search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    புதிய கல்வி ஆண்டில் 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு பாடங்களையும் நடத்த வேண்டும்- பள்ளி கல்வித்துறை உத்தரவு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    புதிய கல்வி ஆண்டில் 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு பாடங்களையும் நடத்த வேண்டும்- பள்ளி கல்வித்துறை உத்தரவு

    • மாணவர்களின் பாடச் சுமை குறைந்ததால் அதனை மட்டும் படித்து தேர்வு எழுதினர்.
    • கல்வியாண்டில் அனைத்து வகுப்புகளும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    கொரோனா தொற்று பாதிப்பால் கடந்த ஆண்டு பள்ளிகள் முழு அளவில் செயல்படவில்லை. குறைவான நாட்களே செயல்பட்டதால் பாடத் திட்டங்கள் குறைக்கப்பட்டன.

    பொதுத்தேர்வு எழுதிய 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் பாடத் திட்டங்கள் குறைக்கப்பட்டது.

    மாணவர்களின் பாடச் சுமை குறைந்ததால் அதனை மட்டும் படித்து தேர்வு எழுதினர். இந்த நிலையில் புதிய கல்வி ஆண்டிற்கான வழிகாட்டிகள், நாட் குறிப்பு போன்றவை பள்ளி கல்வித் துறை மூலம் இணைய தளத்தில் வெளியிடப்பட்டன. பள்ளிகள் நடைபெறும் நாட்கள், காலாண்டு, அரையாண்டு தேர்வு, பொதுத்தேர்வு தேதிகள் போன்றவை முன் கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளன.

    அதன்படி இந்த கல்வியாண்டில் அனைத்து வகுப்புகளும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 1 முதல் 10-ம் வகுப்பு வரை நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. 20-ந்தேதி பிளஸ்-2விற்கும் 27-ந்தேதி பிளஸ்-1 மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

    இந்த வருடம் முழு அளவில் வழக்கம் போல் பள்ளிகள் செயல்பட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதனால் 1 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு முழு பாடங்களும் வழக்கம் போல் நடத்த வேண்டும் என்று கல்வித் துறை முதன்மை கல்வி அதிகாரிளுக்கு அறிவுறுத்தி உள்ளது.

    எவ்வித பாடப்பகுதியையும் தவிர்க்காமல் பாட திட்டத்தில் உள்ள பாடங்களை அந்தந்த காலத்திற்குள் முடித்து மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×