என் மலர்tooltip icon

    இந்தியா

    EU 100% வரி விதிக்க வேண்டும் எனக்கூறிய டிரம்ப்: உடனடியாக இத்தாலி பிரதமருக்கு டயல் செய்த பிரதமர் மோடி
    X

    EU 100% வரி விதிக்க வேண்டும் எனக்கூறிய டிரம்ப்: உடனடியாக இத்தாலி பிரதமருக்கு டயல் செய்த பிரதமர் மோடி

    • வரி இல்லாத வர்த்தக ஒப்பந்த முன்மொழிவு குறித்து ஆலோசனை.
    • இந்தியா- இத்தாலி மூலோபாய கூட்டாண்மையை மேம்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்கள்.

    இந்திய பிரதமர் மோடி இன்று மாலை, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை டொலிபோன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, இந்தியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையில் வரி இல்லாத வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக முன்மொழியப்பட்டது தொடர்பாக ஆலோசனை நடத்தியதுடன், இதற்கு ஆதரவு அளித்த மெலோனிக்கு நன்றியும் தெரிவித்துள்ளார் இந்திய பிரதமர் மோடி.

    மேலும், இந்தியா- இத்தாலி மூலோபாய கூட்டாண்மையை மேம்படுத்துவதற்கான எங்கள் கூட்டு உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்தினோம். உக்ரைனில் மோதலை முன்னதாகவே முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஆர்வத்தைப் பகிர்ந்து கொண்டோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    இந்த ஆண்டு இறுதிக்குள் முன்மொழியப்பட்ட வரி இல்லாத வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) வலுப்படுத்த இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் பரிசீலித்து வருகின்றன. இரு தரப்பினரும் இந்த வாரம் டெல்லியில் 13வது சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்துகின்றனர்.

    எட்டு ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு, ஜூன் 2022-ல் இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் வரி இல்லாத வர்த்தக ஒப்பந்தத்திற்கான (FTA) பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கின.

    ஐரோப்பிய யூனியன் இந்தியாவுக்கு 100 சதவீதம் வரி விதிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனாடில் டிரம்ப் கேட்டுக்கொண்ட நிலையில், இந்திய பிரதமர் மோடி, இத்தாலி பிரதமர் மோடியுடன் பேசியுள்ளார்.

    அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்த போதிலும், பிரதமர் மோடி அடிபணிய மறுத்துவிட்டார். இதனால் ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த ஆவலாக உள்ளேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×