என் மலர்
தலைப்புச்செய்திகள்
- எப்ஸ்டீன் மீது இளம் சிறுமிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
- டிரம்ப் பெயரும் எப்ஸ்டீன் கோப்புகளில் இடம்பெற்றுள்ளதாக விமர்சனம் எழுந்தது.
அமெரிக்காவை உலுக்கிய பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்பவருக்கு சொந்தமான எஸ்டேட்டில் அதிபர் டிரம்ப் பல பெண்களுடன் நிற்கும் சர்ச்சை புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.
கைப்பற்றப்பட்ட 19 புகைப்படங்களில் டிரம்ப் மட்டுமில்லாமல் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், பில் கேட்ஸ் உள்ளிட்டோர் உள்ளனர்.
யார் இந்த எப்ஸ்டீன்?
ஜெஃப்ரி எப்ஸ்டீன், அமெரிக்காவின் மிகவும் செல்வாக்கு மிக்க ஒரு நிதியாளர். பெரும் நிறுவனங்களுக்கு நிதி திரட்டித் தரும் பணியில் ஈடுபட்டு, பல பணக்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வளர்த்துக் கொண்டார். ஆனால், அவரது ஆடம்பர வாழ்க்கை முறைக்கும், சமூக அந்தஸ்துக்கும் பின்னால், கிரிமினல் உலகமே இருந்தது.
2000-களின் முற்பகுதியிலிருந்து, எப்ஸ்டீன் மீது இளம் சிறுமிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது, கடத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அவருக்குச் சொந்தமான 'லிட்டில் செயிண்ட் ஜேம்ஸ்' என்ற கரீபியன் தீவில், பல முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் ஆகியோரை அழைத்து வந்து, அங்கு பாலியல் ரீதியான வன்முறைகளில் ஈடுபட்டதாக வழக்குகள் பதிவாகின.
2008-ல் எப்ஸ்டீனுக்கு மிகக் குறுகிய காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், 2019-ல் மேலும் கடுமையான பாலியல் கடத்தல் குற்றச்சாட்டுகளுடன் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார்.
ஆனால், வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே, அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியூயார்க் சிறையில் மர்மமான முறையில் இறந்துபோனார். அவரது மரணம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது, அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொல்லப்பட்டாரா என்பது இன்று வரை ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது.
'எப்ஸ்டீன் கோப்புகள்'
ஜெஃப்ரி எப்ஸ்டீனின் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்கள், அவருடைய தொலைபேசி அழைப்பு பதிவுகள், விமானப் பயணப் பதிவுகள், நீதிமன்ற ஆவணங்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள், அவருடன் தொடர்பு கொண்ட பிரபலங்களின் பட்டியல் ஆகியவை 'எப்ஸ்டீன் கோப்புகள்' என அழைக்கப்படுகின்றன.
இந்த கோப்புகளில் பல உயர்மட்ட அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பிரபல கலைஞர்கள் மற்றும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக நீண்டகாலமாகவே சந்தேகங்கள் நிலவி வருகின்றன. இந்த கோப்புகள் வெளியானால், பலரின் இமேஜ் அடியோடு சரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிரம்ப் பெயரும் எப்ஸ்டீன் கோப்புகளில் இடம்பெற்றுள்ளதாக விமர்சனம் எழுந்தது. இந்த கோப்புகளில் டிரம்ப் பெயர் இடம்பெற்றுள்ளதாக உலக பணக்காரர் எலான் மஸ்க் ஏற்கனவே எக்ஸ் பக்கத்தில் தெரிவித்து பின்னர் அந்த பதிவை நீக்கியதும் குறிப்பிடத்தக்கது.
- கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.
- அரசியல் வேறு, சினிமா வேறு.. என்ற வகையில், பிரித்து பார்க்க வேண்டும்.
கூட்ட நெரிசல்..!
கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவங்களை வடமாநிலங்களில் தான் நாம் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் தமிழ்நாட்டில் நிகழ்ந்ததா என்றால் அது கடந்த ஆண்டு அக்டோபர் 6-ந் தேதி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.
அதன்பிறகு அரசியல் வரலாற்றில் மட்டுமில்லை தமிழ்நாட்டிலும் இதுவரை இல்லாத மிகவும் சோகமான, கருப்பு நாளாக 2025-ம் ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி மாறியது.
தமிழ்நாட்டில் புதிதாக கட்சி தொடங்கிய விஜய், சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி மக்கள் சந்திப்பு என்ற அரசியல் பரப்புரை கூட்டங்களை நடத்தி வந்தார். அதன்படி, 27-ந்தேதி சனிக்கிழமை மதியம் கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் பரப்புரை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விஜய் பங்கேற்று பொதுமக்களிடையே உரையாற்றுவதை காண காலை முதலே மக்கள் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு பொதுமக்கள் குவியத் தொடங்கினர்.

