என் மலர்
தலைப்புச்செய்திகள்
- கனமழை காரணமாக 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
தூத்துக்குடி:
தமிழ்நாட்டில் இன்று வடகிழக்குப் பருவமழை தொடங்குகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழை காரணமாக 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருச்செந்தூரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நகர் பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இடி மின்னலுடன் விடிய விடிய கொட்டிய கனமழையால் பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலை சுற்றியுள்ள சாலைகளிலும் வெள்ளம் தேங்கியுள்ளது. மேலும் சிவன் கோவிலுக்குள்ளும் மழை நீர் புகுந்தது.
கடந்த சில நாட்களாக திருச்செந்தூரில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், தற்போது பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவி வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
- ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை திறக்கப்படுகிறது.
- சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
திருவனந்தபுரம்:
ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து நாளை மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது.
கோவிலில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) வழக்கம் போல் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் உள்ளிட்ட பூஜைகளுக்கு பிறகு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு அடைக்கப்படும்.
ஐப்பசி மாத பூஜையின் நிறைவு நாளான 22-ந் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலையில் சாமி தரிசனம் செய்கிறார். இதையொட்டி அவர் வருகிற 21-ந் தேதி திருவனந்தபுரம் வருகிறார். அன்று இரவு கவர்னர் மாளிகையில் ஓய்வெடுக்கும் அவர் மறுநாள் காலை 9 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல் வருகிறார். அங்கிருந்து கார் மூலம் பம்பை வரும் அவர் இருமுடி கட்டி தேவஸ்தானத்தின் சிறப்பு வாகனம் மூலம் சன்னிதானம் செல்கிறார். தொடர்ந்து பகல் 12.30 மணியளவில் சாமி தரிசனம் செய்துவிட்டு சன்னிதானத்தில் ஓய்வெடுக்கிறார், பின்னர் வாகனம் மூலம் நிலக்கல் வந்து அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் வருகிறார்.
பின்னர் மறுநாள் (22-ந் தேதி) வர்க்கலாவில் நாராயண குரு ஆசிராமத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு மீண்டும் திருவனந்தபுரம் திரும்புகிறார். தொடர்ந்து 24-ந் தேதி வரை கேரளாவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலைக்கு வருவதையொட்டி வருகிற 21, 22-ந் தேதிகளில் பக்தர்களின் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த 2 நாட்களுக்கும் ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் பாதுகாப்பு உள்பட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
முன்னதாக 18-ந் தேதி காலை 8 மணிக்கு சன்னிதானத்தில் சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்படும் மேல் சாந்திகள் நடப்பு மண்டல சீசன் தொடக்கம் முதல் ஒரு வருட காலத்திற்கு சபரிமலையில் தங்கி இருந்து பூஜை மற்றும் திருப்பணிகளை நிறைவேற்றுவார்கள்.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
- தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
வடகிழக்கு பருவமழையையொட்டி தமிழகத்தில் இன்று பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. விடிய விடிய பெய்த கனமழை காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில் கனமழை காரணமாக 3 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
- குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு புரட்டாசி-30 (வியாழக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : தசமி பிற்பகல் 2.39 மணி வரை பிறகு ஏகாதசி
நட்சத்திரம் : ஆயில்யம் மாலை 5.08 மணி வரை பிறகு மகம்
யோகம் : சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருக்குற்றாலம் ஸ்ரீ குற்றாலநாதர் பவனி. திருவெம்பல் ஸ்ரீசிவபெருமான் புறப்பாடு. ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். திருமெய்யம் ஸ்ரீசத்தியமூர்த்தி புறப்பாடு. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீசவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை.
தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. சோழவந்தான் அருகில் குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-அமைதி
ரிஷபம்-உறுதி
மிதுனம்-அன்பு
கடகம்-ஆக்கம்
சிம்மம்-லாபம்
கன்னி-முயற்சி
துலாம்- வெற்றி
விருச்சிகம்-புகழ்
தனுசு- உற்சாகம்
மகரம்-நிம்மதி
கும்பம்-சுகம்
மீனம்-இன்பம்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். கூடுதல் லாபம் கிடைத்து குதூகலம் கூடும். வங்கி சேமிப்புகளை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
ரிஷபம்
செய்தொழிலில் புதியவர்களைச் சேர்த்து மகிழும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் வாய்ப்பு உண்டு. பாதியில் நின்ற பணிகளை மீதியும் தொடருவீர்கள்.
மிதுனம்
நினைத்தது நிறைவேறும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். வாங்கல், கொடுக்கல் ஒழுங்காகும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.
கடகம்
யோகமான நாள். வருங்கால முன்னேற்றம் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும்.
சிம்மம்
சுபகாரியப் பேச்சு முடிவாகும் நாள். சான்றோர்களின் சந்திப்பு உண்டு. உடன் இருப்பவர்களின் ஆதரவால் உற்சாகம் அடைவீர்கள். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும்.
