இந்நிலையில், பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது பெற்றார். முன்னதாக, மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் மோகன்லாலுடன் சிறிது நேரம் உரையாடினார்.
- ஷாருக்கான் தன் திரைப்பயணத்தை 1992 ஆம் ஆண்டு தீவானா என்ற படத்தின் மூலம் தொடங்கினார்.
- 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஷாருக்கான் நடித்துள்ளார்.
71 வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் சிறந்த நடிகருக்கான விருதை ஷாருக்கான் மற்றும் விக்ராந்த் மெஸ்ஸி ஆகியோர் வென்றனர்.
விருது அறிவிக்கப்பட்டவர்களு இன்று ஜனாதிபதி மாளிகையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு விருதுகள் வழங்கி கவுரவித்தார். ஷாருக்கான் மற்றும் விக்ராந்த் மெஸ்ஸி ஆகியோர் ஜனாதிபதி கையில் விருதை பெற்றனர்.
ஷாருக்கான் தன் திரைப்பயணத்தை 1992 ஆம் ஆண்டு தீவானா என்ற திரைப்படத்தின் மூலம் தொடங்கினார். 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஷாருக்கான் நடித்து இருந்தாலும் ஜவான் திரைப்படமே இவருக்கு முதல் தேசிய விருதை கொடுத்துள்ளது.
- கிறிஸ்டோ டோமி இப்படத்தை இயக்கியிருந்தார்.
- சிறந்த மலையாள படத்திற்கான தேசிய விருதையும் உள்ளொழுக்கு படம் வென்றுள்ளது.
71ஆவது தேசிய விருதுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வரும் ஊர்வசிக்கு உள்ளொழுக்கு (மழையாளம்) படத்தில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியதற்கான சிறந்த துணை நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டது.
இன்று ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறார்.
நடிகை ஊர்வசி ஜனாதிபதியிடம் இருந்து தேசிய விருதை பெற்றுக்கொண்டார். உள்ளொழுக்கு படம் கடந்த ஆண்டு ஜூன் 21ஆம் தேதி ரிலீஸ் ஆனது. கிறிஸ்டோ டோமி இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் சிறந்த மலையாள படத்திற்கான தேசிய விருதையும் வென்றுள்ளது. இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிக்கைக்கான மலையாள சினிமா விருதையும் வென்றுள்ளார்.
ஊர்வசி ஏற்கனவே அசுவிண்டே அம்மா என்ற படத்திற்கான சிறந்த துணை நடிகை விருதை வென்றுள்ளார்.
நடிகை ராணி முகர்ஜி சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார்.
தமிழ் சினிமாவில் பார்க்கிங் பட தயாரிப்பாளர், இயக்குனர் (திரைக்கதை), எம்.எஸ். பாஸ்கர் (சிறந்த துணைநடிகர்), ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் விருது பெற்றனர்.
- ஐஎல்டி டி20 தொடரின் 4-வது சீசன் டிசம்பர் 2 முதல் ஜனவரி 4 வரை நடைபெறுகிறது.
- இந்த டி20 லீக்கை தொடர்ந்து அஸ்வின் BBL-க்கு செல்ல உள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின். இவர் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார். ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த கையோடு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.எல்.டி டி20 லீக் தொடருக்கான ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.
ஐஎல்டி டி20 தொடரின் 4-வது சீசன் டிசம்பர் 2 முதல் ஜனவரி 4 வரை நடைபெறும் நிலையில் இதன் ஏலம் அக்டோபர் 1-ந் தேதி துபாயில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் ரூ.1 கோடியை தனது அடிப்படை விலையாக அஸ்வின் நிர்ணயித்துள்ளார். இது எந்த வீரருக்கும் இல்லாத அதிகபட்ச விலையாகும்.
இந்த டி20 லீக்கை தொடர்ந்து அவர் BBL-க்கு செல்ல உள்ளார். அங்கு நான்கு அணிகள் அவரை தங்கள் அணிக்கு எடுக்க ஆர்வம் காட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.






