என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டாஸில் இந்தியா தொடர் தோல்வி: தொடங்கி வைத்த சூர்யகுமார் யாதவ், முடித்தும் வைத்துள்ளார்..!
- இங்கிலாந்துக்கு எதிராக சுப்மன் கில் 5 டெஸ்ட் போட்டியிலும் டாஸ் தோற்றார்.
- சாம்பியன்ஸ் டிராபியில் ரோகித் சர்மா அனைத்து போட்டிகளிலும் டாஸ் தோற்றார்.
இந்திய அணி மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் தொடர்ந்து டாஸில் தோல்வியடைந்து வந்தது. சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் தொடர்ந்து 5 முறை டாஸில் தோல்வியடைந்தார்.
ஐசிசி சாம்பியன்ஷிப்பில் ரோகித் சர்மா தொடர்ந்து டாஸ் தோற்று வந்தார். இந்திய அணி கேப்டன்களுக்கும், டாஸ்க்கும் எட்டாம் பொருத்தமாக இருந்து வந்தது.
இந்த நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று ஐக்கிய அரபு அமீரகம் அணிக்கெதிராக இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் டாஸ் வென்றார். இதன்மூலம் இந்திய அணி தொடர்ந்து 15 முறை டாஸ் தோற்று வந்த நிலையில், தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது.
சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக டாஸ் தோற்றது. அதன்பின் தொடர்ந்து தோற்று வந்த நிலையில், தற்போது சூர்யகுமாரே அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.






