என் மலர்
தலைப்புச்செய்திகள்
- 2 நாள் பயணமாக அதிபர் டிரம்பின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி கடந்த வாரம் அமெரிக்கா சென்றார்.
- கார்கள் மீதான சுங்கவரியை 110 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது.
இந்தியாவில் நுழைய மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா சமீப காலமாக ஆர்வம் காட்டி வருகிறது.
ஆனால் வரி விகிதம் காரணமாக டெஸ்லா பின்வாங்கியது. எனவே சமீபத்தில் கார்கள் மீதான சுங்கவரியை 110 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது.
இதற்கிடையில் 2 நாள் பயணமாக அதிபர் டிரம்பின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி கடந்த வாரம் அமெரிக்கா சென்றார். அங்கு எக்ஸ், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க்குடன் மோடி சந்திப்பு நிகழ்ந்தது.
இந்நிலையில் இந்தியாவில் நுழைவதற்கான ஆரம்பக் கட்ட பணிகளை டெஸ்லா நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்தியாவில் 13 வகையான பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை டெஸ்லா நிறுவனம் 'லிங்க்ட் இன்' தளத்தில் வெளியிட்டுள்ளது.
அதில் ஐந்து வகையான பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் டெல்லி மற்றும் மும்பையிலும், எஞ்சிய பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் மும்பையில் பணியாற்ற வேண்டும் என அந்த விளம்பரத்தில் கூறப்பட்டு உள்ளது.
இதன்மூலம் டெஸ்லா நிறுவனம் விரைவில் இந்தியாவில் வர்த்தகத்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஆங்கில வர்ணையாளர்கள் பட்டியலில் 3 முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
- ஜியோஹாட்ஸ்டாரில் டிஜிட்டல் ஒளிபரப்பில் ஒன்பது மொழிகளில் இந்த தொடர் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) பாகிஸ்தான் மற்றும் துபாயில் நாளை முதல் மார்ச் 9-ந்தேதி வரை நடைபெறுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது.
இதில் களம் காணும் அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
நாளை (புதன்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு கராச்சியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக்கில் வங்காளதேசத்தை 20-ந்தேதி சந்திக்கிறது. 8 முன்னணி அணிகள் வரிந்து கட்டுவதால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறி கொண்டே போகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கான வர்ணனையாளர்களை அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி போட்டி வரலாற்றில் முதல் முறையாக, ஜியோஹாட்ஸ்டாரில் டிஜிட்டல் ஒளிபரப்பில் ஒன்பது மொழிகளில் இந்த தொடர் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த போட்டியை 16 கோணங்களில் ரசிகர்கள் பார்த்து ரசிக்கலாம்.
இந்த தொடரின் ஆங்கில வர்ணையாளர்கள் பட்டியலில் 3 முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி, மற்றும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களை தவிர பிஷப், ரமிஸ், ஸ்டெய்ன், ஹைடன், ஃபின்ச், நாசர், டவுல், இயன் ஸ்மித், அதர்டன், மங்வா, பொல்லாக், அக்ரம், வார்டு, அதர், நைடூ, மெல் ஜோன்ஸ், கேட்டி மார்ட்டின் மற்றும் பாசித் ஆகியோரும் இதில் இடம் பெற்றுள்ளனர்.
ஆங்கில வர்ணனையாளர் குழு

ஹிந்தி வர்ணனையாளர் குழு

மராத்தி வர்ணனையாளர் குழு:

பெங்காலி வர்ணனையாளர் குழு:

போஜ்புரி வர்ணனையாளர் குழு:

ஹரியான்வி வர்ணனையாளர் குழு:

தமிழ் வர்ணனையாளர் குழு:

தெலுங்கு வர்ணனையாளர் குழு:

கன்னடம் வர்ணனையாளர் குழு:

- விருப்பப்பட்ட மொழியை யார் வேண்டுமானாலும் கற்றுகொள்ளலாம். ஆனால் ஒரு மொழியை திணிக்க கூடாது.
- தமிழகத்தில் மொழிப் போரால் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், "ஒருமொழி கொள்கை தான் அதிமுகவின் கொள்கை. அதில் எந்த மாற்றமும் இல்லை. விருப்பப்பட்ட மொழியை யார் வேண்டுமானாலும் கற்றுகொள்ளலாம். ஆனால் ஒரு மொழியை திணிக்க கூடாது. தமிழகத்தில் மொழிப் போரால் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.
இதனிடையே அண்ணாவின் குரலில் மிமிக்ரி செய்த ஜெயக்குமார், வடநாட்டு நண்பர் ஒருவர் என்னிடம் பேசும்போது சொன்னார்கள். இந்தி மொழியை 3 மாதத்திலேயே நீங்கள் கற்றுக்கொள்ளலாம் என்று சொன்னார்கள். நான் சொன்னேன். இந்திய மொழியை 3 மாதத்தில் கற்றுக்கொள்ளலாம். அதற்கு மேல் கற்றுக்கொள்வதற்கு அதில் என்ன இருக்கிறது" என்று பேசினார்.
- 2023-2024 நிதி ஆண்டின் 31.01.2024 வரையிலான வருவாய் ரூ. 1,01,234 கோடி.
- 2024-2025 நிதி ஆண்டின் 31.01.2025 வரையில் ஈட்டப்பட்ட வருவாய் ரூ. 1,13,235 கோடி.
தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, தலைமையில் இன்று சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி (ம) பதிவுத்துறை வளாகக் கூட்டரங்கில் 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், வணிகவரித் துறையில் கடந்த 2023-2024 நிதி ஆண்டின் 31.01.2024 வரையிலான வருவாய் ரூ. 1,01,234 கோடி. நிகழும் 2024-2025 நிதி ஆண்டின் 31.01.2025 வரையில் ஈட்டப்பட்ட வருவாய் ரூ. 1,13,235 கோடி. கடந்த நிதி ஆண்டின் வருவாயுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் 31.01.2025 வரை கூடுதலாக ரூ.12,001 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
மேலும் ஜிஎஸ்டி சட்டம் 2017 பிரிவு 73ன் கீழ் 2017-2018, 2018-2019 (ம) 2019-2020 ஆகிய நிதி ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட வரிவிதிப்பாணைகளில் எழுப்பப்பட்ட கேட்புகளில் நிலுவையிலுள்ள வரித்தொகையை 31.03.2025-க்குள் செலுத்தும் பட்சத்தில் நிலுவையிலுள்ள வட்டி மற்றும் தண்டத்தொகை தள்ளுபடி செய்யப்படுவதற்கான திட்டம் ஜிஎஸ்டி கவுன்சில் அறிவுறுத்தலின்படி நடைமுறையில் உள்ளது.
எனவே மேற்கண்ட வருடங்களுக்கு வரி நிலுவை பாக்கி வைத்துள்ள சம்பந்தப்பட்ட வணிகர்கள் இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்தி, வரியை செலுத்தி, ஜிஎஸ்டி சட்டம் 2017-ன் பிரிவு 128A-இல் பரிந்துரைக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு வட்டி மற்றும் தண்டத்தொகை செலுத்துவதிலிருந்து தள்ளுபடி பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது குறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் தங்களது கோட்ட இணை ஆணையர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- மாதவன் அடுத்ததாக ஜி.டி நாயுடு வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்குகிறார்.
கடந்த ஆண்டு மாதவன் நடிப்பில் சைத்தான் மற்றும் ஹிசாப் பராபர் என்ற இரண்டு இந்தி திரைப்படங்கள் வெளியானது. இந்த இரண்டு திரைப்படமுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக மாதவன் டெஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவருடன் நயன் தாரா மற்றும் சித்தார்த் நடித்துள்ளனர். விரைவில் இப்படம் நேரடி ஓடிடி ரிலீசாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
அடுத்ததாக மாதவன் திருச்சிற்றம்பலம் படத்தின் இயக்குனருடன் அதிர்ஷ்டசாலி என்ற திரைப்படத்திலும் ஜி.டி நாயுடு வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்குகிறார். மாதவனுடன் ஜெயராம், பிரியாமணி மற்றும் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் வெளிநாட்டில் நடந்து முடிந்த நிலையில். அடுத்தக்கட்ட படபிடிப்பு பணி அடுத்த வாரம் கோவையில் நடைப்பெறவுள்ளது. இப்படத்தை வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் டிரைகலர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
அரவிந்த் கமலநாதன் ஒளிப்பதிவு செய்ய கோவிந்த் வசந்தா படத்திற்கு இசையமைக்கவுள்ளார். படத்தை பற்றிய கூடுதல் விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து 1.56 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
- டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 87 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் வர்த்தக பற்றாக்குறை வான் அளவிற்கு உயர்ந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் மோடி தலைமையிலான அரசை கடுமையான வகையில் விமர்சனம் செய்துள்ளார். வர்த்தக கொள்கை தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தில் கூறியிருப்பதாவது-
மோடி அரசின் நிதியமைச்சர் நம்முடைய பொருளாதாரம் சிறந்த வருமானத்தை தருவதாக சொல்கிறார். இதைவிட முரண்பட்ட விசயம் ஏதும் இருக்க முடியாது.
