என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் அடுத்ததாக பெருசு என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது.
    • இப்படத்தில் வைபவ், சுனில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் அடுத்ததாக பெருசு என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தை இளங்கோ ராம் இயக்கியுள்ளார். படத்தின் இசையை அருண் ராஜ் மெற்கொண்டுள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இப்படத்தில் வைபவ், சுனில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, பால சரவணன், தீபா, நிஹரிகா, சாந்தினி, மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இப்படம் வீட்டில் இறக்கும் ஒரு பெரியவரை, இறந்த பிறகு அவரால் ஏற்படும் பிரச்சனை மற்றும் அந்த இறுதி சடங்கில் நடக்கும் சிக்கலை சுற்றி கதைக்களம் அமைந்துள்ளது.

    இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த காட்சிகள் மிகவும் நகைச்சுவையாக அமைந்த் இருக்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • எதிர்க்கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் 15 மாதங்களில் இரண்டு முறை மட்டுமே சட்டசபை வந்துள்ளார்.
    • அவர் 57 லட்சத்திற்கு மேல் அரசு சம்பளத்தை பெற்றுள்ளார்.

    தெலுங்கானா சட்டசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. அவையில் பேசிய முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, சந்திரசேகர ராவ் சட்டசபைக்கு வராதது குறித்து விமர்சித்து பேசினார்.

    இது தொடர்பாக ரேவந்த ரெட்டி கூறியதாவது:-

    எதிர்க்கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் 15 மாதங்களில் இரண்டு முறை மட்டுமே சட்டசபை வந்துள்ளார். அவர் 57 லட்சத்திற்கு மேல் அரசு சம்பளத்தை பெற்றுள்ளார். மக்களை அவர்களுடைய தலைவிதிக்கே விட்டுள்ளார். மத்திய அரசு என்பது மாநிலங்களுக்கான ஒன்றியம். நாட்டின் பிரதமர் எந்த முதலமைச்சருக்கும் உண்மையிலேயே மூத்த சகோதரர் போன்றவர்.

    இவ்வாறு ரேவந்த் ரெட்டி கூறினார்.

    ரேவந்த் ரெட்டி அடிக்கடி டெல்லி செல்கிறார் என பிஆர்எஸ் கட்சி குற்றஞ்சாட்டியதற்கு, ரேவந்த் ரெட்டி பதில் கூறினார். ரேவந்த ரெட்டி பிரதமரிடம் 2036 ஒலிம்பிக் போட்டியை ஐதராபாத்தில் நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மேலும், ஐதராபாத்தில் உள்ள பாதுகாப்பு துறைக்கான நிலத்தை மாநில அரசுக்கு மாற்ற ஒப்புக்கொண்டதற்கான பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு பாராட்டு தெரிவித்தார்.

    • கர்நாடக காவல்துறை வீட்டு வசதி வாரிய டிஜிபி ராமச்சந்திர ராவை பதவியில் இருந்து நீக்கி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
    • மறு உத்தரவு வரும் வரை கட்டாய விடுப்பில் அனுப்புமாறு கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

    நடிகை ரன்யா ராவ் வழக்கில், அவரது வளர்ப்பு தந்தையை டிஜிபி பதவியில் இருந்து நீக்கி கர்நாடக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

    கர்நாடக காவல்துறை வீட்டு வசதி வாரிய டிஜிபி ராமச்சந்திர ராவை பதவியில் இருந்து நீக்கி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

    மேலும், மறு உத்தரவு வரும் வரை கட்டாய விடுப்பில் அனுப்புமாறு கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

    தங்க கடத்தல் தொடர்பான வழக்கை கர்நாடக அரசின் சிறப்பு குழுவும் விசாரித்து வரும் நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக, தங்கக் கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியான கன்னட நடிகை ரன்யா, வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் (டிஆர்ஐ) அதிகாரிகள் தன்னைத் தாக்கி, வெற்று மற்றும் தட்டச்சு செய்யப்பட்ட ஆவணங்களில் கையெழுத்திட கட்டாயப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

    • ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கூலி.
    • சந்திப்பின் போது எடுத்த புகைப்படத்தினை வைத்து ‘DILLI RETURNS’ என்று ட்வீட் செய்துள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இந்தப் படத்தின் டைட்டில் வீடியோ மற்றும் பாடல் க்ளிம்ப்ஸ் உள்ளிட்டவை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இரண்டு வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

