என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • மிசோரமைச் சேர்ந்த 7 வயது சிறுமி எஸ்தர் நாம்தே வந்தே மாதரம் பாடலை பாடினார்.
    • அவரைப் பாராட்டிய அமித்ஷா அந்தச் சிறுமிக்கு கிடார் ஒன்றை பரிசளித்து மகிழ்ந்தார்.

    புதுடெல்லி:

    மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த 7 வயதான எஸ்தர் நாம்தே என்ற சிறுமி தனது வசீகர குரலில் வந்தே மாதரம் பாடலை பாடினார். இவரது பெயரில் யூ டியூப் சேனல் இயங்கிவருகிறது. எஸ்தரின் வந்தே மாதரம் ஆல்பத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

    இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மிசோரம் முதல் மந்திரி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் அந்தச் சிறுமியைப் பாராட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று மிசோரம் மாநிலம் சென்றார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் எஸ்தர் நாம்தே என்ற சிறுமி வந்தே மாதரம் பாடலை பாடியதை கேட்டு நெகிழ்ந்துள்ளார்.

    அவரைப் பாராட்டிய அமித்ஷா எஸ்தர் நாம்தேவை வரவழைத்து கிடார் ஒன்றையும் பரிசளித்து மகிழ்ந்தார்.

    இதுதொடர்பாக, அமித்ஷா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பாரதத்தின் மீதான அன்பு நம் அனைவரையும் ஒருங்கிணைக்கிறது. மிசோரமின் அதிசய குழந்தை எஸ்தர் லால்துஹாவ்மி நாம்தேவை அய்ஸ்வாலில் வந்தே மாதரம் பாடலைப் பாடுவதைக் கேட்டு மிகவும் நெகிழ்ச்சி அடைந்தேன். பாரத மாதா மீதான 7 வயது சிறுமியின் அன்பு அவளது பாடலில் வெளிப்பட்டது. அவர் பாடக் கேட்பது ஒரு மயக்கும் அனுபவமாக மாறியது. அவருக்கு ஒரு கிடார் பரிசாக அளித்து, அற்புதமான எதிர்காலம் அமைய வாழ்த்தினேன் என பதிவிட்டுள்ளார்.

    • ஆட்ட நாயகி விருதை மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் வென்றார்.
    • 523 ரன்கள் எடுத்த நாட் சீவர் பிரண்ட் தொடர் நாயகி விருதை வென்று அசத்தினார்.

    மும்பை:

    மூன்றாவது மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 44 பந்தில் 66 ரன் குவித்தார்.

    தொடர்ந்து ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 141 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 8 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது முறையாக கோப்பை வென்றது.

    இந்நிலையில், பொறுப்புடன் ஆடி 44 பந்துகளில் 66 ரன்கள் குவித்த மும்பை அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆட்ட நாயகி விருதை வென்றார்.

    இந்த தொடரில் மொத்தம் 523 ரன்கள் குவித்த மும்பை அணியின் நாட் சீவர் பிரண்ட் தொடர் நாயகி விருதை வென்று அசத்தினார்.

    மேலும், நாட் சிவர் பிரண்ட் ஆரஞ்சு தொப்பியையும், அமெலியா கெர் பர்பிள் தொப்பியையும் கைப்பற்றினர்.

    • ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது தேசிய நலனுக்கானது.
    • அதை அறிமுகப்படுத்த மத்திய அரசு உறுதியாக உள்ளது என்றார்.

    ஜெய்ப்பூர்:

    சட்டத்துறை மந்திரி அர்ஜூன் ராம் மெக்வால் ராஜஸ்தானில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:

    ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேசிய நலனுக்கானது. அதை அறிமுகப்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

    1952, 1957, 1962 மற்றும் 1967-ம் ஆண்டுகளில் பாராளுமன்ற மற்றும் சட்டசபைத் தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன.

    இந்த முயற்சி தேசிய நலனுக்கானது. தேர்தல் ஆணையம், நிதி ஆயோக் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு ஆகியவை தங்கள் ஒப்புதலை அளித்தன. அதன்பிறகு அமைச்சரவை அதற்கு ஒப்புதல் அளித்தது.

    ஒரே நேரத்தில் தேர்தல்களை முன்மொழியும் இரண்டு மசோதாக்கள் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு பாராளுமன்ற குழுவால் பரிசீலிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக பல்வேறு சமூக அமைப்புகளுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.

    • முதலில் ஆடிய மும்பை 20 ஓவரில் 149 ரன்கள் எடுத்தது.
    • கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அரை சதம் கடந்து 66 ரன்கள் எடுத்தார்.

    மும்பை:

    மூன்றாவது மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 44 பந்தில் 66 ரன் குவித்து ஆட்டமிழந்தார். நாட் ஸ்கைவர் பிரண்ட் 30 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதையடுத்து, 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி களமிறங்கியது. முன்னணி வீராங்கனைகள் விரைவில் ஆட்டமிழந்தனர். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 30 ரன் எடுத்தார். மற்றவர்கள் நிலைக்கவில்லை.

    மரிசான் காப் கடைசி வரை போராடினார். அவர் 26 பந்தில் 40 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    இறுதியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 141 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது முறையாக கோப்பை வென்று அசத்தியது.

    • இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இறுதிப்போட்டியில் இத்தாலி ஜோடி வெற்றி பெற்றது.

    வாஷிங்டன்:

    இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டி நடைபெற்றது.

    இதில் இத்தாலியின் சாரா எர்ரானி-ஆண்ட்ரியா வவசோரி ஜோடி, குரோசிய வீரர் மேட் பவிக்-அமெரிக்காவின் பெத்தானிக் ஜோடியுடன் மோதியது.

    இதில் முதல் செட்டை 6-7 என இழந்த இத்தாலி ஜோடி, அடுத்த இரு செட்களை 6-3, 10-8 என வென்று சாம்பியன் பட்டம் வென்றது.

    • உக்ரைனுடன் போர்நிறுத்த ஒப்பந்தத்துக்கு அதிபர் புதின் ஒப்புதல்.
    • இந்தப் போர் நிறுத்தம் நீண்டகால அமைதிக்கு வழிவகுக்க வேண்டும் என்றார்.

    கீவ்:

    உக்ரைன்-ரஷியா இடையிலான போர் சுமார் 3 ஆண்டாக நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.

    சவுதி அரேபியாவில் அமெரிக்கா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் 30 நாட்கள் தற்காலிக போர்நிறுத்தம் கொண்டு வரும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. உக்ரைனுடனான போர் நிறுத்தத்துக்கு அதிபர் புதின் பல்வேறு நிபந்தனைகளுடன் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

    அப்போது பேசிய அதிபர் புதின், இந்தப் போர் நிறுத்தம் நீண்டகால அமைதிக்கு வழிவகுக்க வேண்டும். இந்த பிரச்சனையின் மூல காரணங்கள் நீக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு நடுவே உக்ரைன், ரஷியா பரஸ்பரம் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளன.

    ரஷியாவின் வோல்கொகர்ட், வரோன்சி, பெல்ஹொரொட், ரோஸ்டவ், கர்ஸ்க் உள்ளிட்ட பிராந்தியங்களைக் குறிவைத்து உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது. 126 டிரோன்கள் ஏவப்பட்ட நிலையில் இவை அனைத்தும் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷியா தெரிவித்தது.

    அதேபோல், உக்ரைனின் பல்வேறு பிராந்தியங்களைக் குறிவைத்து ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியது. 178 டிரோன்கள் ஏவப்பட்ட நிலையில் இவற்றில் பெரும்பாலானவை நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைனும் தெரிவித்துள்ளது.

    • திருநர்கள் இன்று நம்மை நேரில் சந்தித்து அன்பையும் - நன்றியையும் தெரிவித்தனர்.
    • திருநர் சமூகத்தின் முன்னேற்றத்துக்கு துணை நிற்கும் என்று அவர்களை வாழ்த்தி மகிழ்ந்தோம்.

    தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசின் நிதிநிலை அறிக்கை 2025-26-ல் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டம், உயர்கல்வி பயிலும் மூன்றாம் பாலினத்தோருக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்தமைக்காக, திருநர்கள் இன்று நம்மை நேரில் சந்தித்து அன்பையும் - நன்றியையும் தெரிவித்தனர்.

    கழக அரசு என்றும் திருநர் சமூகத்தின் முன்னேற்றத்துக்கு துணை நிற்கும் என்று அவர்களை வாழ்த்தி மகிழ்ந்தோம்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • ஹெய்லி மேத்யூஸ் 3, யாஸ்திகா பாட்டியா 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
    • நாட் சிவெர், ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

    3-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி மும்பை அணியின் தொடக்க வீராங்கனைகளாக யாஸ்திகா பாட்டியா, ஹெய்லி மேத்யூஸ் களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் தடுமாறினர்.

    இதனால் ஹெய்லி மேத்யூஸ் 3, யாஸ்திகா பாட்டியா 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து நாட் சிவெர், ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

    அதிரடியாக விளையாடி கவுர் அரை சதம் அடித்து அசத்தினார். மந்தமாக விளையாடிய நாட் சிவெர் 30 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அமெலியா கெர் 2, சஜனா 0 என அடுத்தடுத்து வெளியேறினார். அதனை தொடர்ந்து கவுர் 66 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதனால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தரப்பில் ஜெஸ் ஜோனஸ்சென், நல்லபுரெட்டி சரணி, மாரிசேன் காப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    • கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் அடுத்ததாக பெருசு என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது.
    • இப்படத்தில் வைபவ், சுனில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் அடுத்ததாக பெருசு என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தை இளங்கோ ராம் இயக்கியுள்ளார். படத்தின் இசையை அருண் ராஜ் மெற்கொண்டுள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இப்படத்தில் வைபவ், சுனில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, பால சரவணன், தீபா, நிஹரிகா, சாந்தினி, மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இப்படம் வீட்டில் இறக்கும் ஒரு பெரியவரை, இறந்த பிறகு அவரால் ஏற்படும் பிரச்சனை மற்றும் அந்த இறுதி சடங்கில் நடக்கும் சிக்கலை சுற்றி கதைக்களம் அமைந்துள்ளது.

    இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த காட்சிகள் மிகவும் நகைச்சுவையாக அமைந்த் இருக்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • எதிர்க்கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் 15 மாதங்களில் இரண்டு முறை மட்டுமே சட்டசபை வந்துள்ளார்.
    • அவர் 57 லட்சத்திற்கு மேல் அரசு சம்பளத்தை பெற்றுள்ளார்.

    தெலுங்கானா சட்டசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. அவையில் பேசிய முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, சந்திரசேகர ராவ் சட்டசபைக்கு வராதது குறித்து விமர்சித்து பேசினார்.

    இது தொடர்பாக ரேவந்த ரெட்டி கூறியதாவது:-

    எதிர்க்கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் 15 மாதங்களில் இரண்டு முறை மட்டுமே சட்டசபை வந்துள்ளார். அவர் 57 லட்சத்திற்கு மேல் அரசு சம்பளத்தை பெற்றுள்ளார். மக்களை அவர்களுடைய தலைவிதிக்கே விட்டுள்ளார். மத்திய அரசு என்பது மாநிலங்களுக்கான ஒன்றியம். நாட்டின் பிரதமர் எந்த முதலமைச்சருக்கும் உண்மையிலேயே மூத்த சகோதரர் போன்றவர்.

    இவ்வாறு ரேவந்த் ரெட்டி கூறினார்.

    ரேவந்த் ரெட்டி அடிக்கடி டெல்லி செல்கிறார் என பிஆர்எஸ் கட்சி குற்றஞ்சாட்டியதற்கு, ரேவந்த் ரெட்டி பதில் கூறினார். ரேவந்த ரெட்டி பிரதமரிடம் 2036 ஒலிம்பிக் போட்டியை ஐதராபாத்தில் நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மேலும், ஐதராபாத்தில் உள்ள பாதுகாப்பு துறைக்கான நிலத்தை மாநில அரசுக்கு மாற்ற ஒப்புக்கொண்டதற்கான பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு பாராட்டு தெரிவித்தார்.

    • கர்நாடக காவல்துறை வீட்டு வசதி வாரிய டிஜிபி ராமச்சந்திர ராவை பதவியில் இருந்து நீக்கி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
    • மறு உத்தரவு வரும் வரை கட்டாய விடுப்பில் அனுப்புமாறு கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

    நடிகை ரன்யா ராவ் வழக்கில், அவரது வளர்ப்பு தந்தையை டிஜிபி பதவியில் இருந்து நீக்கி கர்நாடக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

    கர்நாடக காவல்துறை வீட்டு வசதி வாரிய டிஜிபி ராமச்சந்திர ராவை பதவியில் இருந்து நீக்கி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

    மேலும், மறு உத்தரவு வரும் வரை கட்டாய விடுப்பில் அனுப்புமாறு கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

    தங்க கடத்தல் தொடர்பான வழக்கை கர்நாடக அரசின் சிறப்பு குழுவும் விசாரித்து வரும் நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக, தங்கக் கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியான கன்னட நடிகை ரன்யா, வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் (டிஆர்ஐ) அதிகாரிகள் தன்னைத் தாக்கி, வெற்று மற்றும் தட்டச்சு செய்யப்பட்ட ஆவணங்களில் கையெழுத்திட கட்டாயப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

    • ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கூலி.
    • சந்திப்பின் போது எடுத்த புகைப்படத்தினை வைத்து ‘DILLI RETURNS’ என்று ட்வீட் செய்துள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இந்தப் படத்தின் டைட்டில் வீடியோ மற்றும் பாடல் க்ளிம்ப்ஸ் உள்ளிட்டவை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இரண்டு வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

    நேற்று பிறந்தநாள் கொண்டாடிய லோகேஷ் கனகராஜுக்கு பல்வேறு திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். ஸ்ருதிஹாசன் அவரது வாழ்த்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

    இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு பிடித்த காப்பு ஒன்றை பரிசளித்தார் கார்த்தி. அது ப்ளாட்டினத்தினால் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

     

    இந்த சந்திப்பின் போது எடுத்த புகைப்படத்தினை வைத்து 'DILLI RETURNS' என்று ட்வீட் செய்துள்ளார். விரைவில் 'கைதி 2' படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் கே.வி.என் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன. படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×