என் மலர்
தலைப்புச்செய்திகள்
- பாஜக 46 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 24 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது
- அரவிந்த் கெஜ்ரிவால், அதிஷி ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.
ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
பலத்த பாதுகாப்புடன் நடந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்து கணிப்புகளில், பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு இன்னைக்கி தொடங்கியதில் இருந்தே பாஜக பல இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.
தற்போதுவரை பாஜக 46 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 24 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. குறிப்பாக ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால் அதிஷி ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக எம்.பி. யோகேந்திர சந்தோலியா, "பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்த டெல்லி மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். கெஜ்ரிவால் எல்லா மாடல்களிலும் சரிந்துள்ளார். கெஜ்ரிவால் திகார் சிறைக்கு செல்வது உறுதி. அவர் முதல்வர் ஆக விரும்பினார் ஆனால் இனி அவர் எம்.எல்.ஏ.வாக கூட இருக்கப் போவதில்லை. பாஜக மேலிடத்தால் தேர்ந்தெடுக்கப்படும் எந்தக் கட்சித் தொண்டனும் டெல்லியின் அடுத்த முதல்வர் ஆவார்" என்று அவர் தெரிவித்தார்.
- எஸ்.ஏ.20 இறுதிப்போட்டியில் எம்.ஐ.கேப்டவுனும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும் மொத்தமுள்ளது.
- ஒரு கேப்டனாக சில நேரங்களில் திட்டங்களை மறக்க நேரிடுகிறது.
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 லீக் தொடரான ஐ.பி.எல். போன்று தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20) கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 3-வது சீசன் தற்போது நடந்து வருகிறது.
மொத்தம் 6 அணிகள் பங்கேற்று விளையாடின. இதன் லீக் சுற்று ஆட்டங்கள் கடந்த 2-ம் தேதி நிறைவடைந்தன. லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த பார்ல் ராயல்ஸ், எம்.ஐ.கேப்டவுன், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன.
தகுதிச்சுற்று 1 ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணியை எம்.ஐ.கேப்டவுன் அணி வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதனையடுத்து, நேற்று நடைபெற்ற தகுதிச்சுற்று 2 ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப்போட்டியில் எம்.ஐ.கேப்டவுன் அணியும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும் மொத்தமுள்ளது. கடந்த 2 டி20 லீக் தொடரிலும் வேற்று கோப்பையை கைப்பற்றிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி ஹாட் ட்ரிக் முறையாக கோப்பையை கைப்பற்றுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இந்நிலையில், எஸ்.ஏ.20 அரையிறுதிக்கும் இறுதிப்போட்டிக்கும் இடையே இருந்த இடைவெளியில் என்ன செய்தீர்கள் என்று எம்.ஐ.கேப்டவுன் அணி கேப்டன் ரஷித் கானிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், "நான் தற்போது PRISON BREAK என்ற இணைய தொடரை பார்த்து வருகிறேன். சவாலான சூழல்களில் இருந்து எப்படி மீண்டு வருவது என அதிலிருந்து கற்று வருகிறேன். ஒரு கேப்டனாக சில நேரங்களில் திட்டங்களை மறக்க நேரிடுகிறது. அதனால், தோன்றும் விஷயங்களை கையில் எழுதி வைத்து அடுத்தடுத்த ஓவர்களில் பயன்படுத்துவேன்" என்று தெரிவித்தார்.
- ஓசூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
- பெங்களூருவில் இருந்து சுமார் 35 கி.மீ. தூரத்தில் உள்ள நெலமங்களா, கனகபுரா ஆகிய இடங்களில் 4400 ஏக்கர் நிலங்களை தேர்வு செய்து உள்ளனர்.
பெங்களூரு:
பெங்களூருவில் கெம்பேகவுடா சர்வதேச விமானம் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து உலகின் பல நாடுகளுக்கும் நேரடியாக விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. பெங்களூருக்கு அருகில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அமைந்துள்ளது. இங்கு சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனங்களில் உற்பத்தியாகும் பொருட்கள் மற்றும் இங்கு வந்து செல்பவர்கள் பெங்களூரு விமான நிலையத்தை அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இதுதவிர ஓசூர் பகுதியில் சாகுபடி செய்யப்படும் ரோஜா மலர்கள் மற்றும் கொய்மலர்கள் உலகின் பலநாடுகளுக்கும் பெங்களூரு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து விமானத்தில் அனுப்பி வைக்கப்படுகிறது.
