என் மலர்
தலைப்புச்செய்திகள்
- மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துரைமுருகன் விரைவில் மீண்டு வர விரும்புகிறேன்.
- சட்டசபையை கண்ணியத்துடனும் கட்டுப்பாட்டுடனும் நடத்திய சபாநாயகர் அப்பாவு அவர்களுக்கு நன்றி.
சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* உடல்நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துரைமுருகன் விரைவில் மீண்டு வர விரும்புகிறேன். அவருக்கு என் நன்றி.
* குறைகளை சுட்டிக்காட்டுவதில் கண்ணியத்தை கடைபிடித்த எதிர்க்கட்சி தலைவருக்கு நன்றி.
* சட்டசபையை கண்ணியத்துடனும் கட்டுப்பாட்டுடனும் நடத்திய சபாநாயகர் அப்பாவு அவர்களுக்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.
- பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவது என்பது தனது சொந்த முடிவு அல்ல.
- அணியின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வாழ்த்துகிறேன்.
டி20 உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றுகள் இன்றுடன் முடிவடைகிறது. இன்றைய கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஓமன் அணிகள் மோதுகிறது.
இந்த தொடரில் டி குரூப்பில் இடம் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று கனடாவுடன் மோதியது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆப்கானிஸ்தான் அணி 4 போட்டிகளில் 2 வெற்றி 2 தோல்வியுடன் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக ஜொனாதன் ட்ராட் கண்ணீருடன் கூறியுள்ளார்.
தனது ஓய்வு குறித்து அவர் கூறியதாவது:-
பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவது என்பது தனது சொந்த முடிவு அல்ல. இது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முடிவு. இதற்கான நேரம் சரியானதா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அணியின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வாழ்த்துகிறேன்.
கடந்த மூன்றரை ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான் அணி அடைந்த முன்னேற்றத்தைக் கண்டு பெருமைப்படுகிறேன். குறிப்பாக வீரர்கள் களத்திற்கு வெளியிலும் முன்னேற்றம் கண்டு, அவர்களது குடும்பத்தின் பொருளாதார நிலையை மாற்றியதைக் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
எனது எதிர்காலத் திட்டம் குறித்து தற்போதைக்குத் தெரியவில்லை. சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு அடுத்தகட்ட முடிவை எடுக்கப்போகிறேன். எப்போதாவது ஒருமுறை தனது சொந்த நாடான இங்கிலாந்து அணிக்கு பயிற்சியாளராகும் வாய்ப்பு கிடைத்தால் அதை விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
- எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை சிறப்பாக கையாண்டிருக்கிறேன்.
- எனக்கும், ஆளுநருக்கும் தனிப்பட்ட முறையில் எந்த முரணும் கிடையாது.
சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* 5 ஆண்டுகள் ஆட்சி குறித்த மனநிறைவோடு நான் உங்கள் முன்னால் நிற்கிறேன்.
* எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை சிறப்பாக கையாண்டிருக்கிறேன்.
* தமிழகத்தின் சுயமரியாதைக்கு இழுக்கு வந்தால் அதனை எதிர்க்கும் முதல் நபராக நான் இருப்பேன்.
* தமிழகத்தின் 234 தொகுதிகளையும் எனது தொகுதிகளாக பாவித்து பணியாற்றி வருகிறேன்.
* வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்ற பாகுபாடும் இன்றி பணியாற்றி இருக்கிறேன்.
* அடுத்த 2 மாதத்தில் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்.
* எனக்கும், ஆளுநருக்கும் தனிப்பட்ட முறையில் எந்த முரணும் கிடையாது.
* தமிழ்நாட்டை இன்னும் வலிமையாக்கும் நம்பிக்கையை பெற்றுள்ளோம். மீண்டும் ஆட்சிக்கு வந்து திட்டங்களை தொடர்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது
- சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வருடன் ஓ.பி.எஸ். சந்திப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடையும் நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்.
தேர்தல் தொடர்பாக எந்த முடிவும் எடுக்காத நிலையில் சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பு நடந்தது. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், ஓ.பி.எஸ்.-இன் அடுத்தக்கட்ட நகர்வுகள் பற்றி தெளிவற்ற சூழல் நிலவும் நிலையில், இருவரின் சந்திப்பு தமிழக அரசியல் களத்தில் ஏற்பட போகும் மாற்றத்திற்கான முன்னோட்டமாக இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்த தவறவில்லை.
- பாஜகவைப் பற்றி விஜய் பேசவில்லை என்பது தவறு.
- பாஜகவுடன் கூட்டணி இல்லை என விஜய் கூறிவிட்டார்.
த.வெ.க-வுக்கு பா.ஜ.க அழுத்தம் கொடுக்கத் தொடங்கி உள்ளதாக தவெகவின் நிர்வாகி அருண்ராஜ் அழுத்தமாக பதிவு செய்துள்ளார். சிபிஐ விசாரணை, 'ஜனநாயகன்' படப் பிரச்னை மூலமாக பாஜக அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளதாக அவர் பேட்டி அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
தமிழக வெற்றிக் கழகத்திற்கு மதுரை மட்டுமல்லாது தமிழகம் முழுவதிலும் பெருகிவரும் ஆதரவால் பெரும்பான்மை யான தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழகக் வெற்றிக் கழகம் ஆட்சியை பிடிக்கும்.
ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பது தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை முடிவு. இதனை முதல் மாநாட்டிலேயே விஜய் அறிவித்தார். கூட்டணிக்கு கட்சிகள் வருவார்கள் என எதிர்பார்த்து அதனை அறிவிக்கவில்லை. இதனை எந்த கட்சியும் சொல்ல வில்லை. சமூக நீதி அடிப்ப டையில் செயல்படும் த.வெ.க. தான் சொல்லி இருக்கிறது.
தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்து இருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, தி.மு.க. ஆட்சியின் மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கும் நேரத்தில் தோல்வி அடையும் கட்சியோடு தே.மு.தி.க. சேர்ந்து இருப்பதால் அவர்களும் தோல்வி அடைவார்கள்.
கூட்டணி குறித்த முடிவுகளை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் எடுப்பார். 90 சதவீத மக்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக இருக்கிறார்கள். இளைஞர்களை அரசியல் நோக்கி இழுத்தது தமிழக வெற்றிக் கழகம் தான்.
தி.மு.க. அவசர அவசரமாக தே.மு.தி.க. உள்ளே கொண்டு வந்ததன் காரணம் என்ன? தேர்தல் பயம் தி.மு.க.விற்கு வந்துவிட்டது என்பதை இது காட்டுகிறது.
ஆளும் தி.மு.க.விற்கு கூட்டங்கள் நடத்த உடனடியாக அனுமதி கிடைக்கிறது. ஆனால் தமிழக வெற்றிக் கழகத்திற்கு நூற்றுக்கணக்கான விதிமுறைகள், அனுமதி மறுப்பு என தடைகளை ஆளும் கட்சியினர் செய்கிறார்கள்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதல் மாநாட்டிலேயே கொள்கை எதிரி பா.ஜ.க., அரசியல் எதிரி தி.மு.க. என இரண்டு ஆளும் கட்சிகளை அறிவித்துவிட்டார். பா.ஜ.க. பல்வேறு அழுத்தங்களை கொடுக்க முயற்சி செய்தது. தற்பொழுது ஜனநாயகன் படம் நிறுத்தம், சி.பி.ஐ. விசாரணை என அழுத்தம் கொடுத்து வருகிறது. மதவாத பா.ஜ.க.வுடன் கூட்டணியில்லை என விஜய் அறிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டு விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷின் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் `லக்கி தி சூப்பர் ஸ்டார்'. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், லக்கி திரைப்படம் நேரடியாக ஓ.டி.டி.-யில் வெளியானது.
ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியான "லக்கி" திரைப்படத்தை கந்தசாமி மற்றும் புஷ்பா கந்தசாமி தயாரித்துள்ளனர். இந்தப் படத்தில் அனஸ்வரா ராஜன், மேக்னா சுமேஷ், தேவதர்ஷினி, இளங்கோ குமரவேல், உதய் மகேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
மாயமான நாய் குட்டி "லக்கி" அரசியல்வாதிகளிடம் சிக்கிக்கொள்ள அதனை கதாநாயகன் மீட்பதே கதைக்கருவாக அமைக்கப்பட்டுள்ளது. உதய் மகேஷ் இயக்கத்தில் "லக்கி" திரைப்படம் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியாகி இருப்பது ரசிகர்களை மகழிச்சியில் ஆழ்த்தியுள்ளது.
- திராவிட மாடல் அரசானது சமூகநீதியை காப்பதற்காக என்றென்றும் போராடும்.
- ரூ.1000 கொடுப்பதை தடுத்து நிறுத்த நினைத்தால் ரூ.5000 கொடுப்பேன் என்கிறார் முதலமைச்சர்
2026-27-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை கடந்த 17-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து சட்டசபையில் 2 நாட்களாக நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* சமூக நீதி அடிப்படையிலான திராவிட மாடல் அரசின் கொள்கைகள் நாட்டிற்கே வழிகாட்டுகிறது.
* பெரியார் வழியில் வந்த திராவிட மாடல் அரசு சமூகநீதியைக் காத்து நிலைநாட்டிட பாடுபட்டு வருகிறது.
* திராவிட மாடல் அரசானது சமூகநீதியை காப்பதற்காக என்றென்றும் போராடும்.
* சமூகநீதிக்கு பங்கம் வரும்போதெல்லாம் தமிழ்நாடு உரத்த குரல் கொடுக்கும்.
* மெட்ரோ ரெயில் திட்டம், ஜல் ஜீவன் திட்டத்திற்கு நிதி தருவதை மத்திய பா.ஜ.க. அரசு நிறுத்தி வைத்துள்ளது.
* மகளிர் உரிமைத்தொகையை நிறுத்த முற்பட்டால் தமிழ்நாடே கொந்தளிக்கும்.
* அந்த கொந்தளிப்பு இருக்கும்வரை தமிழ்நாட்டை ஸ்டாலின் ஆள்கிறார் என்றே அர்த்தம்.
* மகளிர் உரிமைத்தொகை திட்டமானது நாட்டிற்கே வழிகாட்டும் திட்டமாக உள்ளது.
* தமிழ்நாட்டில் 1.31 கோடி மகளிருக்கு ரூ.5,000 உதவித்தொகை வழங்கி உள்ளார் முதலமைச்சர்.
* ரூ.1000 கொடுப்பதை தடுத்து நிறுத்த நினைத்தால் ரூ.5000 கொடுப்பேன் என்கிறார் முதலமைச்சர்
* தமிழ்நாடு பிற மாநிலங்களுடன் போட்டி போடவில்லை. வளர்ந்த நாடுகளுடன் போட்டி போடுகிறது.
* தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் தான் தமிழ்நாடு போட்டி போடுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தவெக சார்பில் புதிய உத்தரவை அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
- வரும் 1ம் தேதி முதல் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்த உத்தரவு.
அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களின் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் சூடுப்பிடித்துள்ளது.
ஒரு பக்கம் கூட்டணி தாவும் கட்சிகள், மறுபக்கம் தேர்தல் பிரச்சாரக் களத்திலும் இறங்கியுள்ளன.
இந்நிலையில், தவெக சார்பில் புதிய உத்தரவை அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்த விஜய் உத்தரவிட்டுள்ளது.
வரும் 1ம் தேதி முதல் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்த உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் பணிகள் தொடர்பாக நிர்வாகிகளை வழிநடத்த மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- பா.ம.க.வை தி.மு.க.வில் சேர்க்க வேண்டாம் என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை.
- விஜய்யுடன் ஒரு கட்சி கூட இதுவரை கூட்டணி சேரவில்லை.
செஞ்சி:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அம்பேத்கர் மக்கள் கட்சியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் இணைப்பு, தலித் இளைஞர்களின் அரசியல் எழுச்சி மற்றும் ஒன்று சேர் மாநாடு, 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு நிதியளிப்பு விழா என நடைபெற்ற முப்பெரும் விழா மற்றும் செஞ்சி தொகுதி மாவட்ட செயலாளர் அலுவலகம் திறப்பு விழா ஆகியவை செஞ்சி-விழுப்புரம் சாலையில் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி கலந்து கொண்டார். அவர் வக்கீல் மழைமேணிபாண்டியன் மற்றும் அவரது தலைமையில் இணைந்த முக்கிய நிர்வாகிகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சால்வை அணிவித்து வரவேற்றார். இதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது :-
அம்பேத்கர் மக்கள் கட்சி வேற எந்த அரசியல் கட்சியிலும் இணையாமல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் இணைந்தது அவர்களின் அம்பேத்கர் கொள்கை பற்றை காட்டுகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் உள்ளவர்கள் புயலே அடித்தாலும் என்னை விட்டு போகாமல் இருப்பதே எனக்கு வியப்பை தருகிறது.விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தவுடன் வி.சி.க.வினர் அங்கு போய்விட்டார்கள் என்று சொன்னார்கள்.
ஆனால் அதற்கு பிறகு தான் வி.சி.க. மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளது. அம்பேத்கர் பெயரில் கட்சி நடத்துவது அவரது கொள்கைகளை பின்பற்றும் அமைப்புகளை பெயரளவிற்கு மட்டுமே ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் அங்கீகாரம் பெற்றது சாதாரணமான விஷயம் அல்ல. நடிகர் ரஜினிகாந்த் சொல்வது போல் ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்னது போல் வி.சி.க. ஒரு எம்.எல்.ஏ.மற்றும் எம்.பி. பெற்றால் நூறு பேரை பெற்றதை போன்றது.
மேலும் திருமாவளவன் அ.தி.மு.க. கூட்டணி மற்றும் விஜய் கூட்டணியில் சேர முடியாதா? என்றால் முடியும். ஆனால் பா.ஜ.க. தமிழ்நாட்டில் கால் ஊன்ற கூடாது என்பதால் தி.மு.க. கூட்டணியில் தொடர்கிறோம். 5 சீட்டு 6 சீட்டுக்கு தி.மு.க.வுடன் இருக்கிறீர்கள் என்று நம்மை ஆத்திர மூட்டுவார்கள். இதற்கு எல்லாம் திருமாவளவன் அசைந்து கொடுக்கவில்லை. நாங்கள் கொள்கை கூட்டணியில் இருக்கிறோம். பா.ஜ.க. கட்சி தமிழ்நாட்டில் காலூன்ற பார்க்கிறது. அதற்கு அதிமுக கட்சியின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவி காவிய கொடியை ஏற்ற பார்க்கிறார்கள்.அதனால் தான் பல வழிகளில் பெரியாரை குறி வைத்து விமர்சனம் செய்கிறார்கள். காங்கிரஸ் கட்சியில் பல்வேறு தலித் தலைவர்கள் தேசிய அளவில் இருந்த போதும் அம்பேத்கரை முன்னிறுத்தினார் பெரியார். எதனால் சனாதான தர்மத்தை அழிக்க வேண்டும் என்பது தான் இருவரின் நோக்கமும் அதுதான். அம்பேத்கர் பேசினதை தான் பெரியார் பேசினார். திமுகவை பலவீனபடுத்தினால் அது பெரியார் அரசியலை பலவீனம் படுத்தும் அரசியல் ஆகும்.
