என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாடி பாலாஜி"

    • விஜய் இரண்டாம் கட்ட தலைவர்களை விசுவாசிகளாக நியமித்திருந்தால் கரூர் கோர சம்பவம் நடந்திருக்காது.
    • நேரத்தை முறையாக பின்பற்றி இருந்தால் இந்த கோர சம்பவம் நிகழ்ந்திருக்காது.

    கடந்த மாதம் 27-ந்தேதி த.வெ.க. பிரசாரகூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்பினர் விஜய் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழுவினர் விசாரித்து வருகின்றனர்.

    கரூர் கூட்ட நெரிசலுக்கு பின் த.வெ.க. தலைவர் விஜய், வீட்டை விட்டு வெளியே வராமல் உள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் வீடியோ கால் மூலம் பேசி ஆறுதல் கூறினார்.

    இதற்கிடையே, விஜயை சந்தித்தால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க கோரிக்கை வைப்பேன் என்று நடிகர் தாடி பாலாஜி கூறியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,

    * விஜய் இரண்டாம் கட்ட தலைவர்களை விசுவாசிகளாக நியமித்திருந்தால் கரூர் கோர சம்பவம் நடந்திருக்காது.

    * கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் தனித்துவிடப்பட்டுள்ளார்.

    * நேரத்தை முறையாக பின்பற்றி இருந்தால் இந்த கோர சம்பவம் நிகழ்ந்திருக்காது.

    * கூட்டணி தொடர்பாக என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கணும் என்றார். 

    • விஜயின் பிரசார கூட்டத்திற்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
    • கூடும் கூட்டம் வாக்காக மாறாது என அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    நடிகர் தாடி பாலாஜி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள குமார சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    த.வெ.க. தலைவரும், நண்பருமான விஜயின் சுற்றுப் பயணம் வெற்றியடைய சாமி தரிசனம் செய்தேன். மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு. வரும் கூட்டம் வாக்காக மாறும். நிச்சயமாக மாறும்.

    இவ்வாறு தாடி பாலாஜி தெரிவித்தார்.

    தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். சனிக்கிழமை தோறும் இரண்டு மாவட்டங்களில் முக்கிய இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். அவரது பிரசார கூட்டத்திற்கு மக்கள் அதிக அளவு திரண்டு வருகிறார்கள்.

    இது மற்ற கட்சிகளுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இருந்தபோதிலும், பிரசாரத்திற்கு கூடும் கூட்டம் வாக்காக மாறாது எனத் தெரிவித்து வருகின்றனர்.

    இது சும்மா கூட்டம், இந்த கூட்டம் வாக்காக மாறாதமே எனக் கூறுகிறார்கள். இது உண்மையா? என திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தின்போது தொண்டர்களை நோக்கி கேள்வி எழுப்பினார். அதற்கு தொண்டர்கள் உண்மையில்லை. வாக்காக மாறும் என குரல் எழுப்பினர்.

    • முதலமைச்சரை நாம் தான் பொறுப்பா பார்த்துக்க வேண்டிய கடமை எங்களை விட உங்களுக்கு அதிகமா இருக்கு
    • நான் சொல்றது இந்த கட்சிக்கு மட்டும் இல்லை எல்லா கட்சிக்கும் தான்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று லேசான தலைசுற்றல் ஏற்பட்டதை அடுத்து ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனைகளை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் ஓய்வெடுத்தால் போதும் என்று தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து நேற்று முழுவதும் ஆயிரம் விளக்கு அப்பல்லோவில் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று காலை 7 மணியளவில் அருகில் உள்ள தேனாம்பேட்டை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சில மருத்துவ பரிசோதனைகளை டாக்டர்கள் மேற்கொண்டனர்.

    இந்த நிலையில், கட்சி நிர்வாகிகளின் பேச்சால் முதலமைச்சருக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக நடிகர் தாடி பாலாஜி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,

    எல்லோருக்கும் வணக்கம். நேற்று கேள்விப்பட்ட ஒரு செய்தியால் மனது சரியில்லை. அது என்னவென்றால் நமது முதல்வர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று கேள்விப்பட்டதும் மனசே சரியில்லை. கூடிய விரைவில் அவர் குணமாகி வீட்டிற்கு வந்துவிடுவார். என்னுடைய பிரார்த்தனைகள் எப்போதும் இருக்கும். அதுபோல அண்ணியின் பிரார்த்தனை நமது முதலமைச்சரை குணப்படுத்தி வீட்டிற்கு கொண்டு சென்று விடும்.

