search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தூத்துக்குடியில் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள உரம் கடத்தல்
    X

    உரம்

    தூத்துக்குடியில் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள உரம் கடத்தல்

    • தூத்துக்குடி கூடுதல் எஸ்.பி. சந்தீஷ் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
    • மறவன்மடம் கிராமத்தில் உள்ள ஒரு குடோனில் போலீசார் சோதனை நடத்தினர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் மார்டீன் தெருவை சேர்ந்தவர் அன்பரசு (வயது28). இவர் ரஷ்யாவில் இருந்து தூத்துக்குடிக்கு கொண்டு வரப்படும் காம்ப்ளக்ஸ் உரத்தை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார்.

    இவர் விற்பனை செய்யும் காம்ப்ளக்ஸ் உரம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு புகார் செய்தார்.

    அதன்பேரில் தூத்துக்குடி கூடுதல் எஸ்.பி. சந்தீஷ் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் புதுக்கோட்டை அருகே உள்ள மறவன்மடம் கிராமத்தில் உள்ள ஒரு குடோனில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 165 டன் காம்ப்ளக்ஸ் உரம் இருப்பது தெரியவந்தது.

    விசாரணையில் அது ரஷ்யாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்ததும், அதனை கடத்தி வந்து பதுக்கி வைக்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ. 50 லட்சம் ஆகும்.

    இதைத்தொடர்ந்து போலீசார் காம்ப்ளக்ஸ் உரம் மற்றும் அதனை கடத்தி வர பயன்படுத்தப்பட்ட லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    அதனை கடத்தி வந்தவர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட உரத்தையும், லாரியையும் படத்தில் காணலாம்.

    Next Story
    ×