என் மலர்
தலைப்புச்செய்திகள்
- அமித்ஷா பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் கோழைக்கு வீரவசனம் எல்லாம் எதற்கு?
- தினம் தினம் அஞ்சி, ரத்தக் கொதிப்பிலேயே வாழ்பவர்களா ரத்தத்தின் ரத்தங்களைக் காப்பாற்றப் போகிறார்கள்?
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
முதலமைச்சர் அவர்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி என்ற பெயரில் முன்வைத்த வதந்திகளுக்கெல்லாம் ஆதாரத்தோடு பதிலளித்தார். கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூடும் அதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி நடந்து கொண்ட விதத்தைத் தோலுரித்துக் காட்டியதைக் கண்டும், பதில் பேசத் திராணியின்றிச் சட்டமன்றத்தை விட்டே ஓடிய பழனிசாமி,சமூக வலைத்தளத்தில் வந்து கம்பு சுற்றிக் கொண்டிருக்கிறார்.
கடந்த அதிமுக ஆட்சியில் சட்டமன்றத்தில் எதிர்க் கட்சிகளின் காலி இருக்கைகளைப் பார்த்துப் பேசிய வீராதி வீரன் யார்? அன்றைக்குக் காற்றோடு கத்திச் சண்டை போட்டவர், இன்று வெட்டி வசனம் பேசுகிறார்.
கூவத்தூரில் ஊர்ந்தெடுக்கப்பட்டு, டேபிளுக்கு அடியில் ஒளிந்து கிடந்த சூராதி சூரர், சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்துவிட்டு வீரவசனம் பேசுகிறார்.
சிபிஐ-க்கு பயந்து, அமலாகத் துறைக்கு அஞ்சி, தேர்தல் ஆணையத்திற்கு நடுங்கி பிரதமர் மோடி பின்னாலும் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பின்னாலும் ஒளிந்து கொண்டிருக்கும் கோழைக்கு வீரவசனம் எல்லாம் எதற்கு?
கருப்பு பட்டை அணிந்து வந்தது பற்றி சொல்லியிருக்கிறார் பழனிசாமி. வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராகச் சட்டமன்றத்தில் திமுக தீர்மானம் இயற்றியது. எங்கே தனது டெல்லி எசமானர்கள் கோபித்துக் கொள்வார்களோ என்ற பயத்தில் சட்டசபையில் எதிர்ப்பு தெரிவிப்பதற்காக வழங்கப்பட்ட கருப்பு பேட்ஜைக் கூட வாங்காமல் ஓடிய பயந்தான்கொள்ளிகள், கருப்பு பட்டை பற்றிப் பேசுவதற்கு அருகதை இருக்கிறதா? பாஜகவின் கோபத்திற்கு ஆளாகிவிடுவோமோ.. அமலாகத்துறை வந்துவிடுமோ எனத் தினம் தினம் அஞ்சி, ரத்தக் கொதிப்பிலேயே வாழ்பவர்களா ரத்தத்தின் ரத்தங்களைக் காப்பாற்றப் போகிறார்கள்?
அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா பங்கேற்ற மகாமகத்தில் நெரிசலில் சிக்கி 48 பேர் துள்ளத் துடிக்க இறந்து போனார்கள். ''மகாமகத்திற்கு வந்து இறந்து போனதால் அவர்கள் உடனே மோட்சத்திற்குப் போவார்கள்'' எனச் சொன்னவர்கள் எல்லாம், கரூர் நெரிசல் மரணத்திற்குப் பாடம் எடுப்பது வேடிக்கை.
இறந்தோரை வைத்து அற்ப அரசியல் செய்கிறார் பழனிசாமி. 41 பேரின் இறப்பில் கூட்டணி அரசியல் செய்யும் கேடுகெட்ட அரசியல்வாதியைத் தமிழ்நாடு இதுவரை கண்டதில்லை.
ஒன்றிய பாஜகவின் அடிமையான பழனிசாமி தனக்கொரு அடிமை சிக்க மாட்டாரா? எனத் தவம் கிடப்பது அவரது தவிப்பிலேயே தெரிகிறது. ஆனால், அதற்காக இறந்தோரை வைத்து அரசியல் செய்தால் அதைத் தமிழ்நாட்டு மக்கள் ஒருநாளும் ஏற்க மாட்டார்கள்.
வெறும் வாட்ஸ்அப் வதந்திகளை மட்டும் நம்பி உயிர் வாழும் எடப்பாடி பழனிசாமிக்கு உண்மை என்ற வார்த்தையைக் கூட உச்சரிக்கத் தகுதியில்லை. தமிழ்நாட்டு மக்களிடம் உங்களின் மயான அரசியல் எடுபடாது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனிதர்களை சந்தர்ப்பச் சூழ்நிலை என்னவெல்லாம் செய்யும் என்பதை எடுத்துச் சொல்வது 'ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி.'
சிங்கப்பூரில் வசிக்கிற முரளி சொந்த ஊருக்கு வருகிறான். தனது காதலியை தேடிப் போகிறான். அவளுக்கு வேறு ஒருவருடன் திருமணமாகிவிட்ட விவரம் தெரிந்து அதிர்ச்சியடைகிறான். அந்த அதிர்ச்சியிலிருந்தும் அவனை மீட்க அவனது நண்பன் தனது தங்கையை திருமணம் செய்து வைக்கிறான். நாட்கள் நல்லபடியாக நகர முரளியின் மனைவி தாய்மையடைகிறாள்.
அந்த சந்தர்ப்பத்தில் தனது முன்னாள் காதலியைப் பற்றி சில விஷயங்கள் முரளியின் கவனத்துக்கு வருகிறது. அவளுக்கு திருமணமான விவரம் தெரிந்தபோது அதிர்ச்சியடைந்ததை விட பல மடங்கு அதிர்ச்சியடைகிறான். அது மனநிலை அவனது வாழ்க்கையை எப்படியெல்லாம் புரட்டிப் போடுகிறது என்பது கதை.
ஆர்.ஆர் மூவிஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தில் ஆதிக் சிலம்பரசன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். காயத்ரி ரெமா, அனுகிருஷ்ணா கதாநாயகிகளாக நடிக்க தம்பி சிவன், வர்ஷிதா,விஜய் டிவி சரத்,மனோகர் பெருமாத்தா ஆகியோர் கதையின் பாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள். டைசன் ராஜ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் கே.ராஜன், ஆர்.வி. உதயகுமார், பேரரசு ஜாக்குவார் தங்கம், என்.விஜயமுரளி, விவேகபாரதி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர். விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளி வருகிறது.
- காமன்வெல்த் நிர்வாகக்குழு அகமதாபாத்தில் போட்டியை நடத்த பரிந்துரை செய்துள்ளது.
- நவம்பர் 26ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறும். அதில் இறுதி முடிவு எடுக்கப்படும்.
2030ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியை இந்தியா நடத்த ஆர்வம் காட்டி வந்தது. பிரதமர் மோடி, அமித் ஷா இந்தியாவில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். இதற்காக விண்ணப்பிக்கப்படும் என தெரிவித்திருந்தனர்.
அதன்படி இந்தியா சார்பில் போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் செய்யப்பட்டது. இந்த நிலையில் காமன்வெல்த் போட்டி நிர்வாகக்குழு அகமதாபாத்தில் 2023 காமன்வெல்த் போட்டியை நடத்த பரிந்துரை செய்துள்ளது.
பரிந்துரை காமன்வெல்த் போட்டிக்கான முழு உறுப்பினருக்கு அனுப்பப்பட்டு, அதன்பின் இறுதி முடிவு நவம்பர் 26ஆம் தேதி எடுக்கப்படும். அன்றைய தினம் காமல்வெல்த் விளையாட்டின் ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெறும் அதில் முடிவு செய்யப்படும்.
இந்தியா 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக்கை போட்டியை அகமதாபாத்தில் நடத்த விரும்புகிறது. காமன்வெல்த் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பு கிடைத்தால், ஒலிம்பிக் போட்டிக்கான முன்னெடுப்பாக பார்க்கப்படும்.
இந்தியா கடைசியாக 2010ஆம் ஆண்டு டெல்லியில் காமன்வெல்த் போட்டியை நடத்தியது.
தனது காதலனுடன் கொரியாவுக்குச் செல்லும் ஷென்பாவின் கனவு துரோகத்தில் சிதையும்போது, அவள் சியோலில் தனிமையை உணர்கிறாள். அந்தத் தனிமையுடனும் புதிய இடத்தில் உள்ள கலாச்சார சவால்களுடன் போராடுகிறாள்.
வாழ்வின் சவால்களில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளும் ஷென்பா மெல்ல தன்னை மீட்டெட்டுக்கும்போது, புதிய நண்பர்களுடன் வாழ்க்கைக்கான பிணைப்பை உருவாக்குகிறாள். நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினல் கதையாக உருவாகி இருக்கிறது 'மேட் இன் கொரியா'. பிரியங்கா மோகன், பார்க் ஹை-ஜின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தக் கதையை கார்த்திக் இயக்கியுள்ளார்.
இது குறித்து இயக்குநர் ஆர். ஏ. கார்த்திக் பகிர்ந்து கொண்டதாவது:-
கொரிய கலாச்சாரம் கடந்த பத்தாண்டுகளில் இந்திய கலாச்சாரத்தை கணிசமாக பாதித்துள்ளது. 'மேட் இன் கொரியா' கதையில் பணிபுரியத் தொடங்கும் வரை நான் கே-டிராமாவை பார்த்ததும் இல்லை, கே-பாப் இசையை கேட்டதும் இல்லை.
இந்தக் கதைக்காக சில விஷயங்கள் ரிசர்ச் செய்தபோது, கொரியா மற்றும் தமிழ் பாரம்பரியத்திற்கு இடையிலான ஆழமான கலாச்சார தொடர்புகள் மற்றும் வரலாற்று ஒற்றுமைகளைக் கண்டறிய ஆர்வமாக இருந்தேன்.
என்னுடைய இந்த ஆர்வம் ஆழமான ஒரு கதையைச் சொல்ல தூண்டியது. 'மேட் இன் கொரியா' கதை நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியுடன் தனித்துவமான கலாச்சார பின்னணியை கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது" என்றார்.
நடிகை பிரியங்கா மோகன் பகிர்ந்து கொண்டதாவது, "இந்தக் கதையில் என்னை ஈர்த்தது அதன் வலிமையும் தனித்துவமும்தான். கதை கேட்டவுடனே பிடித்துவிட்டது. கே-டிராமாஸை எப்போதும் விரும்பி பார்ப்பேன். அப்படி இருக்கையில், இந்திய-கொரிய கூட்டு முயற்சியான இந்தக் கதையின் ஒரு பகுதியாக இருக்கும் வாய்ப்பு எனக்கு உற்சாகமூட்டுவதாக இருந்தது.
நான் நடித்திருக்கும் கதாபாத்திரத்துடன் எனக்கு ஆழமான தனிப்பட்ட தொடர்பு இருந்தது. கார்த்திக் சார் கதை சொன்னபோதே எனக்கு உடனே பிடித்துவிட்டது. நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினல்ஸின் இந்தப் பயணத்தில் நான் இணைந்திருப்பது பெருமையாக உள்ளது" என்றார்.
- இருநாட்டு எல்லையில் பயங்கர மோதல்.
- பாகிஸ்தான் ராணுவ வீரர்களை ஆப்கானிஸ்தான் தலிபான்கள் சுட்டு வீழ்த்தினர்.
ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் எல்லையில் ஆப்கானிஸ்தான் தலிபான், பாகிஸ்தான் வீரர்கள் அடிக்கடி மோதிக்கொள்ளும் சம்பவம் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் வியாழக்கிழமை பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக பாகிஸ்தான் விமானப்படை, திடீரென காபூல் நகர் மீது தாக்குதல் நடத்தியது. அத்துடன் இருநாட்டு எல்லையில் உள்ள நகரின் மார்க்கெட் மீது தாக்குதல் நடத்தியது.
இது ஆப்கானிஸ்தான் தலிபான் அரசுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. யாரும் எதிர்பார்க்காத வகையில் இருநாட்டு எல்லையில், எல்லைத்தாண்டி பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீது தலிபான்கள் பயங்கர தாக்குதல நடத்தினர். இதில் 50-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் தலிபான் அரசு தெரிவித்திருந்தது.
அதேவேளையில், ஆப்கானிஸ்தானின் 200 தலிபான்களை வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்திருந்தது. இதனால் இருநாடுகளுக்கும் இடையில் பதற்றமாக சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை எல்லையில் மீண்டும் மோதிக் கொண்டனர். இதில் ஆப்கானிஸ்தான் தலிபான்கள் டிரோன்கள் மூலம் எல்லையில் உள்ள பாகிஸ்தான் ராணுவத்தின் புறக்காவல் நிலையத்தை தகர்த்தனர். அதேபோல் பாகிஸ்தான் ராணுவமும் தாக்குதல் நடத்தியுள்ளது. இரு தரப்பிலும் 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் எல்லையில் பதற்றம் அதிகரித்தது.
தலிபான், பாகிஸ்தான் ராணுவத்தின் புறக்காவல் நிலையத்தை தகர்த்ததுடன், ராணுவ டேங்குகளை கைப்பற்றியுள்ளது. இந்த டேங்குகள் மூலம் தலிபான் நிலைகளை பாகிஸ்தான் ராணுவம் குறிவைத்திருந்தது.
பாகிஸ்தானின் சமான் மாவட்டமும், ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கு மாவட்டமான ஸ்பின் போல்டாக் மாவட்டத்தின் எல்லையில்தான் இந்த பயங்கர சண்டை நடந்தது.
ஆப்கானிஸ்தானின் கந்தகார் மாகாணம்- பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் இடையே உள்ள எல்லை மாவட்டமான ஸ்பின் போல்டாக்கில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதில் 12 மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு ஆப்கானிஸ்தான் தரப்பில் இருந்து தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் தாக்குதலில், ஏராளமான பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் ஆயுதங்கள் மற்றும் டேங்குகள் கைப்பற்றப்பட்டன. பாகிஸ்தான் ராணுவத்தின் புறக்காவல் நிலையம் போன்றவைகள் அழிக்கப்பட்டன எனத் தெரிவித்துள்ளது.
அதேவேலையில் எந்தவித தூண்டுதல் இல்லாமல் பாகிஸ்தான் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, இதற்கு பாகிஸ்தான் பதிலடி கொடுத்துள்ளது என பாகி்ஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பதற்றத்தை தணிக்கும் வகையில் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் இடையே 48 மணி நேர சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் சண்டை நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்ததாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. அதேவேளையில் ஆப்கானிஸ்தான் தலிபானன் அரசு இது தொடர்பாக ஏதும் தெரிவிக்கவில்லை.
- வதந்தியை பரப்பாதீர் என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு.
- அப்படி எந்த ஒரு மசோதாவுக்கான முன்மொழிவும் பெறப்படவில்லை என தகவல்.
சட்டமன்றக் கூட்டத்தொடரில் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதா தாக்கல் செய்ய உள்ளதாக வதந்தி பரவுவதாக தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
வதந்தியை பரப்பாதீர் என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதாவை முதலமைச்சர் தாக்கல் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியானது. இது முற்றிலும் வதந்தியே.