    என்னதான் நாம் மருத்துவமனையில் இருந்தாலும், நமக்கு ட்ரீப்ஸ் ஏறினாலும், மருத்துவர் நம்மை பார்த்துக்கொண்டாலும், மாத்திரை எடுத்துக்கொண்டாலும் அதைவிட பூரணமாக குணம் அடைந்து வரவேண்டும் என்றால் அதற்கு ஒரு வழி இருக்கு. அது என்ன என்று கேட்டால்...

    முதலமைச்சர் ஒரு நிகழ்வில் பேசும்போது , காலையில் நான் கண்விழித்து எழுந்திருக்கும்போது நம்மவர்கள் யாராவது எதையாவது பண்ணிடக்கூடாது என்று எழுந்திருக்கிறேன் என்று சொன்னார். அப்போ அவருக்கு எவ்வளவு மனஉளைச்சல் இருக்கு பாருங்க. இதுல கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் எல்லோரும் செய்கின்ற செயல்கள், நீங்கள் பேசும் வார்த்தைகள் இதையெல்லாம் உங்களை பாதிக்கிறதோ இல்லையோ... தலைவரை போய் பாதிக்கும். முதலமைச்சரை பாதிக்கும். அதுக்காகத்தான் அவர் அந்த வார்த்தை சொல்கிறார். தயவு செய்து இனிமேல் நீங்கள் பேசும் பேச்சிலோ, செயலிலோ கொஞ்சம் பார்த்து நடந்துக்கொள்ளுங்கள். ஏன் இதை நான் சொல்கிறேன் என்றால்? நம்ம முதலமைச்சரை நாம் தான் பொறுப்பா பார்த்துக்க வேண்டிய கடமை எங்களை விட உங்களுக்கு அதிகமா இருக்கு. நான் சொல்றது இந்த கட்சிக்கு மட்டும் இல்லை எல்லா கட்சிக்கும் தான்.

    த.வெ.க.வில் இருந்து சமீபத்தில் விலகிய சகோதரி வைஷ்ணவி ஒரு புகார் கொடுத்துள்ளார். தலைவர் அறிக்கை விடுகிறார் என்பதை தாண்டி, ஒரு கட்சியில இருக்கோம், ஒரு புது கட்சி தொடங்கியிருக்கிறது, எந்தவித பாதிப்பும், அவமானமும் நம்ம கட்சிக்கும், தலைமைக்கும், தலைவருக்கும் வரக்கூடாது என்பது பொறுப்பில் இருப்பவர்களுக்கு ரொம்ப முக்கியது. அப்படிப்பட்டவர்கள் இதன் மீது கவனம் செலுத்தி முடிக்க பார்க்க வேண்டும் என்றார்.


    • நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம். சட்டத்தை மதிக்க வேண்டிய உங்க வீட்டுக்காரர் ஏன் மதிக்கவில்லை.
    • நான் மனது வருத்தப்படுவதுபோல் பேசி இருந்தால் மன்னித்து விடுங்கள்.

    நடிகர் தாடி பாலாஜி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

    தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

    இறந்துபோன, கொல்லப்பட்ட அஜித்குமார் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிறைய விஷயங்கள் செய்து கொடுத்து இருக்கிறார். அதற்காக நன்றி.

    மாநிலத்தில் ஒருத்தருக்கு இப்படி நடந்து இருப்பதை நினைத்து வருத்தப்படுவதாகவும், வேதனைப்படுவதாகவும், கண்டிக்கத்தக்கது என்று நீதிபதி கூறி உள்ளார்.

    அஜித்குமார் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட போலீசார்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். காவலர்கள் மனைவிகள் அழுவதை பார்த்தேன்.

    உங்க வீட்டுக்காரர்கள் அஜித்குமாரை அடித்ததுபோல் உங்களுடைய வீட்டுக்காரர்களையும் கோசாலையில் வைத்து பொதுமக்கள் அடித்து தண்டனை கொடுத்தால் ஒத்துக்கொள்வீர்களா?

    இது சட்டத்தில் கிடையாது. நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம். சட்டத்தை மதிக்க வேண்டிய உங்க வீட்டுக்காரர் ஏன் மதிக்கவில்லை. நீங்க சொன்னீர்கள் அவரா செய்யவில்லை. யாரோ ஒரு சார் சொல்லி தான் செய்தார்.

    ஏற்கனவே ஒரு சார் அவரே யார் அந்த சார்? என்று மக்களுக்கு தெரியவில்லை. இப்போது ஒரு சார். 3-வதாக ஒரு சார் வருவதற்கும் யார் அந்த சார்? என்று நீங்கள் சொல்லி விடுங்கள்.