இதையடுத்து ஓசூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலை பெற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கர்நாடக அரசும் பெங்களூருவில் 2-வதாக புதிய விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக பெங்களூருவில் இருந்து சுமார் 35 கி.மீ. தூரத்தில் உள்ள நெலமங்களா, கனகபுரா ஆகிய இடங்களில் 4400 ஏக்கர் நிலங்களை தேர்வு செய்து உள்ளனர்.
பெங்களூரு சர்வதேச விமான நிலையம் 2033-ம் ஆண்டுக்குள் பயணிகள் வருகை 90 மில்லியனை எட்டும் என்று கணித்துள்ளதால் புதிய விமான நிலையத்துக்கு இடம் தேர்வு செய்து மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சத்துக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் பெங்களூரு தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இருந்து பயணிக்கும் பயணிகளுக்கு நெலமங்களா, கனகபுரா பகுதியில் விமான நிலையம் அமைந்தால் சிறப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
- அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்படும் எந்த நாட்டு குடிமக்களையும் வரவேற்பதாக லத்தீன் அமெரிக்க நாடான எல்- சால்வடோர் தெரிவித்தது .
- இந்த மக்கள் ஒருபோதும் நல்லவர்களாக இருக்கப் போவதில்லை, எனவே அவர்களை அங்குள்ள சிறைக்கு அனுப்புவது சிறந்தது
சட்டவிரோத குடியேற்றம்
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்து வருபவர்களை நாடு கடத்த அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.
குற்றப்பின்னணி கொண்டவர்கள் என்றும் அவர்களால் அமெரிக்காவில் பல்வேறு குற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன என்றும் நாடுகடத்தலை டிரம்ப் நியாயப்படுத்தி வருகிறார். பிரேசில், கொலம்பியா, இந்தியா ஆகிய நாட்டினர் நூற்றுக்கணக்கானோர் ஏற்கனவே நாடுகடத்தப்பட்டனர்.
அமெரிக்காவில் ஆவணங்களின்றி தங்கியுள்ளவரை தேடும் பணியில் அந்நாட்டு குடிவரவு (கஸ்டம்ஸ்) அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதற்கிடையே அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்படும் எந்த நாட்டு குடிமக்களையும் வரவேற்பதாக லத்தீன் அமெரிக்க நாடான எல்- சால்வடோர் தெரிவித்தது .

எல்- சால்வடோர் ஒப்பந்தம்
கடந்த திங்கள்கிழமை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, எல் சால்வடோர் அதிபர் நயீப் புக்கேல் (Nayib bukele) சந்திப்பு நிகழ்ந்தது.
இதன்பின் பேசிய மார்கோ ரூபியோ, அமெரிக்காவில் உள்ள எந்தவொரு சட்டவிரோத வெளிநாட்டினரையும் தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும் அமெரிக்காவை சேர்ந்த ஆபத்தான கைதிகளையும் தாங்கள் ஏற்றுக்கொள்வதாக நயீப் புக்கேல் உறுதி அளித்துள்ளார்.
அவர்களை தங்கள் நாட்டு சிறையில் அடைத்து வைக்கும் திட்டத்தை புக்கேல் முன்வைத்துள்ளார் . அவ்வாறு எல் சால்வடோருக்கு நாடு கடத்தப்படுபவர்கள் CECOT எனப்படும் மிகப்பெரிய அதி பாதுகாப்பு வாய்ந்த சிறையில் அடைக்கும் திட்டத்தை புக்கேல் டிரம்பிடம் முன்மொழித்துள்ளார் என்று தெரிவித்தார்.

இங்கு கைதிகள் ஜன்னல்கள் இல்லாத அறைகளில் அடைக்கப்படுவர். மெத்தை இல்லாமல் இரும்புப் படுக்கைகளில்தான் தூங்க வேண்டும். உறவினர்கள், நண்பர்கள் என யார் வந்து பார்ப்பதற்கும் தடை விதிக்கப்படும். அவர்கள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுவர்.
