என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
காக்கி சட்டை போட்ட எமனுங்களா.. லாக்அப் மரணம் குறித்து நடிகர் தாடி பாலாஜி விமர்சனம்
- போலீஸ்காரர்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள் சில மோசமானவர்களும் இருக்கிறார்கள்.
- போலீசாரை நான் கேட்டுக்கொள்ளும் ஒரே விஷயம் கொஞ்சம் மனுஷங்களா நடந்துக்கோங்க... மிருகமா இருக்காதீங்க...
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் திருட்டு வழக்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் தாடி பாலாஜி கண்டன வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
2 நாட்களாக மனசு ரொம்ப நெருடலா இருக்கு... ஒரு சம்பவத்தை பற்றி...
கோவில் பாதுகாவலர் அஜித் குமார் எந்த தப்பும் செய்யவில்லை. தப்பு பண்ணியிருந்தால் நீங்கள் தண்டனை கொடுப்பது சரி.
கோவிலுக்கு வருவதே நல்லாயிருக்கணும் என்று வேண்டிக்கொள்ள வருகிறார்கள். இவர்கள் காரில் வந்துவிட்டு பார்க் பண்ண தெரியலைன்னு அந்த தம்பி சொல்லுறாரு. அப்படி இருந்தும் நீங்க போய் சாமி கும்பிட்டுவிட்டு வாங்க.. நான் யாரையாவது வைத்து பார்க் செய்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.
கோவில் சென்று வந்தவர்கள் வண்டியில் இருந்த நகையை காணவில்லை என்று சொல்கிறார்கள்.
உடனே ஏன் இவர் மேல் புகார் கொடுக்கிறார்கள்.
நான் என்ன கேட்கிறேன் இவர் தப்பு செய்தாரா இல்லையா என்று தெரியாமல் ஒருத்தரை அடிப்பதற்கு காக்கி சட்டைக்கு என்ன ரைட்ஸ் இருக்கு...
ஏற்கனவே சாத்தான்குளத்தில் தந்தை, மகனுக்கு நடந்தது பற்றி பதிவு செய்துள்ளேன்.
போலீஸ்காரர்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள் சில மோசமானவர்களும் இருக்கிறார்கள்.
ஏன்ப்பா... கஞ்சி போட்டு, சட்டையை அயர்ன் பண்ணா விரைப்பா தான் இருப்பியோ...
அடிக்கும்போது அந்த வாலிபர் கத்தி உள்ளார். வலி இருக்காதா... சக மனுஷனை போட்டு அந்த அடி அடிக்குறீங்களே... நீங்கள் எல்லாம் மனுஷங்களா... காக்கி சட்டை போட்ட எமனுங்களா... அறிவு வேண்டாம்.
அதாவது மீதி இருக்கும் நாட்களிலாவது அரசாங்கம் இதுபோன்ற விஷயங்களை strict பண்ணி, இந்த மாதிரி விஷயத்தை encourage பண்ணாம இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சரை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
அந்த வாலிபருக்கு நடந்த சம்பவத்தால் மனசு ரொம்ப சங்கடமாக இருக்கிறது.
போலீசாரை நான் கேட்டுக்கொள்ளும் ஒரே விஷயம் கொஞ்சம் மனுஷங்களா நடந்துக்கோங்க... மிருகமா இருக்காதீங்க... என்று தெரிவித்துள்ளார்.