பா.ம.க.வை தி.மு.க.வில் சேர்க்க வேண்டாம் என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. நான் ஒருபோதும் அப்படி நெருக்கடி கொடுக்கவில்லை. எங்கள் கட்சி நலன் காரணமாக தான் பா.ம.க. இடம் பெறும் கூட்டணியில் இடம் பெற மாட்டோம் என்று ஏற்கனவே சொல்லி விட்டோம். அதற்கு தர்மபுரி நாயக்கன் கொட்டாய் சம்பவமும் அதனைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட தலித் அல்லாத கூட்டணி என்ற சோசியல் என்ஜினியரிங் தான் முக்கிய காரணம். எங்களுக்கு எம்.எல்.ஏ., எம்.பி இல்லை என்றாலும் அம்பேத்கர் கொள்கையை கடைபிடிக்கிறோம். அந்த வகையில் வேற கட்சியில் இணையாமல் அம்பேத்கர் மக்கள் கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்துள்ளதை வரவேற்கிறோம். தி.மு.க. கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெறும்.அதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி காரணமாக இருக்க வேண்டும்.
தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்துள்ளது. இது எடப்பாடிக்கு தலைமையில் இடியே விழுந்து போல் இருக்கும். உரிமை தொகை 5 ஆயிரம் வழங்கியபோது அவருக்கு அடி வயிற்றில் இடி விழுந்தது போல் இருக்கும்.இப்போது தே.மு.தி.க . தி.மு.க. உடன் கூட்டணியில் இணைந்தது எடப்பாடிக்கு உச்சந்தலையில் இடி விழுந்தது போல் இருக்கும். விசில் காரங்க ஆட்சியில் பங்கு தர நாங்க ரெடி நீங்க ரெடியா என்று கேட்டார்கள். ஆட்சியில் பங்குக்கு நாங்க ரெடி அதை எங்களால் அமைத்துக் கொள்ள முடியும் ஆனால் உங்க கூட வர நாங்க ரெடி இல்லை என்று சொல்லி விட்டோம். விஜய்யுடன் ஒரு கட்சி கூட இதுவரை கூட்டணி சேரவில்லை. அதே போல் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர கட்சிகள் தயக்கம் காட்டுகின்றனர்.
தி.மு.க. கூட்டணி வெற்றி பெற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தீவிரமாக களப்பணி ஆற்ற வேண்டும்.
இவ்வாறு தொல் திருமாவளவன் பேசினார்.
மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில், 'ராக்கிங் ஸ்டார்' யஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் டாக்ஸிக்.
1940 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில், கோவாவில் நிலவிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாஃபியா கும்பல்களை மையமாகக் கொண்ட ஆக்ஷன் த்ரில்லர் கதையாக இது உருவாகியுள்ளது.
இப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா மற்றும் ருக்மிணி வசந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் மார்ச் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் இப்படத்தின் டீசர் இன்று காலை வெளியானது.
- தேர்தல் வாக்குறுதிகள் எதையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை.
- தி.மு.க. விடியா ஆட்சியின் மதிப்பெண் அட்டையை வெளியிட்டார்.
சட்டசபை வளாகத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தேர்தல் வாக்குறுதிகள் எதையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை.
* மக்கள் பணியில் கவனம் தேவை எனக்குறிப்பிட்டு தி.மு.க. விடியா ஆட்சியின் மதிப்பெண் அட்டையை அவர் வெளியிட்டார்.
- தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.14,420-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், பிறகு ஏற்ற-இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 16-ந்தேதியில் இருந்து தொடர்ந்து 3 நாட்கள் விலை சரிந்து காணப்பட்டது.
கடந்த 16-ந்தேதியில் இருந்து 18-ந்தேதி வரையிலான அந்த 3 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.330-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 640-ம் குறைந்து இருந்தது. தொடர்ந்து சரிந்து வந்த தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்வை சந்தித்தது. அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 230-க்கும். ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 840-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.270-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 160-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 500-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,15,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.14,420-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
19-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,000
18-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,840
17-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,560
16-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,520
15-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,480
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
19-02-2026- ஒரு கிராம் ரூ.270
18-02-2026- ஒரு கிராம் ரூ.260
17-02-2026- ஒரு கிராம் ரூ.265
16-02-2026- ஒரு கிராம் ரூ.265
15-02-2026- ஒரு கிராம் ரூ.280