    நேற்று பிறந்தநாள் கொண்டாடிய லோகேஷ் கனகராஜுக்கு பல்வேறு திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். ஸ்ருதிஹாசன் அவரது வாழ்த்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

    இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு பிடித்த காப்பு ஒன்றை பரிசளித்தார் கார்த்தி. அது ப்ளாட்டினத்தினால் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

     

    இந்த சந்திப்பின் போது எடுத்த புகைப்படத்தினை வைத்து 'DILLI RETURNS' என்று ட்வீட் செய்துள்ளார். விரைவில் 'கைதி 2' படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் கே.வி.என் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன. படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நேற்று பட்ஜெட் தாக்கல் செய்துவிட்டு இன்று நீதிமன்றம் வந்திருக்கிறேன்.
    • அண்மைக் காலமாக கூட்டாட்சி தத்துவம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

    சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் மெட்ராஸ் பார் அசோசியேசனின் 150வது ஆண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

    விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கே.வி.விஸ்வநாதன், ஆர்.மகாதேவன், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    ஜனநாயகத்தை செதுக்குவதில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பங்கை பாராட்டுகிறேன். தமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் இந்திய அளவில் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கின்றனர்.

    இந்தியாவிலேயே தலைசிறந்த பாரம்பரியம் கொண்டது சென்னை உயர்நீதிமன்றம். அரசமைப்பை பாதுகாப்பதில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய பங்காற்றி வருகிறது.

    ஒரு நீதிபதி ஆங்கிலத்தில், ஒரு நீதிபதி தமிழில் பேசினார். இதுதான் இருமொழிக் கொள்கை. இரு மொழிக் கொள்கை கொண்ட தமிழ்நாட்டில் இக்கட்டான நிலை என்பது இல்லை.

    சட்டம் ஒரு இருட்டறை, வழக்கறிஞர்கள் வாதம் அதில் விளக்கு என்றார் பேரறிஞர் அண்ணா. அரசமைப்புச் சட்டத்திற்கு மெருகேற்றும் பல தீர்ப்புகளை நமது நீதியரசர்கள் வழங்கியுள்ளனர்.

    சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதில் வழக்கறிஞர்களின் பங்கு மிக முக்கியமானது. வழக்கறிஞர்கள் அநீதிகளை தடுத்து நீதியை பாதுகாப்பவர்கள்.

    சுதந்திரமான நீதித்துறை என்பது அரசமைப்பினர் உயிர்ப்புக்கு மிக முக்கிய அம்சம். அண்மைக் காலமாக கூட்டாட்சி தத்துவம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

    திமுக ஆட்சியில் 73 புதிய நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றத்தை கணிகனிமயமாக்க நிதி ஒதுக்கப்பட்டது.

    உச்சநீதிமன்ற கிளையை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும், தென்மாநில மக்களுக்கு அது வசதியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ராகுல் காந்தி தன்னுடைய சொந்த மக்களவை தொகுதியில் நீண்ட நேரம் செலவழிப்பதில்லை.
    • திடீரென வியட்நாம் மீது அதிக பாசம் வைப்பதற்கான காரணம் என்ன?

    காங்கிரஸ் கட்சி எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி அவரது தொகுதியை விட, வியட்நாமில் அதிக நேரம் செலவிட்டுள்ளார். வியட்நாம் மீதான அசாதாரண பாசம் குறித்து விளக்க வேண்டும் என பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான ரவி சங்கர் பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது:-

    ராகுல் காந்தியை எங்கே? அவர் வியட்நாம் சென்றுள்ளதாக கேள்விப்படுகிறேன். அவர் தன்னுடைய சொந்த மக்களவை தொகுதியில் நீண்ட நேரம் செலவழிப்பதில்லை. திடீரென வியட்நாம் மீது அதிக பாசம் வைப்பதற்கான காரணம் என்ன?

    வியட்நாம் மீதான அசாதாரண பாசம் குறித்து ராகுல் காந்தி விளக்க வேண்டியது அவசியம். அவர் அங்கே அடிக்கடி செல்வது மிகவும் வினோதமானது. ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சி தலைவர். அவர் இந்தியாவில் இருக்க வேண்டும்.