இந்திய பங்குச் சந்தைகளில் இந்த ஆண்டில் தற்போது வரை 45 லட்சம் கோடி ரூபாய் சிறிய முதலீட்டாளர்களின் செல்வங்கள் அழிக்கப்பட்டுள்ளது. நிஃப்டி 50-யில் உள்ள பெரும்பாலான நிறுவனங்களின் காலாண்டு வருமானம் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து 1.56 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர். இதில் இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து தற்போது வரை சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் அடங்கும். இது சிறு மற்றும் நடுத்தர முதலீட்டாளர்களின் பணத்தை அழிக்க வழிவகுத்தது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 87 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் வர்த்தக பற்றாக்குறை வான் அளவிற்கு உயர்ந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இறக்குமதி 62.21 சதவீதமாக உயர்ந்துள்ளது. மோடியின் வர்த்தக கொள்கை இந்தியாவிற்கு பேரழிவை ஏற்படுத்துகிறது.
இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.
- கூடுதல் பாதுகாப்பு சிறப்பம்சங்களுடன் 2025 டிவிஎஸ் ரோனின் அறிமுகமானது
- இந்த பைக்கில் 225.9 சிசி சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது.
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் கூடுதல் பாதுகாப்பு சிறப்பம்சங்களுடன் ரோனின் 2025 மோட்டார்சைக்கிள் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது
ரோனின் 2025 மோட்டார்சைக்கிளின் ஆரம்ப விலை ரூ.1.35 லட்சமாகவும் (Ex-Showroom) ஆகவும் மிட் - வேரியண்டின் விலை ரூ.1.59 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2025 ரோனின் மாடல் கிளேசியர் சில்வர் மற்றும் சார்கோல் எம்பெர் என இரண்டு புதிய நிறங்களில் அறிமுகமாகியுள்ளது.
இந்த பைக்கில் 225.9சிசி சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 20.4 பி.எஸ். பவர், 19.93 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
- டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 48 இடங்களில் வெற்றி பெற்றது.
- டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மோசமான தோல்வியை சந்தித்தது.
புதுடெல்லி:
டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர். ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது.
டெல்லி தேர்தலில் பா.ஜ.க. 48 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது இடம் பிடித்தது.
சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற போதிலும், டெல்லியில் பா.ஜ.க. சார்பில் முதலமைச்சர் ஆக பதவியேற்க போவது யார் என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.
இதற்கிடையே, டெல்லியின் அடுத்த முதலமைச்சர் வரும் வியாழக்கிழமை அன்று பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில், ராம்லீலா மைதானத்தில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.
முதல் மந்திரியை தேர்வு செய்வதற்கான எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை நடைபெறும் என பா.ஜ.க. அறிவித்துள்ளது.
- ‘அதிபர் நாளில் அரசர் வேண்டாம்’ என்ற பதாகைகளுடன் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர்.
- கோழைகளைப் போல டிரம்பிற்கு தலைவணங்க மாட்டோம்
அமெரிக்காவின் அதிபாராக 2 ஆவது முறையாக கடந்த ஜனவரி 20 ஆம் தேதி டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். தேர்தலில் அவருக்காக அதிக செலவுகளை செய்து ஆதரவு அளித்த உலக பணக்காரார் எலான் மஸ்க், அரசின் செயல்திறன் மேம்பாடு DODGE என்ற புதிய துறைக்கு தலைவரானார்.
இந்த துறைக்கு அமெரிக்க மக்களின் பாதுகாக்கப்பட்ட தகவல்களை அணுகுதல் உள்ளிட்ட ஏகபோக உரிமைகள் வழங்கப்பட்டன.
அரசின் வீண் செலவை குறைக்க ஆயிரக்கணக்காக அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்தல், மக்களுக்கான நிதியுதவிகளை நிறுத்துதல் என தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை எலான் மஸ்க் ஆலோசனையில் பேரில் டொனால்டு டிரம்ப் அதிரடி நடவைடிகைகளை மேற்கொண்டு வருகிறதார்.
மேலும் பிறப்பால் குடியுரிமை பெறுவதை ரத்து செய்தது, திருநங்கைகளுக்கான அங்கீகாரத்தை மறுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க்குக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் வெடித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மூன்றாம் திங்கள் அமெரிக்காவில் பிரசிடெண்ட்ஸ் டே கொண்டாடப்படுகிறது.
இந்த தினத்தில் நாடு முழுவதும் விடுமுறை உண்டு. அமெரிக்க அதிபராக இருந்தவர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு மக்கள் நன்றி செலுத்துவர். ஆனால் இந்த வருட பிரசிடெண்ட்ஸ் டேவில் டிரம்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர்.
50501 என்ற இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், 'அதிபர் நாளில் அரசர் வேண்டாம்' என்ற பதாகைகளுடன் நாடு முழுவதும் நேற்று போராட்டம் நடத்தினர். இந்த இயக்கத்துக்கு 50 ஆர்ப்பாட்டங்கள், 50 மாநிலங்கள், 1 இயக்கம் என்று பொருள்.

கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்றக் கட்டடத்துக்கு வெளியே நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் டிரம்புக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். ஃப்ளோரிடா மற்றும் கலிஃபோர்னியா மாகாணங்களிலும் பெரிய அளவிலான போராட்டம் நடைபெற்றது.
டிரம்ப் மற்றும் அவரது கூட்டாளி எலான் மஸ்க் ஆகியோர் அதிகாரத்தைக் கைப்பற்றி, நாட்டில் கூட்டாட்சி அமைப்பையும் அரசாங்கத்தையும் அழிக்க முயற்சிப்பதாக போராட்டக்காரர்கள் கூறினர்.

டிரம்பை அகற்று, மஸ்க்கை அகற்று போன்ற கோஷங்களை போராட்டக்காரர்கள் எழுப்பினர். டிரம்பை ஒரு சர்வாதிகாரி என்றும் கோழைகளைப் போல டிரம்பிற்கு தலைவணங்க மாட்டோம் என்றும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
- சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதுகிறது.
- நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் காயம் காரணமாக விலகி உள்ளார்.
9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை (19-ந் தேதி) முதல் மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு கருதி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டம் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதுகிறது.
இந்த தொடருக்கு முன்னதாக பல நட்சத்திர வீரர்கள் காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகி வருகின்றனர். அந்த வகையில் நாளை சாம்பியன்ஸ் டிராபி தொடங்க உள்ள நிலையில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் காயம் காரணமாக விலகி உள்ளார். இவர் விலகிய நியூசிலாந்து அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பெர்குசனுக்கு பதிலாக கைல் ஜேமிசன் அணியில் இடம் பிடித்துள்ளார். ஜேமிசன் கடைசியாக ஒருநாள் போட்டியில் 2023-ம் ஆண்டு செப்டம்பரில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மகா கும்பமேளாவில் புனித நீராடினால் அனைத்து பாவங்களும் நீங்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
- சிலர் தங்கள் செல்லப்பிராணிகளை திரிவேணி சங்கமத்திற்கு அழைத்து வந்து புனித நீராட்டி செல்கின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் உலகம் முழுவதிலும் இருந்து நாள்தோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து புனித நீராடி வருகின்றனர். அங்கு புனித நீராடினால் அனைத்து பாவங்களும் நீங்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். சிலர் தங்கள் முன்னோர்களின் புகைப்படங்களை கொண்டு வந்து இங்குள்ள நீரில் மூழ்கடித்து செல்கின்றனர். சிலர் தங்கள் செல்லப்பிராணிகளை திரிவேணி சங்கமத்திற்கு அழைத்து வந்து புனித நீராட்டி செல்கின்றனர்.
இந்நிலையில் மகா கும்பமேளாவில் புனித நீராடிய வாலிபர் ஒருவர் தனது செல்போனையும் புனித நீராட்டிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், இளைஞர் ஒருவர் பேசும் காட்சிகள் உள்ளது. பின்னர் அவர் தனது செல்போனை எடுத்து, இந்த செல்போனும் பல பாவங்களை செய்துள்ளது. அதற்கும் புனிதம் தேவை என்று கூறுகிறார்.
மேலும் அந்த செல்போனை திரிவேணி சங்கமத்தில் 3 முறை முக்கி எடுத்து புனித நீராட்டும் காட்சிகள் உள்ளது. வைரலான இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவரது செயலை விமர்சித்து பதிவிட்டனர்.
மகா கும்பமேளாவில் புனித நீராடினால் அனைத்து பாவங்களும் நீங்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
- 'ஈரம்' படத்திற்கு பிறகு ஆதி- அறிவழகன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
- திரைப்படம் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
2009 ஆம் ஆண்டு அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்த 'ஈரம்' படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை ஆதி வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்றார். இயக்குனர் அறிவழகனுக்கு 'ஈரம்' திரைப்படம் நல்ல வரவேற்பைக் கொடுத்தது. அதற்கடுத்து நகுல் நடிப்பில் வெளிவந்த 'வல்லினம்' மற்றும் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த 'பார்டர்', 'குற்றம் 23' திரைப்படத்தை அறிவழகன் இயக்கினார்.
'ஈரம்' படத்திற்கு பிறகு ஆதி- அறிவழகன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. அறிவழகன் இயக்கும் 'சப்தம்' படத்தில் ஆதி நடித்துள்ளார். ஹாரர் கதைக்களப் பின்னணியில் இத்திரைப்படம் அமைந்துள்ளது. இந்த படத்தில் லக்ஷ்மி மேனன் , சிம்ரன், லைலா மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டீசர் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடலான மாயா மாயா பாடலை அண்மையில் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை விவேகா வரிகளில் விஜய் யேசுதாஸ் பாடியுள்ளார்.
படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