குறுகிய இடத்தில் பெண்கள், ஆண்கள், முதியவர்கள், கைக்குழந்தைகள், சிறுவர்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடினர். மேலும் காலை முதல் தண்ணீர், உணவு ஏதுமின்றி வெயிலில் இரவு வரை காத்திருந்ததுதான் கொடுமை. அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை. குறிப்பிட்ட நேரத்திற்கு வராத விஜய் பல மணி நேரம் தாமதமாக வந்து மக்களிடையே உரையாற்றினார்.
அவர் பேசும்போதே கூட்டத்தில் ஒருவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விஜய் பேசிமுடித்துவிட்டு சென்றதும் அங்கு கூடியிருந்த மக்கள் ஒரே நேரத்தில் வெளியே செல்ல முற்பட்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது.
41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் சம்பவ இடத்திற்கு பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். இதற்கிடையே பரப்புரை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் கூட்ட நெரிசல் குறித்து தெரிந்ததும் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்காமல் சென்னைக்கு திரும்பியது விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இதனிடையே, கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதலில் கரூர் நகர காவல்துறையினர் விசாரணை தொடங்கிய நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. அதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது. எனினும் இவ்வழக்கை சி.பி.ஐ.விசாரணைக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் ஒரு குழுவை அமைத்து விசாரணையை கண்காணிக்க உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து, விசாரணையை தொடங்கி நடத்தி வரும் சி.பி.ஐ. அதிகாரிகள் இதுவரை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணையை நடத்தி முடித்துள்ளனர். மேலும் சம்பவத்தின் போது பணியில் இருந்த காவல் ஆய்வாளர்கள் மற்றும் உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது. இந்த விசாரணையின் போது இறந்தவர்கள் கூட்டத்தில் மிதிப்பட்டு இறந்தார்களா, மூச்சுத் திணறி இறந்தார்களா, அல்லது அதிர்ச்சியில் இறந்தார்களா என்பது குறித்து மருத்துவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.
கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு த.வெ.க.வினரே முழு காரணம் என்று குற்றம்சாட்டப்படும் நிலையில், த.வெ.க.வினரோ ஆளும் கட்சியின் சதிதான் இத்தனை உயிரிழப்புகளுக்கு காரணம் என்று தொடக்கம் முதலே குற்றம்சாட்டி வருகிறது.
எது, எப்படியோ... கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தமிழ்நாட்டில் எவராலும் மறக்கமுடியாத துயர நிகழ்வாக மாறிவிட்டது. இந்நிகழ்விற்கு பிறகு மக்கள் தான் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அரசியல் வேறு, சினிமா வேறு.. என்ற வகையில், பிரித்து பார்க்க வேண்டும்.
மேலும் அரசியல் சார்ந்த கூட்டமோ, இல்லை வேறு எந்த கூட்டமாக இருந்தாலும் சரி முதியவர்கள், கைக்குழந்தைகள், சிறுவர்கள், கர்ப்பிணிகள் செல்வதை தவிர்ப்பது நல்லது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை கடந்து அரசியல் கட்சிகள், தலைவர்கள், மக்கள் என அனைவரும் அவரவர் பாதையில் பயணிக்க தொடங்கிவிட்டனர். எனினும், இத்துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தார் அதிலிருந்து மீண்டுவர வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு.
- பெரியார், அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உருவப்படங்கள் வைக்கப்பட்டு உள்ளது.
- முதலமைச்சரின் வருகையையொட்டி திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டுள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணி அளவில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கு கட்சியின் இளைஞர் அணி செயலாளரான துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.
தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மை செயலாளரும், நகராட்சி துறை அமைச்சருமான கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்களான ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, க.பொன்முடி எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களான திருச்சி சிவா, ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ், கனிமொழி கருணாநிதி, செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வழக்கறிஞர் அணி செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர். பொதுப்பணித்துறை அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு வரவேற்று பேசுகிறார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு எழுச்சியுரையாற்ற உள்ளார். முடிவில் இளைஞர் அணி மாநில துணை செயலாளர் பிரபு கஜேந்திரன் நன்றி கூறுகிறார்.
முன்னதாக இன்று திருவண்ணாமலைக்கு வருகை தரும் முதலமைச்சருக்கு மாவட்ட எல்லையான மேல்செங்கத்தில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு முதலமைச்சருக்கு வரவேற்பு அளிக்க உள்ளனர்.
