பணத்தகராறில் வாலிபருடன் மோதல்.. நடிகர் தாடி பாலாஜியின் மனைவி மீது போலீசில் புகார்

மாதவரம் பொன்னியம்மன்மேடு வி.பி.சி. நகர் முதல் தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வன்.இவர் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யாவிடம் ரூ.94 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார்.
தாடி பாலாஜி மனைவி நித்யா
தாடி பாலாஜி மனைவி நித்யா
Published on

மாதவரம் பொன்னியம்மன்மேடு வி.பி.சி. நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் கலைச்செல்வன் (29). இவர் அதே பகுதியில் வசித்து வரும் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யாவிடம் ரூ.94 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். இதில் ரூ.52 ஆயிரத்தை திருப்பி கொடுத்த கலைச்செல்வன் மீதி பணத்தை கொடுக்கவில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில் பணம் தொடர்பாக நேற்று இரவு கலைச்செல்வனின் வீட்டிற்கு சென்று நித்யா கேட்டார். இதில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதாகவும் தெரிகிறது. இதுகுறித்து இருதரப்பினரும் மாதவரம் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் சிவகுமார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com