என் மலர்

  செய்திகள்

  விரைவில் வெளியாக இருக்கும் சியோமி ரெட்மி நோட் 4X: புதிய தகவல்கள் வெளியாகின
  X

  விரைவில் வெளியாக இருக்கும் சியோமி ரெட்மி நோட் 4X: புதிய தகவல்கள் வெளியாகின

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சியோமி ரெட்மி நோட் 4X ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சீனாவைச் சேர்ந்த இணையத்தளம் ஒன்றில் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கு பார்ப்போம்.
  பீஜிங்:

  சியோமி நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் ரெட்மி நோட் 4X ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் சீனாவின் ஸ்மார்ட்போன்களுக்கு சான்றளிக்கும் தளத்தின் மூலம் தெரியவந்திருக்கிறது. சீனாவை சேர்ந்த TENAA இணையதளத்தில் ரெட்மி நோட் 4X ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வமாக சான்று பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 

  அதன் படி TENAA தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும் புகைப்படத்தில் புதிய ரெட்மி நோட் 4X பார்க்க ரெட்மி நோட் 4 போன்றே காட்சியளிக்கிறது. இத்துடன் அதிகரிக்கப்பட்ட ரேம் மற்றும் மெமரி உள்ளிட்டவை வழங்கப்ப்டடுள்ளன. இதனால் புதிய ரெட்மி நோட் 4X ஸ்மார்ட்போனில் 4GB ரேம் மற்றும் 32GB / 64GB இன்டர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. 

  மற்ற சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.5 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ X20 டீகா-கோர் பிராசஸர் மற்றும் 2GB, 3GB, 4GB ரேம் மற்றும் 13 எம்பி பிரைமரி கேமராவும் 5 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுகிறது. இத்தனை சிறப்பம்சங்களை சக்தியூட்ட ஏதுவாக 4100 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என்றும் கைரேகை ஸ்கேனர் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளன. 

  முன்னதாக வெளியான புகைப்படங்களில் ரெட்மி 4X ஸ்மார்ட்போனில் புதிய வகை 1.95 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 653 சிப்செட் மற்றும் டூயல் கேமரா செட்டப் மற்றும் 8GB ரேம் உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. சக்திவாய்ந்த சிப்செட் என்பதால் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

  இந்த ஆண்டு மார்ச் மாதம் சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. பட்ஜெட் விலையில் வெளியான இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×