அப்படி எந்த ஒரு மசோதாவுக்கான முன்மொழிவும் பெறப்படவில்லை என சட்டப்பேரவை செயலர் தெரிவித்துள்ளார் என உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
- மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தில் இந்திராணி கணவர் கைதாகி ஜாமீனில் விடுதலை.
- 5 மண்டல தலைவர்கள் ஏற்கனவே ராஜினாமா செய்துள்ளனர்.
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தில் இந்திராணியின் கணவர் கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்த நிலையில் இந்திராணி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மதுரை மாநகராட்சி 5 மண்டல தலைவர்கள் ஏற்கனவே ராஜினாமா செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- நவம்பர் மாத அரிசியை அக்டோபர் மாதத்திலேயே பெறலாம் என தெரிவித்துள்ளார்.
- முன்கூட்டியே அரிசி பெறாதவர்கள் வழக்கம்போல் நவம்பர் மாதத்தில் வாங்கிக் கொள்ளலாம்.
அரிசு குடும்ப அட்டைத்தாரர்கள் நவம்பர் மாதத்திற்குரிய அரிசியை அக்டோபர் மாதத்திலேயே பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழைக் காலத்தில் மழை அதிகம் பெய்யலாம் என்பதைக் கருத்தில் கொண்டு நவம்பர் மாத அரிசியை அக்டோபர் மாதத்திலேயே பெறலாம் என தெரிவித்துள்ளார்.
அரிசியை முன்கூட்டியே அக்டோபரில் பெறாதவர்கள் வழக்கம்போல் நவம்பர் மாதத்தில் அரிசியை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளார்.
- வெளியூர் செல்லும் பேருந்துகள் மூன்று இடங்களில் இருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு.
- மாநகரின் பல்வேறு இடங்களில் இருந்து செல்ல இப்பேருந்துகள் இயக்கப்படும்.
சென்னையில் தீபாவளியை ஒட்டி வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக நாளை முதல் வரும் 19ம் தேதி வரை 4 நாட்களுக்கு கூடுதலாக 275 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி, கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், கோயம்பேடு எம்.ஜி.ஆர். பேருந்து முனையம் மற்றும் மாதாவரம் புறநகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களுக்கு மாநகரின் பல்வேறு இடங்களில் இருந்து செல்ல இப்பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
20.10.2025 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திடவும், வெளியூர் செல்லும் பயணிகள் எளிதாக பயணிக்கும் வகையில் எதிர்வரும் 16.10.2025 முதல் 19.10.2025 ஆகிய 4 நாட்களுக்கும் வெளியூர் செல்லும் பேருந்துகள் கீழ்க்குறிப்பிட்டுள்ள மூன்று இடங்களில் இருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
1. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
2. கோயம்பேடு பேருந்து நிலையம்
3. மாதவரம் புறநகர் பேருந்து நிலையம்
சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து மேற்குறிப்பிட்ட மூன்று பேருந்து நிலையங்கள்/பகுதிக்கு மாநகர பேருந்துகள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன.
எனினும், எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர் பயணிகள் மேற்குறிப்பிட்டுள்ள மூன்று பேருந்து நிலையங்களுக்கு எளிதாக சென்று வெளிமாவட்ட நீண்ட தூர பேருந்துகளை பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக மாநகர போக்குவரத்துக்கழகம் கூடுதலாக 275 சிறப்பு இணைப்பு பேருந்துகள் 16.10.2025 முதல் 19.10.2025 ஆகிய 4 நாட்களில் இயக்கபட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிரசாந்த் கிஷோர் கட்சியில் இருந்து விலகி, சமீபத்தில் கட்சியில் இணைந்த முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு வாய்ப்பு.
- தற்போது வரை 83 இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
பீகார் மாநில தேர்தல் அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதி பங்கீடு நிறைவடைந்தது. பாஜக 101 இடங்களில் போட்டியிடுகிறது.