    இவ்வாறு ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

    பாஜக ஐடி துறை தலைவர் அமித் மாள்வியா எக்ஸ் பக்கத்தில் "எதிர்க்கட்சித் தலைவர் என்ற முக்கிய பதவியை ராகுல் காந்தி வகிக்கிறார். மேலும் அவர் மேற்கொண்ட ஏராளமான ரகசிய வெளிநாட்டுப் பயணங்கள், குறிப்பாக நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும்போது தேசியப் பாதுகாப்பு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகின்றன." எனத் தெரிவித்துள்ளார்.

    • உலக அளவிலான அரசியல் சாசனங்களில் இந்தியாவின் அரசியல் சாசனமே சிறப்பானது.
    • இந்திய அரசியல் சாசனம் பல்வேறு முறை திருத்தப்பட்டாலும் மிக வலுவானதாக உள்ளது.

    சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் மெட்ராஸ் பார் அசோசியேசனின் 150வது ஆண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

    விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கே.வி.விஸ்வநாதன், ஆர்.மகாதேவன், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில் விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன் கூறுகையில், " இந்தியாவில் அரசியல் சாசனம் நிலைப்பதற்கு அதை எழுதியவர்கள் காரணமாக உள்ளனர்.

    இந்தியாவில் ஜனநாயகம் எப்படி நிலைக்கும் என கேள்வி எழுப்பியோருக்கு 75 ஆண்டுகால அரசியல் சாசனம் பதில் அளித்துள்ளது.

    உலக அளவிலான அரசியல் சாசனங்களில் இந்தியாவின் அரசியல் சாசனமே சிறப்பானது. இந்திய அரசியல் சாசனம் பல்வேறு முறை திருத்தப்பட்டாலும் மிக வலுவானதாக உள்ளது.

    கல்வியை ஒவ்வொருவருக்குமான அடிப்படை உரிமையாக்கியது நமது அரசியல் சாசனம்" என்றார்.

    • ராம் குமார் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மீண்டும் இணைந்து நடித்துள்ளார்.
    • இப்படத்தை சத்ய ஜோதி நிறுவனம் தயாரிக்கிறது.

    கடந்த 2018 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் , அமலா பால், காளி வெங்கட், அம்மு அபிராமி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது ராட்சசன் திரைப்படம் . இப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது.

    இப்படத்தை ராம் குமார் இயக்க கிப்ரான் இசையமைத்தார். இப்படத்தின் கதைக்களம் ஒரு கிரைம் திரில்லராக அமைந்தது. இந்நிலையில் இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மீண்டும் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தின் நாயகியாக மமிதா பைஜூ நடித்துள்ளார்.

    இப்படத்தை சத்ய ஜோதி நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. படத்திற்கு இரண்டு வானம் என தலைப்பு வைத்துள்ளனர். வெளியிடப்பட்ட போஸ்டரில் மமிதா பைஜூ மற்றும் விஷ்ணு விஷால் இரண்டு வானங்களில் அமர்ந்த மாதிரியான காட்சிகள் அமைந்துள்ளது.

    இப்படம் ஒரு ராம் - காம் திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படத்தின் இசையை திபு நினன் தாமஸ் மேற்கொள்கிறார். படத்தை பற்றிய மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஷாம் மற்றும் இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "அஸ்திரம்."
    • படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

    நடிகர் ஷாம் மற்றும் இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "அஸ்திரம்." இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படம் மார்ச் 7-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது ஆனால் சில சூழ்நிலை காரணங்களால் திரைப்படம் வெளியாகாமல் போனது.

    இந்நிலையில் படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் வரும் மார்ச் 21 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    அஸ்திரம் படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. கிரைம் திரில்லர் கதையம்சம் கொண்டிருக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தப் படத்தில் நிழல்கள் ரவி, அருல் தி சங்கர், ஜீவா ரவி மற்றும் ரஞ்சித் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை தன ஷண்முகமணி தயாரித்துள்ளார். இந்தப் படத்திற்கு சுந்தரமூர்த்தி இசைமயைத்துள்ளார். இவர் இதற்கு முன் ஐடா, 8 தோட்டாக்கள் மற்றும் பொம்மை நாயகி படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2015-ல் இருந்து 4-வது முறையாக இலங்கை செல்ல இருக்கிறார்.
    • இருநாடுளுக்கு இடையில் புதிய பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கிறது.