    நான் மனது வருத்தப்படுவதுபோல் பேசி இருந்தால் மன்னித்து விடுங்கள். ஒரு வார்த்தை சொல்ல வேண்டும் என்றால் சாரி... சாரி... ஓகே.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போலீஸ்காரர்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள் சில மோசமானவர்களும் இருக்கிறார்கள்.
    • போலீசாரை நான் கேட்டுக்கொள்ளும் ஒரே விஷயம் கொஞ்சம் மனுஷங்களா நடந்துக்கோங்க... மிருகமா இருக்காதீங்க...

    சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் திருட்டு வழக்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் தாடி பாலாஜி கண்டன வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

    2 நாட்களாக மனசு ரொம்ப நெருடலா இருக்கு... ஒரு சம்பவத்தை பற்றி...

    கோவில் பாதுகாவலர் அஜித் குமார் எந்த தப்பும் செய்யவில்லை. தப்பு பண்ணியிருந்தால் நீங்கள் தண்டனை கொடுப்பது சரி.

    கோவிலுக்கு வருவதே நல்லாயிருக்கணும் என்று வேண்டிக்கொள்ள வருகிறார்கள். இவர்கள் காரில் வந்துவிட்டு பார்க் பண்ண தெரியலைன்னு அந்த தம்பி சொல்லுறாரு. அப்படி இருந்தும் நீங்க போய் சாமி கும்பிட்டுவிட்டு வாங்க.. நான் யாரையாவது வைத்து பார்க் செய்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

    கோவில் சென்று வந்தவர்கள் வண்டியில் இருந்த நகையை காணவில்லை என்று சொல்கிறார்கள்.

    உடனே ஏன் இவர் மேல் புகார் கொடுக்கிறார்கள்.

    நான் என்ன கேட்கிறேன் இவர் தப்பு செய்தாரா இல்லையா என்று தெரியாமல் ஒருத்தரை அடிப்பதற்கு காக்கி சட்டைக்கு என்ன ரைட்ஸ் இருக்கு...

    ஏற்கனவே சாத்தான்குளத்தில் தந்தை, மகனுக்கு நடந்தது பற்றி பதிவு செய்துள்ளேன்.

    போலீஸ்காரர்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள் சில மோசமானவர்களும் இருக்கிறார்கள்.

    ஏன்ப்பா... கஞ்சி போட்டு, சட்டையை அயர்ன் பண்ணா விரைப்பா தான் இருப்பியோ...

    அடிக்கும்போது அந்த வாலிபர் கத்தி உள்ளார். வலி இருக்காதா... சக மனுஷனை போட்டு அந்த அடி அடிக்குறீங்களே... நீங்கள் எல்லாம் மனுஷங்களா... காக்கி சட்டை போட்ட எமனுங்களா... அறிவு வேண்டாம்.

    அதாவது மீதி இருக்கும் நாட்களிலாவது அரசாங்கம் இதுபோன்ற விஷயங்களை strict பண்ணி, இந்த மாதிரி விஷயத்தை encourage பண்ணாம இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சரை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

    அந்த வாலிபருக்கு நடந்த சம்பவத்தால் மனசு ரொம்ப சங்கடமாக இருக்கிறது.

    போலீசாரை நான் கேட்டுக்கொள்ளும் ஒரே விஷயம் கொஞ்சம் மனுஷங்களா நடந்துக்கோங்க... மிருகமா இருக்காதீங்க... என்று தெரிவித்துள்ளார்.

    • நடிகர் தாடி பாலாஜியும் அவரது மனைவி நித்யாவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
    • இவர்களது விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது.

    திரைப்பட நடிகரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வருபவருமான தாடி பாலாஜியின் மனைவி நித்யா (35). இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் இவர்களின் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது.

    நித்யா தற்போது மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு சாஸ்திரி நகரில் தனது மகளுடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் மணி (வயது 62). இருவருக்கும் கார் நிறுத்துவது தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.

    மணியின் காரை கடந்த 10 நாட்களுக்கு முன்பு நித்யா சேதப்படுத்திள்ளார். இதனை மணி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் நித்யா சேதப்படுத்தியது உறுதியானது. இது குறித்து மணி கொடுத்த புகாரின் பேரில் மாதவரம் போலீசார் நேற்று நித்யா மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கிராமத்திற்கு சென்று மாணவர்களின் பெற்றோரிடம் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
    • யார் காலில் விழுந்தாவது உங்கள் பிள்ளைகளை காவல்துறை படிக்க வைக்கிறோம் என்றார்.

    திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த பென்னாலூர்பேட்டை அருகே உள்ள திடீர் நகர் என்ற பகுதியில் 50க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அங்குள்ள 11 மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், காவல் உதவி ஆய்வாளர் பரமசிவம் அந்த கிராமத்திற்கு சென்று மாணவர்களின் பெற்றோரிடம் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.

