search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Atishi"

    • பா.ஜனதா அதன் பிரிவான அமலாக்குத்துறை மூலமாக கெஜ்ரிவால் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்க முயற்சி செய்கிறது.
    • கெஜ்ரிவாலுக்கு வீட்டில் சமைத்து வழங்கப்படும் உணவை நிறுத்துவதற்கு முயற்சி செய்கிறார்கள்.

    கெஜ்ரிவால் ஜாமின் பெறுவதற்கான இனிப்பு வகைகள் மற்றும் மாம்பழங்கள் சாப்பிடுகிறார் என அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இனிப்பு அதிகமாக சாப்பிட்டு ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து அதன்மூலம் ஜாமின் பெற முயற்சிப்பதாக தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் பொய் சொல்கிறது. அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்வதற்கு மிகப்பெரிய சதி நடக்கிறது என டெல்லி மாநில மந்திரி அதிஷி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அதிஷி கூறியதாவது:-

    பா.ஜனதா அதன் பிரிவான அமலாக்குத்துறை மூலமாக கெஜ்ரிவால் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்க முயற்சி செய்கிறது. கெஜ்ரிவாலுக்கு வீட்டில் சமைத்து வழங்கப்படும் உணவை நிறுத்துவதற்கு முயற்சி செய்கிறார்கள். சர்க்கரையுடன் தேனீர் குடிப்பதாகவும், இனிப்புகள் சாப்பிடுவதாகவும் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் பொய் கூறியுள்ளது. அது முற்றிலம் பொய். கெஜ்ரிவால் கெஜ்ரிவால் செயற்கை இனிப்பை எடுத்து வருகிறார்.

    சர்க்கரை அளவு குறைவது உயிருக்கு ஆபத்தானது என்பதால் நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழம் அல்லது ஏதேனும் சாக்லேட் எடுத்துச் செல்லுமாறு டாக்டர்கள்களால் கேட்டுக்கொள்ளப்படுவார்கள். உருளைக்கிழங்குடன் பூரி சாப்பிடுவதாக அமலாக்கத்துறை சொல்கிறது. இவ்வளவு பொய் சொன்னதற்காக அமலாக்கத்துறை கடவுளுக்கு பயப்பட வேண்டும். நவராத்தியின் முதல் நாளில் மட்டும் பூரி சாப்பிட்டார். வீட்டு உணவை நிறுத்துவதற்காக இந்த பொய்கள் எல்லாம் அமலாக்கத்துறை மற்றும் பா.ஜனதாவல் பரப்பப்படுகிறது.

    கடந்த சில நாட்களில் இருந்து கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவு 300 mg/dl-க்கு அதிகமாக உள்ளது. ஆனால் திஹார் ஜெயில் அதிகாரிகளால் இன்சுலின் மறுக்கப்படுகிறது. வீட்டில் சமைத்த உணவை நிறுத்தி கெஜ்ரிவாலை கொல்ல சதி நடக்கிறது.

    இவ்வாறு அதிஷி தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
    • இன்னும் இரண்டு மாதங்களில் 4 ஆம் ஆத்மி தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள்.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்பட 3 முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் பல துறைகளை கையில் வைத்திருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி மாநில பெண் மந்திரியுமான அதிஷி, இன்னும் ஒரு மாதத்தில் தான் கைது செய்யப்படுவேன் பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார்.

    இது தொடர்பாக அதிஷி கூறியிருப்பதாவது:-

    எனக்கு மிகவும் நெருங்கியவர் மூலமாக பா.ஜனதா என்னை அணுகி, என்னுடைய அரசியல் வாழ்க்கையை பாதுகாக்க அக்கட்சியில் இணைய கேட்டுக்கொண்டது. நான் பாரதீய ஜனதாவில் இணையவில்லை என்றால், இந்த மாதத்தில் நான் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவேன்.

    மக்களை தேர்தலுக்கு முன்னதாக இரண்டு மாதங்களில் அவர்கள் இன்னும் நான்கிற்கும் அதிகமான ஆம் ஆத்மி தலைவர்களை கைது செய்வார்கள். சவுரப் பரத்வாஜ், அதிஷி, துர்கேஷ் பதாக், ராகவ் சதா உள்ளிட்டோர் கைது செய்யப்படுவார்கள்.

    இவ்வாறு அதிஷி தெரிவித்துள்ளார்.

    • டெல்லியில் 2023-24-ல் தனிநபர் வருமானம் 4 லட்சத்து 61 ஆயிரத்து 910 ஆக அதிகரித்துள்ளது.
    • டெல்லி மாநில அரசின் பணவீக்கம் 2023 ஜனவரி முதல் டிசம்பர் வரை 2.81 சதவீதமாக உள்ளது.

    டெல்லி மாநில சட்டமன்றத்தில் அம்மாநிலத்தின் நிதி மந்திரி அதிஷி பொருளாதார ஆய்வு அறிக்கையை (2023-24) தாக்கல் செய்தார். அப்போது, 2024-25-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் வருகிற 4-ந்தேதி தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

    பொருளாதார ஆய்வு அறிக்கையில் இடம் பிடித்துள்ள முக்கியம்சங்கள்:-

    டெல்லி மாநிலத்தின் வருவாய் உபரி 2022-23-ல் 14,457 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 2021-22 நிதியாண்டில் வருவாய் உபரி 3,270 கோடி ரூபாயாக இருந்தது. கெஜ்ரிவால் தலைமையிலான மாநில அரசு மட்டும்தான் நாட்டில் வருவாய் உபரி அரசாக திகழ்கிறது.

