என் மலர்
தலைப்புச்செய்திகள்
பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. திரைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
திரைப்படம் இதுவரை 80 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து வருகிறது. படத்தை பார்த்த பல திரைப்பிரபலங்கள் பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மதராஸி படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயனை தொலைபேசியில் அழைத்து பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
அப்போது அவர்," மை காட் எக்ஸலென்ட்.. என்ன பர்ஃபார்மன்ஸ்..! என்ன ஆக்ஷன்ஸ்.உ! சூப்பர் சூப்பர் எஸ்கே..! எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. ஆக்ஷன் ஹீரோ ஆகிட்டீங்க.. காட் பிளஸ்.. காட் பிளஸ்.." என்று அவருக்குறிய ஸ்டைலில், அவருக்குரிய சிரிப்பில் கூறியதாக சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தள பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இட்லி கடை படத்தின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இப்படத்தில் அருண் விஜய் அஷ்வின் என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், நடிகர் சத்யராஜ் விஷ்ணு வர்தன் என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், நடிகர் ராஜ்கிரன் சிவனேசனாக நடிப்பதாகவும் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், 'இட்லி கடை' படத்தில் 'மாரிசாமி' என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடிக்கிறார். இதுதொடர்பான, போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
- முன்னாள் அதிபர்கள், அவர்களின் பென்சன் உரிமையை இழக்கமாட்டார்கள்.
- அரசு மாளிகை, போக்குவரத்து சலுகை போன்றவற்றை இழக்க நேரிடும்.
இலங்கை பாராளுமன்ற தேர்தலின்போது, முன்னாள் அதிபர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் பறிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. அதனடிப்படையில் பாராளுமன்றத்தில் அதிபர்களுக்கு அதிகாரமளித்தல் திரும்பப் பெருதல் சட்ட மசோதாவை ஆளும் அரசு தாக்கல் செய்தது. விவாதத்திற்குப் பிறகு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது மசோதாவுக்கு ஆதரவாக 151 வாக்குகள் விழுந்தன. ஒரேயொரு வாக்கு மட்டும் எதிராக விழுந்தது.
முன்னாள் அதிபர்களுக்கான அதிகாரத்தை பறிப்பதற்கு, பாராளுமன்றத்தில் முழு மெஜாரிட்டியுடன் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று இலங்கை உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதனடிப்படையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மசோதா குறித்து சட்ட அமைச்சர் ஹர்ஷனா நானயக்கரா கூறுகையில் "முன்னாள் அதிபர்கள், அவர்களின் பென்சன் உரிமையை இழக்கமாட்டார்கள். அரசு மாளிகை, போக்குவரத்து சலுகை, செயலக ஊழியர்கள் போன்ற வசதி பறிக்கப்படும்" என்றார்.
இலங்கையில் தற்போது ஐந்து முன்னாள் அதிபர்கள் உயிரோடு உள்ளனர். ஒரு அதிபரின் மனைவி விதவையாக உள்ளார். இதில் 3 பேர் மட்டுமே சலுகைகள் பெற்று வருகின்றனர்.
ரவி மோகன் தனது தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தை தொடங்கினார். அதில், ப்ரோ கோட் திரைப்படத்தை முதலில் தயாரித்துள்ளார்.
நடிகர், தயாரிப்பாளர் தொடர்ந்து, ரவி மோகன் இயக்குநர் அவதாரத்தை எடுத்துள்ளார். அவர், இயக்கும் முதல் படத்தில் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை அவரே தயாரித்து இயக்குகிறார். மேலும் இப்படத்திற்கு An Ordinary Man என தலைப்பு வைத்துள்ளனர்.
இந்த படத்தின் ப்ரோமோ வீடியோவை ரவி மோகன் பிறந்தநாளை முன்னிட்டு இன்று படக்குழு வெளியிட உள்ளதாக நேற்று அறிவித்தது. இது தொடர்பான போஸ்டரையும் படக்குழு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், An Ordinary Man படத்திற்கு ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
- நேபாளத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- சமூக வலைதளங்களை நேபாள அரசு முடக்கியது போராட்டத்திற்கு முக்கிய காரணமானது.
காத்மண்டு:
ஊழல், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து நேபாள அரசுக்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமூக வலைதளங்களை அந்நாட்டு அரசு முடக்கியது போராட்டத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
மேலும், நேபாளத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை தடுக்க முற்பட்டதால் ஏற்பட்ட கலவரத்தால் பாராளுமன்றம், பிரதமர், ஜனாதிபதி வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் 22 பேர் உயிரிழந்தனர்.
கலவரம் தீவிரமானதால் ஜனாதிபதி ராம் சந்திரா பவுடல், பிரதமர் கே.பி.சர்மா ஒலி உள்பட பலர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் ராணுவம் கட்டுப்பாட்டில் நேபாளம் சென்றுள்ளது.
இந்நிலையில், அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் மற்றும் கலவரத்தில் நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 7,000 கைதிகள் தப்பிச்சென்றதாக தகவல் வெளியாகியது.
சிறைகளில் இருந்து தப்ப முயன்ற 5 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர் எனவும் தகவல் வெளியானது.
தப்பியோடிய கைதிகளை மீண்டும் கைதுசெய்ய ராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
நடிகர் விஷால் திரைத்துறைக்கு வந்து இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார்.
இதையொட்டி அவர் பலருக்கும் நன்றி தெரிவிக்கும் விதிமாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
இன்று நான் நடிகனாக திரையுல பயலலித்து 21 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளேன் இந்த தருணத்தில் என் பெற்றோர்க்கும், என் குருநாதர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் அவர்களுக்கும், லயோலா கல்லூரி ஆசிரியர் பாதர் இராஜநாவகம் அவர்களுக்கும், மேலும் என்னை உயர்த்தி அழகு பார்த்த அனைவருக்கும் வணக்கத்துடன் நன்றியினை தெசிலித்துக்கொள்கிறேன்.
பல கனவுடன் திரையுலகில் அடியெடுத்து வைத்த என்னை, இன்று உங்கள் அன்பினால் உங்களின் நம்பிக்கையில் உங்கள் கரகோஷத்தில் வாழும் நடிகனாக மாறியிருக்கிறேன். இந்த வெற்றி பயணத்தில் என்னுடைய வெற்றியாக இல்லாமல் தமக்கான வெற்றியாக பார்க்கிறேன்.
எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர்கள், என்னை செதுக்கிய இயக்குனர்கள் என்னுடன் ஒவ்வொரு படத்திலும் உழைத்த இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், துணை நடிகர்கள் மற்றும் தொழிலாளர்கள் மேலும் என் படங்களை உங்களிடம் கொண்டு சேர்த்த திரையரங்கு உரிமையாளர்கள், வெளியீட்டாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு ஆப்பரேட்டர்கள் மற்றும் எனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பத்திரிகை நண்பர்கள், ஊடக நண்பர்கள், சமூக ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
ஆனால்... இவைகளை எல்லாம் விட பெரிய சக்தியாக நான் கருதுவது என் உயிரான என் ரசிகர்கள். தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களான உங்கள் அன்பே என் உயிர்.
உங்கள் நம்பிக்கையே என் வலிமை. "நான் விழுந்தாலும் என்னை எழவைக்கும் ஏழுச்சி குரல்" நீங்கள் தான்.
என் நம்பிக்கையும் நீங்கள் நான்.
இந்த இருபத்தொன்று ஆண்டுகளில் எத்தனை சோதனைகளும், சவால்களும் வந்தாலும், எனக்கு துணையாக நின்று, என் அருகில் தோல் கொடுக்கும் தோழனாக இருந்தது நீங்கள் தான்.
நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு படியும், நான் தேர்வு செய்யும் ஒவ்வொரு கதையும் நான் வாழும் ஒவ்வொரு நொடியும், உங்களுக்காகவே இருக்கும். உங்களை மகிழ்விக்கவே இருக்கும்.
இந்த பயணம் முடிவடையவில்லை... இது ஒரு தொடக்கமே.
நான் வெறும் நன்றி என்ற வார்த்தைகளால் முடிக்காமல் உங்களால் அடையாளம் காட்டப்பட்ட நான் எனது "தேவி அறக்கட்டளை" மூலம் ஏழை, எளிய பெண் கவ்விக்கும், மாணவ, மாணவிகள் முன்னேற்றத்திற்க்காக செயல்படுத்தி வருகிறோம்.
எம்மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை நானும் என் இயக்கமும் என்றென்றும் செய்வோம்.
நான் உங்களில் ஒருவன், உங்களுக்காக எப்போதும் குரல் கொடுப்பேன் என்பதை உறுதியளிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதல் காலிபகுதி ஆட்ட நேர முடிவில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.
- 3ஆவது கால்பகுதி ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்தது வெற்றிக்கு உதவியது.
பெண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியா- கொரியா அணிகள் மோதின. இதில் இந்தியா 4-2 என வெற்றி பெற்றது.
ஆட்டம் தொடங்கிய 2ஆவது நிமிடத்திலேயே இந்திய வீராங்கனை பால்கே வைஷ்ணவி வித்தால் முதல் கோல் அடித்தார். இதனால் முதல் கால்பகுதி (முதல் 15 நிமிடம்) ஆட்டத்தில் இந்தியா 1-0 என முன்னிலைப் பெற்றது. 2ஆவது கால்பகுதி ஆட்டத்தில் இரு அணி வீராங்கனைகளும் கோல் அடிக்கவில்லை.
3ஆவது கால்பகுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகள் இரண்டு கோல்களும், கொரிய வீராங்கனைகள் ஒரு கோலும் அடித்தனர். ஆட்டத்தின் 33ஆவது நிமிடத்தில் குமாரி சங்கீதா கோல் அடித்தார். அதேவேளையில் கொரியா வீராங்கனை கிம் யுஜினும் கோல் (பெனாடில் கார்னர்) அடித்தார். பின்னர் 40ஆவது நிமிடத்தில் லால்ரெம்சியாமி கோல் அடிக்க 3ஆவது கால்பகுதி ஆட்டம் முடிவில் இந்தியா 3-1 என முன்னிலை பெற்றது.
4ஆவது மற்றும் கடைசி கால்பகுதி ஆட்டத்தில் 53ஆவது நிமிடத்தில் தென்கொரிய வீராங்கனை கிம் யுஜின் பெனால்டி கார்னரை பயன்படுத்தி கோல் அடித்தார். ஆட்டம் முடிவடைவதற்கு முந்தைய நிமிடமான 59ஆவது நிமிடத்தில் இந்திய வீராங்கனை பிசால் ருதுஜா தாதாசோ கோல் அடிக்க இந்தியா 4-2 என வெற்றி பெற்றது.
நாளை இந்தியா சீனாவை எதிர்கொள்கிறது. 13ஆம் தேதி சிங்கப்பூருக்கு எதிராக விளையாடுகிறது. சூப்பர்4 சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.
- பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
- அரசு அலுவலகங்களை தொடர்ந்து ஹிலட்ன் ஓட்டல் தீக்கிரையானது.
காத்மண்டு:
நேபாளத்தில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து போராட்டம் வெடித்ததால் இந்தத் தடை நள்ளிரவில் நீக்கப்பட்டது.
மேலும், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று நேபாள பிரதமர் சர்மா ஒலி பதவி விலகக் கோரி இளைஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிபர் மற்றும் பிரதமர் இல்லங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். பாராளுமன்ற கட்டிடத்துக்கும் தீ வைத்ததால் அங்கு கரும் புகை சூழ்ந்தது. விமான நிலையம் அருகிலும் தீ வைத்ததால் விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று சர்மா ஒலி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து ஜனாதிபதி ராம் சரண் பவுடலும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி இடைக்கால தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.
- எடப்பாடியை அசைத்துப் பார்க்கலாம் என்று கனவு கண்டால் தோற்பது நீங்கள் தான்.
- வயிற்றெரிச்சல் மனிதர்களுக்கு தோல்வி கிடைக்கும் என்றார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அதிமுகவில் இருந்து பதிவி நீக்கம் செய்யப்பட்ட செங்கோட்டையனை மறைமுகமாக தாக்கி விமர்சித்துள்ளார்.
மேலும், அதிமுக- பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாள் இபிஎஸ்-ஐ டிடிவி தினகரன் மாற்ற சொன்னதற்கும் ஆர்.பி.உதயகுமார் எதிர்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
ஒற்றுமை என்ற பெயரில் அ.தி.மு.க.வுக்கு பின்னடைவை ஏற்படுத்திவிடலாம் என சிலர் திட்டமிடுகின்றனர்.
பழனிசாமியின் பயணத்திற்கு பேரலையாக மக்கள் வருவதை தாங்கிக் கொள்ள முடியாத வயிற்றெரிச்சல் மனிதர்கள்; அத்தகைய வயிற்றெரிச்சல் மனிதர்களுக்கு ஜெயலலிதாவின் ஆன்மா தோல்வியைத் தரும்.
மூத்த முன்னோர்கள் இப்படிச் செய்தால், சாதாரண தொண்டர்கள் எங்கே போக முடியும்?
எடப்பாடியை அசைத்துப் பார்க்கலாம் என்று கனவு கண்டால் தோற்பது நீங்களாகத்தான் இருப்பீர்கள்.
