ஒரு மனிதனாக எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.. செந்தில் பாலாஜி குறித்து தாடி பாலாஜி வேதனை

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.இவர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாடி பாலாஜி- செந்தில் பாலாஜி
தாடி பாலாஜி- செந்தில் பாலாஜி
Published on

அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்புடன் 5 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அடையாறு பசுமை வழிச் சாலையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, பிஷப் கார்டன் பகுதியில் உள்ள அவரது சகோதரர் தங்கியிருந்த வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர்.

செந்தில் பாலாஜி

அதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதற்கிடையே அவர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

பிரார்த்தனை செய்த தாடி பாலாஜி

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி குணமடைய வேண்டும் என்று நடிகர் தாடி பாலாஜி திருவண்ணாமலையில் உள்ள மூக்குப்பொடி சித்தர் ஜீவ சமாதியில் வழிபாடு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது வருத்தத்தை அளிக்கிறது. எனக்கு அவர் சகோதரர் போன்றவர். அவருக்கு இந்த மாதிரியான சூழ்நிலை ஏற்பட்டது ஒரு மனிதனாக எனக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது. அவர் நிச்சயம் குணமடைந்து வருவார். அவர் விரைவில் குணமடைய வேண்டி மூக்குப்பொடி சித்தர் ஜீவ சமாதியில் பிரார்த்தனை செய்துள்ளேன்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com