search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கைக்கு எட்டுமா...? காத்திருக்கும் கார்த்தி சிதம்பரம்!
    X

    கைக்கு எட்டுமா...? காத்திருக்கும் கார்த்தி சிதம்பரம்!

    • கார்த்தி ப.சிதம்பரம் எம்.பி., செல்வ பெருந்தகை எம்.எல்.ஏ., ஆகியோர் போட்டியில் இருப்பதாக கூறப்படுகிறது.
    • சொந்த கட்சியினரே கேள்வியும் எழுப்புகிறார்கள்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை பிடிக்கும் போட்டியில் இருந்தவர்களில் செல்வக்குமார் எம்.பி., மாணிக்கம் தாகூர் எம்.பி. ஆகியோர் வேறு மாநிலங்களுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். எனவே இனி அந்த ரேசில் அவர்கள் இல்லை என்றாகிவிட்டது. இப்போது சசிகாந்த் செந்தில், ஜோதிமணி எம்.பி., கார்த்தி ப.சிதம்பரம் எம்.பி., செல்வ பெருந்தகை எம்.எல்.ஏ., ஆகியோர் போட்டியில் இருப்பதாக கூறப்படுகிறது.

    இவர்களில் கார்த்தி ப.சிதம்பரம் தலைவர் பதவியை மிகவும் விரும்புவதால் மகனுக்கு அவர் விரும்பியதை வாங்கி கொடுத்தே தீர வேண்டும் என்பதில் ப.சிதம்பரம் மிகத்தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக டெல்லியில் அவர் முக்கிய தலைவர்கள் பலரையும் சந்தித்து எக்காரணத்தை கொண்டும் விட்டுத்தரமாட்டேன் என்று பிடிவாதமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனால் மேலிடமும் முடிவெடுக்க முடியாமல் தடுமாறுகிறதாம்.

    அதே நேரம் காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடந்தபோது கார்கேவுக்கு எதிராக களம் இறங்கி சசிதரூருக்கு ஆதரவு திரட்டினார் கார்த்தி. அந்த கோபம் கார்கே மனதில் இருக்கும் என்கிறார்கள்.

    அதனால் தான் கட்சியின் தற்போதைய நிலையையே மாற்றி காட்டுகிறேன் என்று பல்வேறு உறுதி மொழிகளை கொடுத்தும் 'கை' கைக்கு எட்டவில்லை என்று கூறப்படுகிறது. இன்னொரு பக்கத்தில் பல ஆண்டுகள் அப்பா மிகப்பெரிய மந்திரி பொறுப்பில் இருந்தும், கார்த்தி ப.சிதம்பரம் எம்.பியாக இருந்தும் ஏன் கட்சியை வளர்க்க முடியவில்லை? பதவி கொடுத்தால் மட்டும் தான் வளர்க்க முடியுமா? என்று சொந்த கட்சியினரே கேள்வியும் எழுப்புகிறார்கள்.

    Next Story
    ×