என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இ.பி.எஸ். செல்வாக்கை பார்த்து சிலருக்கு வயிற்றெரிச்சல்- ஆர்.பி. உதயகுமார் தாக்கு
- எடப்பாடியை அசைத்துப் பார்க்கலாம் என்று கனவு கண்டால் தோற்பது நீங்கள் தான்.
- வயிற்றெரிச்சல் மனிதர்களுக்கு தோல்வி கிடைக்கும் என்றார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அதிமுகவில் இருந்து பதிவி நீக்கம் செய்யப்பட்ட செங்கோட்டையனை மறைமுகமாக தாக்கி விமர்சித்துள்ளார்.
மேலும், அதிமுக- பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாள் இபிஎஸ்-ஐ டிடிவி தினகரன் மாற்ற சொன்னதற்கும் ஆர்.பி.உதயகுமார் எதிர்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
ஒற்றுமை என்ற பெயரில் அ.தி.மு.க.வுக்கு பின்னடைவை ஏற்படுத்திவிடலாம் என சிலர் திட்டமிடுகின்றனர்.
பழனிசாமியின் பயணத்திற்கு பேரலையாக மக்கள் வருவதை தாங்கிக் கொள்ள முடியாத வயிற்றெரிச்சல் மனிதர்கள்; அத்தகைய வயிற்றெரிச்சல் மனிதர்களுக்கு ஜெயலலிதாவின் ஆன்மா தோல்வியைத் தரும்.
மூத்த முன்னோர்கள் இப்படிச் செய்தால், சாதாரண தொண்டர்கள் எங்கே போக முடியும்?
எடப்பாடியை அசைத்துப் பார்க்கலாம் என்று கனவு கண்டால் தோற்பது நீங்களாகத்தான் இருப்பீர்கள்.
அவரை மாற்றுவோம், இவரை மாற்றுவோம் என்று சொல்பவர்களை எல்லாம் மக்கள் மாற்றி விடுவார்கள்.
ஒற்றுமை என்ற பெயரை வைத்துக்கொண்டு அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.