நிகழ்ச்சியையொட்டி மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் கட்சி கொடிகளால் அலங்காரங்களும், மின்னொளி அலங்காரங்களும் செய்யப்பட்டு உள்ளது. மேலும் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இந்நிகழ்ச்சிக்காக பிரமாண்ட அளவில் மேடை அலங்காரம் செய்யப்பட்டு இதில் பெரியார், அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உருவப்படங்கள் வைக்கப்பட்டு உள்ளது.
நிகழ்ச்சி திடலுக்கு செல்லும் வழியில் பிரமாண்டமாக வரவேற்பு நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டு உள்ளது. மண்டலங்கள் வாரியாக நடைபெறும் இந்த தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மண்டலத்தில் இருந்து தொடங்கப்பட்டு அதுவும் திருவண்ணாமலையில் முதலில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சரின் வருகையையொட்டி திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டுள்ளது.
- எஸ்ஐஆர் களப்பணிகள் முடிவடையும் தேதியை இந்திய தேர்தல் கமிஷன் 2 முறை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டது.
- பதிவுகளின் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிற 19-ந் தேதி வெளியிடப்படுகிறது.
சென்னை:
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (எஸ்ஐஆர்) கடந்த நவம்பர் 4-ந் தேதி தொடங்கின. இந்தப் பணியின்போது ஒவ்வொரு வாக்காளருக்கும் வீடுவீடாகச் சென்று கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வழங்கி வந்தனர். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தனர்.
எஸ்ஐஆர் களப்பணிகள் முடிவடையும் தேதியை இந்திய தேர்தல் கமிஷன் 2 முறை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டது. அதன்படி இந்த பணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைகின்றன. வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை 100 சதவீதம் வழங்கி, அவற்றை திரும்ப பெற்று, அவை முழுவதையும் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் ஏற்கனவே பதிவேற்றம் செய்து விட்டனர்.
இந்த பதிவுகளின் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிற 19-ந் தேதி வெளியிடப்படுகிறது. பின்னர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், திருத்தங்களை மேற்கொள்வதற்கும் ஒரு மாத கால அளவுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. பிப்ரவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
- சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை.
- ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு கார்த்திகை-28 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : தசமி இரவு 10.06 மணி வரை பிறகு ஏகாதசி
நட்சத்திரம் : அஸ்தம் நண்பகல் 12.06 மணி வரை பிறகு சித்திரை
யோகம் : அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
காஞ்சிபுரம், சமயபுரம், புன்னைநல்லூர், சோழவந்தான் மாரியம்மன் கோவில்களில் பால் அபிஷேகம்
இன்று சுபமுகூர்த்த தினம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், தஞ்சை புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன், சோழவந்தான் ஸ்ரீ ஜனகைமாரியம்மன் கோவில்களில் பால் அபிஷேகம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. தேவகோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் காலையில் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வரவு
ரிஷபம்-அன்பு
மிதுனம்-அமைதி
கடகம்-பண்பு
சிம்மம்-பணிவு
கன்னி-இன்பம்
துலாம்- உறுதி
விருச்சிகம்-பாராட்டு
தனுசு- நற்செயல்
மகரம்-பக்தி
கும்பம்-மேன்மை
மீனம்-பயணம்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். திருமணப் பேச்சுக்கள் முடிவாகலாம். உறவினர் பகை அகலும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.
ரிஷபம்
தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். கரைந்த சேமிப்பை ஈடுகட்ட முயற்சிப்பீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்
கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். குடும்பத்தினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பிரபலஸ்தர்களால் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வீர்கள்.
கடகம்
முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். பயணங்களில் ஆர்வம் கூடும். பொருளாதார நிலை உயரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
சிம்மம்
நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். நம்பிக்கைகள் நடைபெறும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.
கன்னி
உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வரலாம். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் உண்டு. புதிய வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
துலாம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். வருமானம் போதுமானதாக இருக்கும். தொழில் ரீதியாக ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். சொத்துப் பிரச்சனைகள் சுமூகமாக முடியும்.
விருச்சிகம்
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். சொந்த பந்தங்களின் சந்திப்பு கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் ஒத்துழைப்பு செய்வர். தொழில் சீராக நடைபெறும்.
தனுசு
உங்களின் திறமையான செயல்பாடுகள் மற்றவர்களை ஆச்சரியப்படுத்தும். சேமிப்பு அதிகரிக்கும். அந்நிய தேசத்தில் இருந்து உத்தியோகம் சம்பந்தமான அழைப்புகள் வரலாம்.