கன்னி
சோர்வுகள் அகலும் நாள். வரன்கள் வாயில் தேடி வந்துசேரும். நண்பர்கள் நல்ல தவல்களைக் கொண்டுவந்து சேர்ப்பர். நவீன பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
துலாம்
நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொடுக்கும் நாள். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.
விருச்சிகம்
மன உறுதியோடு செயல்படும் நாள். உத்தியோகம் சம்பந்தமான எடுத்த புது முயற்சி கைகூடும். தொலைபேசி வழித்தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு வழிகாட்டும்.
தனுசு
மகிழ்ச்சி குறையாதிருக்க மற்றவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு குறையும்.
மகரம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
கும்பம்
புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். நிழல் போல தொடர்ந்த கடன் சுமை குறையும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.
மீனம்
ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைக்கும் நாள். புதியவர்களி டம் பழகும் பொழுது கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. உத்தியோகத்தில் அதிகாரிகளின் அன்பிற்கு பாத்திரமாவீர்கள்.
- கப்பலில் ஏராளமான பணியாளர்கள் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- அப்போது கப்பலின் கியாஸ் டேங்கில் திடீரென தீப்பிடித்து, பயங்கர வெடிவிபத்தும் ஏற்பட்டது.
படாம்:
இந்தோனேசியாவின் படாம் தீவில் உள்ள தன்ஜங்குன்காங் துறைமுகத்தில் பாமாயில் எண்ணெய் கப்பல் ஒன்று பழுது பார்க்கும் பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்தது.
இந்தக் கப்பலில் நேற்று ஏராளமான பணியாளர்கள் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கப்பலின் கியாஸ் டேங்கில் திடீரென தீப்பிடித்தது. அத்துடன் பயங்கர வெடிவிபத்தும் ஏற்பட்டது.
இந்த விபத்தில் 10 பணியாளர்கள் தீயில் கருகி பலியானார்கள். மேலும் 21 பேர் காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
- மெக்சிகோவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி ஒரே நாளில் 64 பேர் இறந்தனர்.
- தொடர் மழையில் சிக்கி இதுவரை பலியானோர் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்தது.
மெக்சிகோ சிட்டி:
வட அமெரிக்க நாடான மெக்சிகோவை பசிபிக் பெருங்கடல் சூழ்ந்துள்ளது. கடந்த 12-ம் தேதி காற்றழுத்த தாழ்வுநிலை அங்கு உருவானது. இது புயலாக வலுப்பெற்றது.
மெக்சிகோவின் கடலோர மாகாணங்களான ஹிடால்கோ, புபேல்லா மற்றும் வெராக்ரூஸ் நகரை மையமாகக் கொண்டு இந்தப் புயல் தாக்கும் என கணிக்கப்பட்டது. அப்பகுதியில் கடந்த 4 நாளாக தொடர் மழை கொட்டி தீர்த்தது. இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் அங்குள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் அங்குள்ள மின்கம்பங்கள், ராட்சத மரங்கள் ஆகியவை வேரோடு சாய்ந்தன. இதனால் மின்வினியோகம் தடைபட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது. ஏற்கனவே ஹிடால்கோ மாகாணத்தில் கொட்டி தீர்த்த கனமழைக்கு 66 பேர் வரை உயிரிழந்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வெராக்ரூசின் போசா ரிகா பகுதியை கருமேகம் சூழ்ந்து கொண்டு கனமழை வெளுத்து வாங்கியது. இதில் ஆயிரக்கணக்கான வீடுகள், பள்ளி மற்றும் மருத்துவமனை கட்டிடங்கள் சேதமடைந்தன. கட்டிட இடிபாடு மற்றும் வெள்ளப் பெருக்கில் சிக்கி ஒரே நாளில் 64 பேர் பலியாகினர். இதனால் மெக்சிகோவில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்தது. வெள்ளத்தில் சிக்கி மாயமான 60-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி நடக்கிறது.
- தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் மகாபாரதம் தொடர் ஒளிபரப்பானது.
- இதில் கர்ணன் பாத்திரத்தில் நடித்த பங்கஜ் தீர் உடல்நலக் குறைவால் காலமானார்.
மும்பை:
தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் 1988-ம் ஆண்டில் மகாபாரதம் தொடர் ஒளிபரப்பப்பட்டது. பல மாதம் ஒளிபரப்பான இந்தத் தொடருக்கு இன்றும் பல ரசிகர்கள் உள்ளனர்.
இந்தத் தொடரில் கர்ணன் கதாபாத்திரத்தில் நடித்தவர் பங்கஜ் தீர் (68). இவர் சந்திரகாந்தா, கானூன் உள்ளிட்ட டிவி தொடர்களிலும், ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்தார்.
மும்பையில் நடிப்பு பள்ளி ஒன்றை நடத்தி வந்த அவர், தன் சகோதரருடன் இணைந்து பல ஹிந்தி படங்களையும் தயாரித்தார்.