இந்த திட்டம் குறித்து தனது ஓவல் அலுவலகத்தில் பேட்டியளித்த டொனால்டு டிரம்ப், குற்றவாளிகளை எல் சால்வடாருக்கு அனுப்புவது தனியார் சிறைகளுக்கு நாம் செலுத்தும் கட்டணத்துடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த கட்டணமாக இருக்கும். இந்த மக்கள் ஒருபோதும் நல்லவர்களாக இருக்கப் போவதில்லை, எனவே அவர்களை அங்குள்ள சிறைக்கு அனுப்புவது சிறந்தது. இந்த திட்டத்தை பரிசீலித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

ஆனந்த் மஹிந்திரா
இந்நிலையில் இதுகுறித்து இந்திய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா கருத்து தெரிவித்துள்ளார். எல் சால்வடார் அதிபர் நயீப் புக்கேல் எக்ஸ் பதிவை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா, இது ஒரு [மோசமான] அவுசோர்சிங் வாய்ப்பு, இந்தியா இதுபோன்ற வாய்ப்பை [அமெரிக்காவுக்கு] வழங்காது என்று தான் நம்புவதாக தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அடுத்த வாரம் அமெரிக்கா சென்று டிரம்பை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்ட இந்தியர்கள் கை கால்கள் விலங்கிடப்பட்டு கீழ்த்தரமாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ஒரு உறவை முறித்துக் கொள்வதற்கு முன் நான் 1000 முறை யோசிப்பேன்
- நானும் சமந்தாவும் தங்களது சொந்த காரணங்களுக்காக விவாகரத்து முடிவை எடுத்தோம்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. இவர் பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் மகன் ஆவார். தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள நாக சைதன்யா நடிகை சமந்தாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
எனினும், தவிர்க்க முடியாத காரணங்களில் திருமண வாழ்வில் பிரிவிதாக நாக சைதன்யா மற்றும் சமந்தா முறையே 2021 இல் அறிவித்தனர்.
இதனையடுத்து கடந்தாண்டு நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபலாவை திருமணம் செய்தார்.
இந்நிலையில், நடிகை சமந்தாவை விவாகரத்து செய்தது தொடர்பாக நாக சைதன்யா மனம் திறந்து பேசியுள்ளார்.
அண்மையில் கொடுத்த பேட்டியில் பேசிய நாக சைதன்யா, "நானும் சமந்தாவும் தங்களது சொந்த காரணங்களுக்காக விவாகரத்து முடிவை எடுத்தோம். நாங்கள் ஒருவருக்கொருவரை மதிக்கிறோம். இதற்கு இன்னும் என்ன விளக்கம் தேவை என்று எனக்கு புரியவில்லை.
திருமண உறவில் இருந்து பிரிந்து நாங்கள் இருவரும் எங்களது சொந்த வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம். ஆனால் ஏன் என்னை கிரிமினல் போல நடத்துகிறீர்கள்?
நான் 'உடைந்த' குடும்பத்திலிருந்து வந்தவன். எனவே அந்த அனுபவம் எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும். ஒரு உறவை முறித்துக் கொள்வதற்கு முன் நான் 1000 முறை யோசிப்பேன், ஏனென்றால் அதனால் ஏற்படும் பின்விளைவுகளை பற்றி நான் நன்றாக அறிவேன். இது இருவரும் சேர்ந்து எடுத்த பரஸ்பர முடிவு" என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வாக்கு எண்ணிக்கை 17 சுற்றுகள் கொண்டது.
- வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் முன்னிலை வகித்து வருகிறார்.
ஈரோடு:
கடந்த 5-ந்தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் மொத்தம் 46 பேர் போட்டியிட்டுள்ளனர். இருப்பினும் திமுக, நாம் தமிழர் கட்சியிடையே போட்டி நிலவியது.
இதனை தொடர்ந்து, தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதனை தொடர்ந்து வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை 17 சுற்றுகள் கொண்டது.
இதில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் முன்னிலை வகித்து வருகிறார். அவர் இதுவரை 27,640 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 4,107 வாக்குகள் பெற்றுள்ளார்.
இவர்களை தவிர மற்ற வேட்பாளர்கள் அனைவரும் சொற்ப வாக்குகளே பெற்றுள்ளனர். இதனிடையே, இத்தேர்தலில் திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை தொடர்ந்து நோட்டா 769 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
- முதலில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் செலுத்திய தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது.
- நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 4,107 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் செலுத்திய தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டது.
தற்போதைய நிலவரப்படி தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் 27,642 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 4,107 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
- தை மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.
- பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது.
மலையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
இதில் கார்த்திகை தீப விழாவின்போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பவுர்ணமி அன்றும் சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்
இந்த நிலையில் தை மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.
அதன்படி வருகிற 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 7.59 மணிக்கு பவுர்ணமி தொடங்கி மறுநாள் 12-ந்தேதி (புதன்கிழமை) இரவு 8.16 மணிக்கு நிறைவடைகிறது. 11-ந்தேதி இரவு பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரமாக கோவில் நிர்வாகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வருகிற 11-ந்தேதி தைப்பூசம் வருவதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும், பவுர்ணமி கிரிவலம் செல்லவும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- பாஜக 41 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 29 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.
- அரவிந்த் கெஜ்ரிவால் ஆரம்பகட்ட வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவை சந்தித்தனர்.
டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.
ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
பலத்த பாதுகாப்புடன் நடந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்து கணிப்புகளில், பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு இன்னைக்கி தொடங்கியதில் இருந்தே பாஜக பல இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.
தற்போதுவரை பாஜக 42 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 28 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.
ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி முதல்வர் அதிஷி ஆகியோர் ஆரம்பகட்ட வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவை சந்தித்தனர். பின்னர் அடுத்தகட்ட வாக்கு எண்ணிக்கையில் அரவிந்த கெஜ்ரிவால் மற்றும் அதிஷி ஆகியோர் முன்னிலை பெற்றுள்ளனர்
- நேற்று தங்கம் விலை மாற்றமின்றி ரூ.63,440-க்கு விற்பனையானது.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
சென்னை:
தங்கம் விலை கடந்த ஒரு மாதத்தில் 'கிடுகிடு'வென உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. ரூ.60 ஆயிரத்தை தொட்டுவிடுமோ? என்று நினைத்ததெல்லாம் மாறி இப்போது ரூ.65 ஆயிரத்தையும் தொட்டுவிடுமோ? என நினைக்க வைத்துவிட்டது. அந்த அளவுக்கு அதன் விலை அதிகரித்து வருகிறது.
கடந்த 1-ந்தேதி, தங்கத்தின் விலை வரலாறு காணாத ஒரு புதிய உச்சத்தை எட்டியது. அன்று ஒரு கிராம் தங்கம் ரூ.7 ஆயிரத்து 790-க்கும், ஒரு சவரன் ரூ.62 ஆயிரத்து 320-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை அடைகிறது.
இந்த நிலையில், வார இறுதிநாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,945-க்கும் சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,560-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 107 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
07-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,440
06-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,440
05-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,240
04-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 62,480
03-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 61,640
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
07-02-2025- ஒரு கிராம் ரூ.107
06-02-2025- ஒரு கிராம் ரூ.107
05-02-2025- ஒரு கிராம் ரூ.107
04-02-2025- ஒரு கிராம் ரூ.106
03-02-2025- ஒரு கிராம் ரூ.107
- மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டது.
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் செலுத்திய தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டது.
காலை 9 மணி நிலவரப்படி தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் 7837 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 1,081 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
- டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது.
- முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர். ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது.
இதனை தொடர்ந்து டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் காலை 8.50 மணி நிலவரப்படி பா.ஜ.க. 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
விஸ்வாஸ் நகர் மற்றும் ஷாஹ்தாரா ஆகிய தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. விஸ்வாஸ் நகரில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் ஓம் பிரகாஷ் சர்மா 4997 வாக்குகளும், ஷாஹ்தாரா தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் சஞ்சய் கோயல் 3666 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இதனிடையே, ஆம் ஆத்மி சார்பில் புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட அர்விந்த் கெஜ்ரிவால், கல்காஜி தொகுதியில் போட்டியிட்ட அதிஷி ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.