மகரம்
வெற்றிச் செய்திகள் வந்து சேரும் நாள். பிள்ளைகளால் பெருமை சேரும். விவாகப் பேச்சுக்கள் முடிவாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.
கும்பம்
ஆதாயத்தை விட செலவுகள் அதிகரிக்கும் நாள். முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் தடைகளைச் சந்திக்க நேரிடலாம். உத்தியோகத்தில் வீண்பழிகள் ஏற்படலாம்.
மீனம்
சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம். நீண்ட நாள் பிரச்சனை நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.
- மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 13 லட்சம் குடும்பங்கள் இருளில் சிக்கின.
- இதன் காரணமாக பிரேசிலில் இயல்பு வாழ்க்கை வெகுவாக முடங்கியது.
பிரேசிலியா:
பிரேசிலின் சாவோ பாலோ மாகாணத்தில் வெப்ப மண்டல புயல் உருவானது. அப்போது பலத்த காற்று வீசியதால் அங்கு ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதனால் சுமார் 13 லட்சம் குடும்பங்கள் இருளில் சிக்கித் தவித்தன. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை அங்கு முடங்கியது.
அதேபோல், புயல் காரணமாக விமானங்கள் பறப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது. எனவே 400 விமானங்கள் அங்கு ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
- இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
- இரு போட்டிகளின் முடிவில் டி20 தொடர் 1-1 என சமனில் உள்ளது.
தர்மசாலா:
இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்தியாவும், 2வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் வென்றன. இதனால் டி20 தொடர் 1-1 என சமனில் உள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி தர்மசாலாவில் இன்று நடைபெற உள்ளது.
கேப்டன் சூர்யகுமார் கடந்த 17 சர்வதேச டி20 போட்டியில் 201 ரன்கள் எடுத்துள்ளார். கேப்டன் என்பதால் நீக்க முடியாது. மீண்டும் 3வது இடத்தில் களமிறங்கி விளாச வேண்டும்.
துணை கேப்டன் சுப்மன் கில் இடம் தான் கேள்விக்குறியாக உள்ளது. கடந்த 14 போட்டியில் 263 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
சஞ்சு சாம்சனை பின்வரிசைக்கு அனுப்பிவிட்டு, தொடக்க வீரர் வாய்ப்பை சுப்மன் கில்லுக்கு கொடுத்தனர். தற்போது இவரும் சோபிக்கவில்லை.
அபிஷேக் சர்மா அவசரப்படக் கூடாது. கடந்த போட்டியில் அரைசதம் விளாசிய திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா நல்ல பார்மில் இருப்பது பலம். கடைசி கட்டத்தில் ஷிவம் துபே கைகொடுக்க வேண்டும்.
வேகப்பந்து வீச்சில் பும்ரா தடுமாறுகிறார். அர்ஷ்தீப் சிங்குக்கு பதிலாக பாண்ட்யாவை பயன்படுத்தலாம். குல்தீப் யாதவை சேர்க்கலாம்.
தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டன் மார்க்ரம், குயின்டன் டி காக், பிரேவிஸ், பெரேரா, மில்லர், யான்சென் என அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.
நோர்ஜியா, யான்சென், லுங்கி நிகிடி, பார்ட்மென், சிபாம்லா போன்ற வேகங்களுக்கு சாதகம். சுழலில் கைகொடுக்க மகராஜ் உள்ளார்.
இரு அணிகளும் வெல்ல போட்டி போடும் என்பதால் ஆட்டம் சுவாரஸ்யமாக இருக்கும் என ரசிகர்கள் தெரிவித்தனர்.
- கடந்த 2023-ம் ஆண்டு நர்கெஸ் முகமதிக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
- நர்கெஸ் முகமதி கைதுக்கு பல்வேறு சர்வதேச அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.
ஓஸ்லோ:
ஈரான் நாட்டில் பல ஆண்டுகளாகப் பெண்களுக்கு எதிராக நடக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் அநீதிகளுக்கும் எதிராகத் தொடர்ந்து போராடி வருபவர் நர்கெஸ் முகமதி. குறிப்பாக, ஈரானில் பெண்களின் உரிமைகளை பறிக்கும் கட்டாய ஹிஜாப் சட்டங்களுக்கு எதிராகவும், பெண்கள் தங்கள் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடுவதை ஆதரித்தும் அவர் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார்.
அவருடைய மனித உரிமைகளுக்கான சேவையைப் போற்றும் விதமாக அவருக்கு கடந்த 2023-ம் ஆண்டு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, வழக்கறிஞர் ஒருவரின் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு மனித உரிமைப் போராளி நர்கெஸ் முகமதி சென்றார். அப்போது ஈரான் அதிகாரிகள் நர்கெஸ் முகமதியை பலவந்தமாக கைது செய்ததாக அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர்.