நேற்று 71 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் 12 பேர் இடம் பிடித்துள்ளனர்.
இதில் நாட்டுப்புற பாடகி மைதிலி தாகூர் இடம் பிடித்துள்ளார். இவர் பாட்னாவில் நேற்று முறையாக பாஜக-வில், மாநில தலைவர் திலிப் ஜெய்ஸ்வால் முன்னிலையில் இணைந்தார். இந்த உடனேயே அலிநகர் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தொகுதியில் மிஷ்ரிலால் யாதவ் எம்.எல்.ஏ.-வாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மைதிலி தாகூரை தவிர்த்து, முன்னாள் ஐபிஎல் அதிகாரி ஆனந்த் மிஸ்ராவுக்கு புக்சர் தொகுதியில் வாய்ப்பு வழங்கியுள்ளது. பிரசாந்த் கிஷோர் கட்சியில் இருந்து வெளியேறி சமீபத்தில்தான் பாஜக-வில் இணைந்தார்.
முசாபர்பூர் தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ.-வுக்குப் பதிலாக ரஞ்சன் குமார் நிறுத்தப்பட்டுள்ளார். ஹயாகத்தில் ராம் சந்திர பிசாத் நிறுத்தப்பட்டுள்ளார். கோபால்கஞ்ச் தொகுதியில் சுபாஷ் கிங்கிற்கு வாய்ப்ப வழங்கப்பட்டுள்ளது.
- கரூர் கூட்டல் நெரிசல் விவகாரத்தில் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டார்.
- த.வெ.க. மாவட்ட நிர்வாகி பவுன்ராஜியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த மாதம் 27-ந்தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் மேற்கொண்ட பிரசாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த உயிரிழப்புகள் தொடர்பாக கரூர் டவுண் போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், துணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், மத்திய மாநகர நிர்வாகியான பவுன்ராஜ் மற்றும் நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்திருந்த போலீசார் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மத்திய மாநகர நிர்வாகியான பவுன்ராஜை கைது செய்தனர்.
மதியழகன் மற்றும் பவுன்ராஜை போலீசார் கடந்த மாதம் 30ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மதியழகன், பவுன்ராஜ் ஆகிய இருவரையும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க கரூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இருவரும் ஜாமீன் கோரி கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் இன்று நீதிமன்ற காவல் முடிவடைந்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இருவருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இருவரும் காவல் நீட்டிப்பு இல்லாமல் விடுவிக்கப்பட்டனர்.
தீபாவளி கொண்டாட்டம் என்றாலே ஒன்று பட்டாசும், மற்றொன்று புதிய திரைப்படங்களும் தான்.
முன்பெல்லாம், தீபாவளி- பொங்கல் பண்டிகைகளில் முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டுமே பெரும்பாலும் வெளியாகும். ஆனால், சமீப காலமாக அந்த போக்கு மாறி வருகிறது.
தற்போது சிறிய பட்ஜெட் படங்களும், புதிய ஹீரோக்களின் படங்களும் கூட தீபாவளி முன்னிட்டு வெளியாகி வசூல் சாதனை படைக்கின்றன. அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் மாதம் 20ம் தேதி வருகிறது. தீபாவளியை முன்னிட்டு 3 புதிய திரைப்படங்கள் வெளியாகின்றன.
அதன்படி, வரும் 17ம் தேதி அன்று துருவ் விக்ரமின் பைசன், ஹரிஷ் கல்யாணின் டீசல், பிரதீப் ரங்கநாதனின் டியூட் ஆகிய மூன்று படங்கள் வௌியாக தயாராக உள்ளன.
பைசன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். மேலும், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
டியூட்
இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் ட்யூட். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.
டீசல்
பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். துவக்கம் முதலே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண், சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் அதுல்யா உடன் நடிக்கும் `டீசல்' என்ற படத்தில் நடித்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.