அவரை மாற்றுவோம், இவரை மாற்றுவோம் என்று சொல்பவர்களை எல்லாம் மக்கள் மாற்றி விடுவார்கள்.
ஒற்றுமை என்ற பெயரை வைத்துக்கொண்டு அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- எல்ப்ரோ மாலில் The Conjuring -Last Rites படம் திரையிடப்பட்டது.
- ஆஷிக் என்பவர் தனது மனைவியுடன் கான்ஜுரிங் படத்தை பார்க்க வந்தார்
மகாராஷ்டிரா மாநிலம் புனே பிம்ப்ரி சின்ச்வாடில் உள்ள எல்ப்ரோ மாலில் The Conjuring -Last Rites படம் திரையிடப்பட்டது. ஆஷிக் என்பவர் தனது மனைவியுடன் கான்ஜுரிங் படத்தை பார்க்கவந்தார். அப்போது படத்தில் அடுத்தடுத்து நிகழ போவதை மனைவியிடம் ஆஷிக் கூறி கொண்டே வந்தார்.
ஆஷிக்கின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த அபிஷேக் என்பவர் படத்தின் Spoiler-களை கூறாதீர்கள் என்று எச்சரித்தார். அனால் அதனை பொருட்படுத்தாமல் ஆஷிக் தனது மனைவியிடம் படத்தின் Spoiler-களை கூறி வந்தார்.
பலமுறை கூறினாலும் சத்தமாக Spoiler-களை ஆஷிக் கூறி வந்ததால் அவருக்கும் அபிஷேக்கிற்கும் இடையே வாக்குவாதம் முற்றி, கைகலப்பாகி உள்ளது. படத்திற்கு இடையே இருவரும் தாக்கி கொண்டனர். இதில் இருவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் இருவரின் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- தென்ஆப்பிரிக்கா தொடரில் ஆர்ச்சர் சிறப்பாக பந்து வீசியதால் 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
- பேட்டர்கள் வரிசையில் சுப்மன் கில், ரோகித் சர்மா தங்களுடைய இடத்தை இழக்கவில்லை.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் சிறப்பாக பந்து வீசியதால் 16 இடங்களில் முன்னேறி 3ஆவது இடத்தை பிடித்துள்ளார். இது ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் அவருடைய சிறந்த இடமாகும்.
தென்ஆப்பிரிக்கா சுழற்பந்து வீச்சாளர் மகாராஜ் முதல் இடத்திலும், இலங்கை சுழற்பந்து வீச்சாளர் தீக்ஷனா 2ஆவது இடத்திலும் நீடிக்கின்றனர். இந்திய சுழந்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஒரு இடம் சரிந்து 4ஆவது இடத்தில் உள்ளார். மற்றொரு இந்திய வீரர் ஜடேஜா 2 இடங்கள் பின்தங்கி 10 இடத்தை பிடித்துள்ளார்.
பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர் சுப்மன் கில் முதல் இடத்தில் நீடிக்கிறார். ரோகித் சர்மா 2ஆவது இடத்தில் உள்ளார். முதல் 10 இடங்களில் எந்த மாற்றமும் இல்லை. விராட் கோலி 4ஆவது இடத்திலும், ஷ்ரேயாஸ் அய்யர் 8ஆவது இடத்திலும், கே.எல். ராகுல் 15ஆவது இடத்திலும் நீடிக்கின்றனர்.
ஜோ ரூட் 5 இடங்களில் முன்னேறி 19ஆவது இடத்தில் உள்ளார்.
- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.
- கனிமவளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதாக குற்றம்சாட்டி விவசாயி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பொள்ளாச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் கைத்தறி நெசவாளர்கள், தென்னை விவசாயிகள், கல்குவாரி, கிரஷ் உரிமையாளர்கள் சங்கத்தினர், டிப்பர் லாரி டிரைவர்கள் சங்கத்தினர் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. அவர்களுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.
அந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற விவசாயி ஒருவர் வாக்குவாதம் செய்ததால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
தமிழக கனிமவளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதாக குற்றம்சாட்டி விவசாயி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் கள்ளுக்கடை திறந்திருந்தால் விவசாயிகள் நன்றாக இருந்திருப்போம் என்று கூறி அந்த விவசாயி வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன்பின்பு பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "அனைவரின் மனமும் புண்படாத வகையில் வேண்டும். அது தான் அரசாங்கத்தின் வேலை. அதனால் உங்கள் கருத்தை மட்டும் சொல்லுங்கள், அதோடு நிறுத்தி கொள்ளுங்கள்" என்று தெரிவித்தார்.