இச்சம்பவம் சர்வதேச அளவில் சர்ச்சையைக் கிளப்பியது. அவரது கைதுக்கு ஐ.நா.சபை உள்பட பல்வேறு சர்வதேச அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், ஈரான் மனித உரிமைப் போராளியான நர்கெஸ் முகமதி கைது செய்யப்பட்டதற்கு நோபல் பரிசு கமிட்டி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நோபல் பரிசு கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், நர்கெஸ் முகமதி கைது வருத்தத்தை அளிக்கிறது. எந்த நிபந்தனையும் இன்றி அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.
- உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ.க. கைப்பற்றியது.
- கேரளாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.
திருவனந்தபுரம்:
கேரளாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், ஆளும் இடதுசாரி முன்னணி எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. அதேவேளையில், மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் பாஜக வென்றுள்ளது. இது குறித்து கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கூறியதாவது:
எல்டிஎப் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதற்கான காரணம் குறித்து விரிவாக ஆராயப்படும்.
தேவையான நடவடிக்கைகளை எடுத்து முன்னோக்கி செல்வோம்.மதவாத சக்திகளின் தவறான தகவல்கள் மற்றும் பிளவுபடுத்தும் தந்திரங்களுக்கு மக்கள் இரையாகிவிட கூடாது என்பதை உறுதிசெய்ய கூடுதல் விழிப்புடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மணியாக இந்த தேர்தல் முடிவு அமைந்துள்ளது. மக்களின் இந்த தீர்ப்பு, அனைத்து வகையான வகுப்புவாதத்திற்கும் எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது என பதிவிட்டுள்ளார்.
இடதுசாரிகள் 45 ஆண்டுகளாக திருவனந்தபுரத்தில் வெற்றி பெற்று வந்த நிலையில் பா.ஜ.க. தன்வசப்படுத்தியுள்ளது. பாலக்காடு திரிபுனிதுரா நகராட்சிகளையும் பா.ஜ.க. வென்றுள்ளது.
- நேற்று நடந்த அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான எகிப்துடன் இந்திய அணி மோதியது.
- இதில் 3-0 என்ற கணக்கில் வென்ற இந்தியா முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
சென்னை:
5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்திலும், நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியிலும் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த அரை இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் எகிப்தை தோற்கடித்து முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியது.
ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் வேலவன் செந்தில்குமார் 7-1, 7-3, 7-6 என்ற நேர் செட்டில் வென்றார்.
மற்றொரு ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் அபய் சிங் 3-1 என்ற செட் கணக்கில் வென்றார்.
பெண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை அனாஹத் சிங் 6-7, 7-5, 7-3, 3-7, 7-3 என 3-2 என்ற செட் கணக்கில் வென்றார்.
இந்திய அணி இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் ஹாங்காங் அணியை எதிர்கொள்கிறது.
- 2025-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி வெளியிட்டது.
- இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய வீரர் விராட் கோலி மட்டுமே ஆவார்.
ஒவ்வொரு ஆண்டும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளைத் தேர்வு செய்து ஐ.சி.சி. கவுரவித்து வருகிறது.
ஆண்டு முழுவதும் வீரர், வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்ட விதத்தைக் கணக்கில் கொண்டு இந்த கவுரவத்துக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
இதற்கிடையே, 2025-ம் ஆண்டிற்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதுக்கு 10 வீரர்களின் பெயர்களை ஐ.சி.சி. பரிந்துரை செய்துள்ளது. இதில் இடம்பெற்றுள்ள 10 வீரர்களின் விவரம் குறித்த தகவல் வெளியானது.
அதன்படி, இந்தியாவின் விராட் கோலி, தென் ஆப்பிரிக்காவின் மேத்யூ பிரீட்ஸ்கே, இங்கிலாந்தின் ஜோ ரூட் மற்றும் அடில் ரஷீத், வெஸ்ட் இண்டீசின் ஷாய் ஹோப் மற்றும் ஜெய்டன் சீல்ஸ், நியூசிலாந்தின் டேரில் மிச்செல், மேட் ஹென்றி மற்றும் மிட்சல் சாண்ட்னர், ஜிம்பாப்வேவின் சிக்கந்தர் ராசா உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.
ஆனால் இந்த பட்டியல் போலியானது என்று தெரிய வந்துள்ளது. ஏனெனில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அதன் வருடாந்திர விருதுகளுக்கான பரிந்துரைகள் குறித்து எந்தஅதிகாரபூர்வ அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.






