என் மலர்
நீங்கள் தேடியது "தேஜஸ்வி மனோஜ்"
- இந்த ஆண்டின் கிட் ஆப் த இயர் என்ற பட்டத்தை தேஜஸ்வி மனோஜுக்கு டைம் இதழ் அளித்தது.
- ஆன்லைன் மோசடி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் டைம் இதழ் இந்த ஆண்டின் கிட் ஆப் த இயர் என்ற பட்டத்தை 17 வயது அமெரிக்கவாழ் இந்தியப் பெண்ணுக்குத் தந்து கவுரவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த 17 வயது தேஜஸ்வி மனோஜ் இந்தப் பட்டத்தைப் பெற்றுள்ளார்.
வயது மூத்தோரை ஆன்லைன் மோசடிகளில் இருந்து பாதுகாக்க ஷீல்டு சீனியர்ஸ் (Shield Seniors) எனும் இணையதளத்தை உருவாக்கினார். இதையடுத்து, தேஜஸ்விக்கு இந்தப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு ஆன்லைன் மூலம் அவரது தாத்தாவிடம் உள்ள பணத்தைத் திருட முயன்றதை அறிந்த தேஜஸ்வி மோசடிகளைப் பற்றி ஆய்வு மேற்கொண்டார்.
ஆன்லைன் மோசடி பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே இருப்பதை உணர்ந்த அவர், இணைய மோசடிகளைப் பற்றிக் கற்பிக்க இந்த இணையதளத்தை உருவாக்கினார். தற்போது முதியோர் இல்லங்கள் சென்று அங்குள்ளோருக்கு இந்த இணைய தளத்தைப் பயன்படுத்த உதவுகிறார்.