    'யார் காலில் விழுந்தாவது உங்கள் பிள்ளைகளை காவல்துறை படிக்க வைக்கிறோம். உங்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் 24 மணி நேரமும் காவல் நிலைய கதவு திறந்தே இருக்கும், எங்களை வந்து அணுகுங்கள். அரசின் சார்பில் மாணவர்களுக்கு வாரத்தில் அனைத்து நாட்களிலும் இலவச ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் வழங்கப்படுகிறது. கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகிறது' என கூறிய உதவி ஆய்வாளர் பரமசிவம், பெற்றோரிடம் மன்றாடி 11 மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப செய்துள்ளார்,

    மாணவர்களின் பெற்றோரிடம் உதவி ஆய்வாளர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பாராட்டுகளை அள்ளி வருகிறது. இதுதொடர்பான செய்தியை ஷேர் செய்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்திருந்தார்.

    அந்த வகையில், காமெடி நடிகர் தாடி பாலாஜி பாராட்டுகளை தெரிவித்து வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • மாதவரம் பொன்னியம்மன்மேடு வி.பி.சி. நகர் முதல் தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வன்.
    • இவர் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யாவிடம் ரூ.94 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார்.

    மாதவரம் பொன்னியம்மன்மேடு வி.பி.சி. நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் கலைச்செல்வன் (29). இவர் அதே பகுதியில் வசித்து வரும் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யாவிடம் ரூ.94 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். இதில் ரூ.52 ஆயிரத்தை திருப்பி கொடுத்த கலைச்செல்வன் மீதி பணத்தை கொடுக்கவில்லை என்று தெரிகிறது.

    இந்த நிலையில் பணம் தொடர்பாக நேற்று இரவு கலைச்செல்வனின் வீட்டிற்கு சென்று நித்யா கேட்டார். இதில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதாகவும் தெரிகிறது. இதுகுறித்து இருதரப்பினரும் மாதவரம் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் சிவகுமார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

    • தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் தாடி பாலாஜி.
    • இவர் சின்னத்திரைப் போல வெள்ளித்திரையிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

    பிளஸ்-2 தேர்வில் திண்டுக்கல் மாணவி நந்தினி 600-க்கு 600 மதிப்பெண் எடுத்து வரலாற்று சாதனை படைத்தார். இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இதையடுத்து தமிழ் பாடத்தில் முதலிடம் பிடித்த மாணவி லக்ஷயா ஸ்ரீயை நடிகர் தாடி பாலாஜி அரக்கோணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார்.


    தாடி பாலாஜி

    இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தாடி பாலாஜி கூறியதாவது, லக்ஷயா ஸ்ரீயை நேரில் சந்தித்து வாழ்த்துகிறேன் என்று கூறினேன். அதன்படி நேரில் சந்தித்து வாழ்த்திவிட்டேன். அவரது கல்விக்கான சிறிய உதவிகளை நான் செய்கிறேன் என்று கூறியுள்ளேன். தமிழக அரசும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷும் கல்வித்துறையில் மாணவ, மாணவிகளுக்காக பல நலத்திட்ட உதவிகளை கொண்டு வருகிறார்கள்.

    இந்த வாய்ப்பினை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். விரைவில் நான் அரசியலுக்கு வருவேன், வந்தால் நல்ல விஷயங்கள் பல செய்வேன். தனியாக கட்சி ஆரம்பிக்கும் ஆசை இல்லை. எனக்கான அங்கீகாரம் கிடைக்கும் இடத்தில் நான் வேலை செய்ய தயாராகவுள்ளேன் என்று கூறினார்.

    • அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
    • இவர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்புடன் 5 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அடையாறு பசுமை வழிச் சாலையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, பிஷப் கார்டன் பகுதியில் உள்ள அவரது சகோதரர் தங்கியிருந்த வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர்.


    செந்தில் பாலாஜி

    அதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதற்கிடையே அவர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.


    பிரார்த்தனை செய்த தாடி பாலாஜி

    இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி குணமடைய வேண்டும் என்று நடிகர் தாடி பாலாஜி திருவண்ணாமலையில் உள்ள மூக்குப்பொடி சித்தர் ஜீவ சமாதியில் வழிபாடு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது வருத்தத்தை அளிக்கிறது. எனக்கு அவர் சகோதரர் போன்றவர். அவருக்கு இந்த மாதிரியான சூழ்நிலை ஏற்பட்டது ஒரு மனிதனாக எனக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது. அவர் நிச்சயம் குணமடைந்து வருவார். அவர் விரைவில் குணமடைய வேண்டி மூக்குப்பொடி சித்தர் ஜீவ சமாதியில் பிரார்த்தனை செய்துள்ளேன்" என்று கூறினார்.

    ×