    டெல்லி மாநிலத்தின் வேலைவாய்ப்பின்மை 2022-2023-ல் 1.9 சவீதமாக குறைந்துள்ளது. 2020-21-ல் (கொரோனாவிற்குப் பிறகு) 6.3 சதவீதமாக இருந்தது.

    டெல்லியின் பணவீக்கம் 2023 ஜனவரி முதல் டிசம்பர் வரை 2.81 சதவீதமாக உள்ளது. அதே காலக்கட்டத்தின் நாட்டின் பணவீக்கம் 5.65 சதவீதமாக இருந்தது.

    2023-24-ல் தனிநபர் வருமானம் 4 லட்சத்து 61 ஆயிரத்து 910 ஆக அதிகரித்துள்ளது. 2021-22-ல் 3 லட்சத்து 76 ஆயிரத்து 217 ஆக இருந்தது. இரண்டு வருடத்தில் 22 சதவீதம் உயர்ந்துள்ளது.

    மொத்த உள்நாட்டு உற்பத்தி தற்போதைய பண மதிப்பில் 2023-24-ல் 11 லட்சத்து 7 ஆயிருத்து 746 கோடி ரூபாய் ஆகும். கடந்த வருடத்தை காட்டிலும் 9.17 சதவீதம் உயர்வு ஆகும்.

    • கடந்த இரண்டு வருடங்களாக ஆம் ஆத்மி தலைவர்கள் மிரட்டப்பட்டு வருகிறார்கள்.
    • இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட, உறுதியான ஆதாரத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

    டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் சிலரை அமலாக்கத்துறை கைது செய்து உள்ளது. அவர்கள் ஜாமின் கிடைக்காமல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன்மேல் சம்மனாக கொடுத்து வருகிறது. ஆனால் அவர் ஆஜராக மறுத்து வருகிறார்.

    இந்த நிலையில்தான் இன்று ஆம் ஆத்மி கட்சியுடன் தொடர்புடைய பலரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது தொடர்பாக டெல்லி மந்திரி அதிஷி கூறியதாவது:-

    கடந்த இரண்டு வருடங்களாக ஆம் ஆத்மி தலைவர்கள் மிரட்டப்பட்டு வருகிறார்கள். மதுபான ஊழல் என்ற பெயரில் இது நடந்து வருகிறது. சிலரின் வீடுகளில் சோதனை செய்யப்படுகிறது. சிலருக்கு சம்மன் கொடுக்கப்படுகிறது. சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் அதிகமான சோதனைகள் நடத்தப்பட்டும்கூட, அமலாக்கத்துறையால் ஒரு ரூபாய் கூட பறிமுதல் செய்யப முடியவில்லை.

    இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட, உறுதியான ஆதாரத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. நீதிமன்றமும் ஆதாரங்களை வழங்கும்படி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

    ஆம் ஆத்மி தலைவர்கள், ஆம் ஆத்மி கட்சியுடன் தொடர்புடையவர்கள் இடத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. ஆம் ஆத்மி பொருளாளர், எம்.பி. குப்தா, கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் மற்றும் பலருக்கு தொடர்பான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

    சாட்சிகளின் வாக்குமூலம் அடங்கிய ஆடியோ அழிக்கப்பட்டுள்ளது. அதை நாட்டு மக்களுக்கு முன் கொண்டு வாரங்கள் பார்ப்போம். ஆம் ஆத்மி கட்ச தலைவர்கள் குரலை ஒடுக்கவதற்காக அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. மதுபான கொள்கை விவகாரத்தில் ஆம் ஆத்மிக்கு எதிராக போலி அறிக்கைகள் வழங்குமாறும் அமலாக்கத்துறை கட்டாயப்படுத்துகிறது. மிரட்டுகிறது.

    மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் ஆம் ஆத்மி கட்சியை முடக்க பா.ஜனதா விரும்புகிறது. ஆனால், நாங்கள் பயப்படமாட்டோம் என்பதை அவருக்கு சொல்ல விரும்புகிறேன்" என்றார்.

    அதிஷி, அமலாக்கத்துறையின் அம்பலத்தை நாளை (இன்று) 10 மணிக்கு வெளிப்படுத்த இருக்கிறேன் எனக் குறிப்பிடடிநர்தார். அவருடைய மந்திரி சபையில் இருக்கும் சவுரப் பரத்வாஜ், பா.ஜனதாவின் பணம் சுரண்டும் துறையின் மிகப்பெரிய அம்பலம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த நிலையில்தான் இன்று காலை அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

    • டெல்லி மாநில மந்திரி அதிஷி, அமலாக்கத்துறையின் அம்பலத்தை வெளியிடுவதாக தெரிவித்திருந்தார்.
    • அவர் தெரிவித்த மறுநாள் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்.

    அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    டெல்லியில் சுமார் 10 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. பணமோசடி தொடர்பான வழக்கு தொடர்பான சோதனையா அல்லது புதிய வழக்கு தொடர்பான சோதனையா என்பது குறித்து தெளிவான தகவல் வெளியாகவில்லை.

    கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பிபவ் குமார், டெல்லி ஜல் போர்டு முன்னாள் உறுப்பினர் ஷலாப் குமார், மாநிலங்களை எம்.பி. அலுவலகம், தேசிய பொருளாளர் என்.டி. குப்தா ஆகியோர் தொடர்பான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

    டெல்லி மாநில மந்திர அதிஷி, எஜென்சியின் அம்பலத்தை வெளியிடுவேன் என தெரிவித்திருந்த நிலையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக டெல்லி மாநில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ×