என் மலர்
தலைப்புச்செய்திகள்
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
- மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மறுநாள் (12.9.2025) மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பாலவாக்கம்: காமராஜர் சாலை மற்றும் பிரதான சாலை, கரீம் நகர், மகாத்மா காந்தி நகர், சங்கம் காலனி 1 மற்றும் 2வது தெரு, கந்தசாமி நகர் 1 முதல் 7வது தெரு.
பூவிருந்தவல்லி: வரதராஜபுரம், பனிமலர் மெடிக்கல் காலேஜ், பெங்களூர் டிரன்க் சாலை மற்றும் இன்ஜினியரிங் காலேஜ், நசரத்பேட்டை, மேப்பூர், மலையம்பாக்கம், அகரமேல்.
திருமங்கலம்: மெட்ரோஜோன் பிளாட், வி.ஆர் மால், சத்தியசாய் நகர், பாடிகுப்பம் பிரதான சாலை, வி.ஜி.என் குடியிருப்பு, பழையபென், கோல்டன்ஜூபிலி அப்பார்ட்மென்ட், பாலாஜி நகர், காமராஜ் நகர், பெரியார் நகர், அம்பேத்கர் நகர், மேத்தாராயல் பார்க், இரயில் நகர், 100அடி சாலை, சீனிவாசன் நகர், சிவன்கோயில் தெரு, மாடவீதிகள், நியூகாலனி, டிமேட்டுகுலம்.
எழும்பூர்: ஈ.வி.கே. சம்பத் சாலை, ஜெர்மய்யா தெரு, ரிதெர்டன் சாலை மற்றும் சந்து, சர்ச் சந்து, பாலர் கல்வி நிலையம், சிஎம்டிஎ மெரினா டவர், வேனல்ஸ் சாலை, பிசிஒ சாலை, விபி ஹால், பிக்னிக் ஹோட்டல், வால்டாக்ஸ், பூங்கா நகர் வரதராஜன் தெரு, சந்தோஷ் நகர், பூந்தமல்லி நெடுஞ்சாலை, கங்கு ரெட்டி சாலை, ஆராமுதன் கார்டன், பிரதாபட் சாலை, ஹட்கின்சன் சாலை, சிங்கர் தெரு, சுப்பய்யா தெரு, பேரக்ஸ் சாலை. சைடனாம்ஸ் சாலை, கற்பூர முதலி தெரு, திருவேங்கடம் தெரு, மாட்டுக்கார வீரபத்ரன் தெரு, காட்டூர் சடையப்பன் தெரு, முத்து கிராமனி தெரு, ஜெர்மையா சாலை.
- இங்கிலாந்துக்கு எதிராக சுப்மன் கில் 5 டெஸ்ட் போட்டியிலும் டாஸ் தோற்றார்.
- சாம்பியன்ஸ் டிராபியில் ரோகித் சர்மா அனைத்து போட்டிகளிலும் டாஸ் தோற்றார்.
இந்திய அணி மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் தொடர்ந்து டாஸில் தோல்வியடைந்து வந்தது. சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் தொடர்ந்து 5 முறை டாஸில் தோல்வியடைந்தார்.
ஐசிசி சாம்பியன்ஷிப்பில் ரோகித் சர்மா தொடர்ந்து டாஸ் தோற்று வந்தார். இந்திய அணி கேப்டன்களுக்கும், டாஸ்க்கும் எட்டாம் பொருத்தமாக இருந்து வந்தது.
இந்த நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று ஐக்கிய அரபு அமீரகம் அணிக்கெதிராக இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் டாஸ் வென்றார். இதன்மூலம் இந்திய அணி தொடர்ந்து 15 முறை டாஸ் தோற்று வந்த நிலையில், தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது.
சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக டாஸ் தோற்றது. அதன்பின் தொடர்ந்து தோற்று வந்த நிலையில், தற்போது சூர்யகுமாரே அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
- உத்தரகாசியில் ஆகஸ்ட் 5-ம் தேதி திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பால் அதிதீவிர மழை பெய்தது.
- இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் வீடுகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
புதுடெல்லி:
உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலி கிராமத்தில் கடந்த 5ம் தேதி திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பால் அதிதீவிர மழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் வீடுகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
இதற்கிடையே சமோலி, ருத்ரபிரயாக், தெஹ்ரி மற்றும் பாகேஷ்வர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த மேகவெடிப்பு மற்றும் தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தரகாண்ட் மாநிலத்திற்கு பிரதமர் மோடி நாளை செல்கிறார். மாலையில் தலைநகர் டேராடூன் செல்லும் அவர், ஹெலிகாப்டர் மூலம் வெள்ள பாதிப்புகளை பார்வையிட உள்ளார். அதன்பின் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
காலையில் உத்தரபிரதேசத்தின் வாரணாசி செல்லும் பிரதமர் மோடி, மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலத்துடன் ஆலோசனை நடத்த உள்ளார். பிரதமரின் வருகையை முன்னிட்டு அப்பகுதி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- அதிமுக இரண்டாகவும் இல்லை, மூன்றாகவும் இல்லை, ஒன்றாகத்தான் இருக்கிறது.
- அதிமுகவை பொறுத்தவரை கொள்கை வேறு கூட்டணி வேறு.
கோவை மாவட்டம், வால்பாறையில் நடந்த இன்று அதிமுகு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம் எனும் பிரச்சார பயணத்தை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர்," ஐசியுவில் வென்டிலேட்டர் உதவியுடன் நோயாளி சிகிச்சையில் இருப்பது போல், திமுக ஆட்சியில் இருக்கிறது. அதிமுக ஒரே அணியாக இருக்கிறது" என்றார்.
மேலும் பேசிய அவர் கூறியதாவது:-
அதிமுக இரண்டாகவும் இல்லை, மூன்றாகவும் இல்லை, ஒன்றாகத்தான் இருக்கிறது; அதிமுகவின் ஒற்றுமையை 2026 சட்டமன்ற தேர்தலில் நிரூபிப்போம்.
அதிமுக கூட்டணி மக்களை நம்பி இருக்கிறது; யார் ஆள வேண்டுமென மக்களே முடிவு செய்கிறார்கள்.
தொண்டர்களின் செல்வாக்கு திமுகவில் குறைந்துவிட்டதால், ஒவ்வொரு வீடாக சென்று கெஞ்சி உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வரும் அவல நிலை திமுகுவுக்குத்தான் இருக்கிறது. அதனால், திமுகதான் ஐசியுவில் இருக்கிறது.
அதிமுகவை பொறுத்தவரை கொள்கை வேறு கூட்டணி வேறு.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்த ஆண்டின் கிட் ஆப் த இயர் என்ற பட்டத்தை தேஜஸ்வி மனோஜுக்கு டைம் இதழ் அளித்தது.
- ஆன்லைன் மோசடி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் டைம் இதழ் இந்த ஆண்டின் கிட் ஆப் த இயர் என்ற பட்டத்தை 17 வயது அமெரிக்கவாழ் இந்தியப் பெண்ணுக்குத் தந்து கவுரவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த 17 வயது தேஜஸ்வி மனோஜ் இந்தப் பட்டத்தைப் பெற்றுள்ளார்.
வயது மூத்தோரை ஆன்லைன் மோசடிகளில் இருந்து பாதுகாக்க ஷீல்டு சீனியர்ஸ் (Shield Seniors) எனும் இணையதளத்தை உருவாக்கினார். இதையடுத்து, தேஜஸ்விக்கு இந்தப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு ஆன்லைன் மூலம் அவரது தாத்தாவிடம் உள்ள பணத்தைத் திருட முயன்றதை அறிந்த தேஜஸ்வி மோசடிகளைப் பற்றி ஆய்வு மேற்கொண்டார்.
ஆன்லைன் மோசடி பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே இருப்பதை உணர்ந்த அவர், இணைய மோசடிகளைப் பற்றிக் கற்பிக்க இந்த இணையதளத்தை உருவாக்கினார். தற்போது முதியோர் இல்லங்கள் சென்று அங்குள்ளோருக்கு இந்த இணைய தளத்தைப் பயன்படுத்த உதவுகிறார்.
- வரி இல்லாத வர்த்தக ஒப்பந்த முன்மொழிவு குறித்து ஆலோசனை.
- இந்தியா- இத்தாலி மூலோபாய கூட்டாண்மையை மேம்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்கள்.
இந்திய பிரதமர் மோடி இன்று மாலை, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை டொலிபோன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, இந்தியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையில் வரி இல்லாத வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக முன்மொழியப்பட்டது தொடர்பாக ஆலோசனை நடத்தியதுடன், இதற்கு ஆதரவு அளித்த மெலோனிக்கு நன்றியும் தெரிவித்துள்ளார் இந்திய பிரதமர் மோடி.
மேலும், இந்தியா- இத்தாலி மூலோபாய கூட்டாண்மையை மேம்படுத்துவதற்கான எங்கள் கூட்டு உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்தினோம். உக்ரைனில் மோதலை முன்னதாகவே முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஆர்வத்தைப் பகிர்ந்து கொண்டோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் முன்மொழியப்பட்ட வரி இல்லாத வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) வலுப்படுத்த இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் பரிசீலித்து வருகின்றன. இரு தரப்பினரும் இந்த வாரம் டெல்லியில் 13வது சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்துகின்றனர்.
எட்டு ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு, ஜூன் 2022-ல் இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் வரி இல்லாத வர்த்தக ஒப்பந்தத்திற்கான (FTA) பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கின.
ஐரோப்பிய யூனியன் இந்தியாவுக்கு 100 சதவீதம் வரி விதிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனாடில் டிரம்ப் கேட்டுக்கொண்ட நிலையில், இந்திய பிரதமர் மோடி, இத்தாலி பிரதமர் மோடியுடன் பேசியுள்ளார்.
அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்த போதிலும், பிரதமர் மோடி அடிபணிய மறுத்துவிட்டார். இதனால் ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த ஆவலாக உள்ளேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
- பாமக சார்பில் குறைந்தது 5 லட்சம் பேர் சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
- இளைஞர்கள் நினைத்தால் புரட்சி வெடிக்கும் என தற்போதைய நேபாள புரட்சியை உதாரணம்.
வன்னியர்களுக்கு 15 சதவீத உள்ஒதுக்கீட்டை வழங்வில்லை என்றால் இளைஞர்களை திரட்டி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
வன்னியர்களுக்கு 15 சதவீத உள்ஒதுக்கீட்டை வழங்காவிடில் இளைஞர்களை திரட்டி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்.
இடஒதுக்கீடு வழங்காவிடல் 2 மாதத்தில் சிறை நிரப்பும் போராட்டம். பாமகவினர் அறவழியில் கலந்து கொள்ள வேண்டும்.
பாமக சார்பில் குறைந்தது 5 லட்சம் பேர் சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
இளைஞர்கள் நினைத்தால் புரட்சி வெடிக்கும் என தற்போதைய நேபாள புரட்சியை உதாரணம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சஞ்சு சாம்சன், சுப்மன் கில், குல்தீப் யாதவ் இடம் பிடித்துள்ளனர்.
- வேகப்பந்து வீச்சில் பும்ரா மட்டுமே முதன்மை பவுலராக உள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. இன்றைய போட்டியில் இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணி விவரம்:-
அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், பும்ரா, வருண் சக்ரவர்த்தி.
பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. திரைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
திரைப்படம் இதுவரை 80 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து வருகிறது. படத்தை பார்த்த பல திரைப்பிரபலங்கள் பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மதராஸி படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயனை தொலைபேசியில் அழைத்து பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
அப்போது அவர்," மை காட் எக்ஸலென்ட்.. என்ன பர்ஃபார்மன்ஸ்..! என்ன ஆக்ஷன்ஸ்.உ! சூப்பர் சூப்பர் எஸ்கே..! எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. ஆக்ஷன் ஹீரோ ஆகிட்டீங்க.. காட் பிளஸ்.. காட் பிளஸ்.." என்று அவருக்குறிய ஸ்டைலில், அவருக்குரிய சிரிப்பில் கூறியதாக சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தள பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இட்லி கடை படத்தின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இப்படத்தில் அருண் விஜய் அஷ்வின் என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், நடிகர் சத்யராஜ் விஷ்ணு வர்தன் என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், நடிகர் ராஜ்கிரன் சிவனேசனாக நடிப்பதாகவும் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், 'இட்லி கடை' படத்தில் 'மாரிசாமி' என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடிக்கிறார். இதுதொடர்பான, போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
- முன்னாள் அதிபர்கள், அவர்களின் பென்சன் உரிமையை இழக்கமாட்டார்கள்.
- அரசு மாளிகை, போக்குவரத்து சலுகை போன்றவற்றை இழக்க நேரிடும்.
இலங்கை பாராளுமன்ற தேர்தலின்போது, முன்னாள் அதிபர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் பறிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. அதனடிப்படையில் பாராளுமன்றத்தில் அதிபர்களுக்கு அதிகாரமளித்தல் திரும்பப் பெருதல் சட்ட மசோதாவை ஆளும் அரசு தாக்கல் செய்தது. விவாதத்திற்குப் பிறகு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது மசோதாவுக்கு ஆதரவாக 151 வாக்குகள் விழுந்தன. ஒரேயொரு வாக்கு மட்டும் எதிராக விழுந்தது.
முன்னாள் அதிபர்களுக்கான அதிகாரத்தை பறிப்பதற்கு, பாராளுமன்றத்தில் முழு மெஜாரிட்டியுடன் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று இலங்கை உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதனடிப்படையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மசோதா குறித்து சட்ட அமைச்சர் ஹர்ஷனா நானயக்கரா கூறுகையில் "முன்னாள் அதிபர்கள், அவர்களின் பென்சன் உரிமையை இழக்கமாட்டார்கள். அரசு மாளிகை, போக்குவரத்து சலுகை, செயலக ஊழியர்கள் போன்ற வசதி பறிக்கப்படும்" என்றார்.
இலங்கையில் தற்போது ஐந்து முன்னாள் அதிபர்கள் உயிரோடு உள்ளனர். ஒரு அதிபரின் மனைவி விதவையாக உள்ளார். இதில் 3 பேர் மட்டுமே சலுகைகள் பெற்று வருகின்றனர்.
ரவி மோகன் தனது தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தை தொடங்கினார். அதில், ப்ரோ கோட் திரைப்படத்தை முதலில் தயாரித்துள்ளார்.
நடிகர், தயாரிப்பாளர் தொடர்ந்து, ரவி மோகன் இயக்குநர் அவதாரத்தை எடுத்துள்ளார். அவர், இயக்கும் முதல் படத்தில் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை அவரே தயாரித்து இயக்குகிறார். மேலும் இப்படத்திற்கு An Ordinary Man என தலைப்பு வைத்துள்ளனர்.
இந்த படத்தின் ப்ரோமோ வீடியோவை ரவி மோகன் பிறந்தநாளை முன்னிட்டு இன்று படக்குழு வெளியிட உள்ளதாக நேற்று அறிவித்தது. இது தொடர்பான போஸ்டரையும் படக்குழு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், An Ordinary Man படத்திற்கு ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.