இதற்கிடையே, கடந்த சில மாதமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பங்கஜ் தீர், மும்பை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பங்கஜ் தீர் நேற்று அதிகாலை உயிரிழந்தார். மும்பை வீட்டில் வைக்கப்பட்டிருந்த பங்கஜ் தீர் உடலுக்கு உறவினர்களும், ரசிகர்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
- இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் 19-ம் தேதி நடக்கவுள்ளது.
- முதல் ஒருநாள் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர் விலகியுள்ளார்.
சிட்னி:
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் 19-ம் தேதி நடக்கவுள்ளது.
இந்திய அணியுடன் மோதும் ஆஸ்திரேலியா அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு கேப்டனாக மிட்செல் மார்ஷ் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், முதல் ஒரு நாள் போட்டிக்காக அறிவிக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியின் ஆடம் ஜாம்பா, ஜோஷ் இங்லீஷ் இருவரும் விலகி உள்ளதாக தகவல்கள் வெளியானது.
அவர்களுக்கு பதிலாக ஜோஷ் பிலிப்ஸ், மேத்யூ குனேமான் ஆகியோர் மாற்று வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளார்.
- பதவியேற்றபின் முதல் முறையாக இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூர்யா இந்தியாவிற்கு வருகிறார்.
- இந்தியா, இலங்கை இடையே உள்ள பன்முகத்தன்மை கொண்ட இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும்.
புதுடெல்லி:
இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூர்யா 3 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வருகிறார்.
இந்நிலையில், இந்தியாவிற்கு வருகை தரும் ஹரிணி அமரசூர்யா இங்கு பல்வேறு அரசியல் தலைவர்களைச் சந்தித்து இருநாட்டு நலன்கள் சார்ந்த இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார்.
இலங்கை பிரதமரின் வருகை, இந்தியா-இலங்கை இடையே உள்ள ஆழமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும். இந்தியாவின் 'மகாசாகர் தொலைநோக்குப் பார்வை' மற்றும் 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' ஆகிய கொள்கைகளை வலுப்படுத்தும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கை பிரதமராக பதவியேற்றபின் இந்தியாவிற்கு அவர் வருகை தந்து சுற்றுப்பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.
- மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கையில் நடந்து வருகிறது.
- முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 31 ஓவரில் 133 ரன்கள் எடுத்தது.
கொழும்பு:
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று கொழும்புவில் நடந்த போட்டியில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 31 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.
தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது.
இதையடுத்து, டக்வொர்த் லீவிஸ் முறைப்படி பாகிஸ்தான் வெற்றி பெற 113 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
பாகிஸ்தான் அணி 6.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 34 ரன்கள் எடுத்திருந்தபோது மீண்டும் மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
இதன்மூலம் இங்கிலாந்து அணி 7 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் ஒரு புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளது.
பி.வி.கே ஃபிலிம் ஃபேக்டரி (PVK FILM FACTORY) சார்பில் பா.விஜயன் தயாரித்திருக்கும் படம் மெஸன்ஜர். இதில் ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவர் கன்னிமாடம், யுத்தகாண்டம் பாத்திரகாட் (மலையாளம்) போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்து இருக்கிறார். கதாநாயகிகளாக மனீஷா ஜஸ்னானி, ஃபாத்திமா நஹீம், வைசாலி ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்து இருக்கிறார்கள்.
இவர்களுடன் லிவிங்ஸ்டன், பிரியதர்ஷினி ராஜ்குமார், ஜீவா ரவி, யமுனா, கோதண்டன், இட்இஸ் பிரசாந்த், கூல்சுரேஷ், ராஜேஷ்வரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் ரமேஷ் இலங்காமணி. இவர் இயக்குனர் A.R. காந்தி கிருஷ்ணா மற்றும் இயக்குனர் பத்ரி அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.
விக்ரவாண்டி அதன் சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் சென்னையில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த நிலையில் மெஸன்ஜர் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போன்றே படத்தின் டிரெய்லர் காட்சிகள் சமூக வலைதளங்களில் வலம்வர தொடங்கிவிட்டன.
மேலும், படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. மெஸன்ஜர் திரைப்படம் வருகிற அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகும் என்று டிரெய்லரில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மெஸன்ஜர் செயலியால் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை சுவாரஸ்யமாக சொல்லும் கதையாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது.
பால கணேசன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு பிரசாந்த் படத்தொகுப்பு செய்திருக்கிறார். அபு பக்கர் இசையமைக்க, பாலசுப்ரமணியன் கலை பணிகளை செய்து இருக்கிறார். தக்ஷன் மற்றும் பிரசாந்த் பாடல்கள் எழுத சைந்தவி, சத்யபிரகாஷ், மற்றும் கபில் கபிலன் பாடியிருக்கிறார்கள்.