    இந்திய பிரதமர் மோடி அடுத்த மாதம் தொடக்கத்தில் இலங்கை செல்ல இருப்பதாக என இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி விஜிதா ஹெராத் தெரிவித்துள்ளார்.

    இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அனுர குமார திசநாயகே இந்தியா வந்திருந்தார். அப்போது இந்திய பிரதமர் மோடி இலங்கை வருவது உறுதி செய்யப்பட்டது.

    நாங்கள் அண்டை நாடான இந்தியாவுடன் நெருங்கிய நட்பை பேணி வருகிறோம். இந்தியாவுக்கான எங்களுடைய முதல் மூலோபாய சுற்றுப் பயணத்தின்போது இருநாட்டு ஒத்துழைப்பு தொடர்பாக பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

    இந்திய பிரதமர் மோடி இலங்கை வரும்போது, இருநாடுளுக்கு இடையில் புதிய பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கிறது. தேசிய நலனை பேணும் விதமாக வெளிநாட்டு கொள்கையில் எந்தவொரு நாட்டிற்கும் ஆதரவாக இல்லாமல் தொடர்ந்து நடுநிலையாக செயல்படுவோம் என விஜிதா ஹெராத் தெரிவித்துள்ளார்.

    2023 ஆம் ஆண்டு இலங்கை மின்சார வாரியமும் இந்தியாவின் NTPC-யும் கிழக்கு திருகோணமலையின் சம்பூர் நகரில் 135 மெகாவாட் சூரிய மின் நிலையம் கட்ட ஒப்புக்கொண்டன. பிரதமர் மோடி பயணத்தின்போது இந்த சூரிய மின் நிலையம் திறந்து வைக்கப்பட இருக்கிறது.

    பிரதமர் மோடி கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து 4-வது முறையாக இலங்கை பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

    • 5-வது லீக் ஆட்டத்தில் ஹாங் காங்- பஹ்ரைன் ஆகிய அணிகள் மோதின
    • இந்த ஆட்டம் சூப்பர் ஓவர் வரை சென்றது.

    மலேசியா, ஹாங் காங், பஹ்ரைன் ஆகிய அணிகள் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஹாங் காங்- பஹ்ரைன் ஆகிய அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த ஹாங் காங் 20 ஓவரில் 129 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய பஹ்ரைன் 129 ரன்கள் எடுத்தது. இதனால் போட்டி டிரா ஆனது. இதனையடுத்து சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

    இதில் முதலில் பேட்டிங் செய்த பஹ்ரைன், முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்கவில்லை. அடுத்த இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. இதனால் ஹாங் காங் அணிக்கு 1 ரன் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    1 ரன் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹாங் காங், 3-வது பந்தில் 1 ரன் அடித்து வெற்றி பெற்றது.

    இந்நிலையில் சூப்பர் ஓவரில் ஒரு ரன் கூட அடிக்க முடியாமல் ஆட்டமிழந்தது. இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 0 ரன்னில் ஆட்டமிழந்த அணி என்ற மோசமான சாதனையை பஹ்ரைன் அணி படைத்துள்ளது.

    • அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் இது தொடர்பாக மனு அளித்திருக்கிறேன்.
    • ஈபிஎஸ்-ஐ சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு கொள்கை உயர்ந்தது, பாதை தெளிவானது என செங்கோட்டையன்.

    தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவுவை சந்தித்தது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

    தொகுதி சுற்றுச்சூழல் பிரச்சினை தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுப்பதற்காக சபாநாயகரை சந்தித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து அவர்," அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் இது தொடர்பாக மனு அளித்திருக்கிறேன்.

    ஈபிஎஸ்-ஐ சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு கொள்கை உயர்ந்தது, பாதை தெளிவானது என செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.

    மேலும் அவர், கொடிவேரி அணையிலிருந்து 3 லட்சம் லிட்டர் தண்ணீரை எடுத்து தொழிற்சாலை அமைக்கும் தனியார் நிறுவனம் முயற்சியை தடுக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

    ×