search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவல்துறை புகார் ஆணையம் அமைக்க வேண்டும்- மக்கள் நீதி மய்யம் அறிக்கை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவல்துறை புகார் ஆணையம் அமைக்க வேண்டும்- மக்கள் நீதி மய்யம் அறிக்கை

    • சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கானது நேற்று முடித்து வைக்கப்பட்டிருக்கிறது.
    • நாம் கோரிய சீர்திருத்தம் குறித்து உச்சநீதிமன்றத்தில் முறையிடுமாறு உயர்நீதி மன்றம் அறிவுறுத்தியுள்ளது.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு முரணாக தமிழகத்தில் அமைக்கப்பட்ட "காவல் துறை புகார் ஆணையத்தை" சீரமைத்து நீதிபதிகளின் தலைமையில் இந்த ஆணையமானது அமைக்கப்பட வேண்டும் என்றுகோரி 2020-ல் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வழி காட்டுதலின்படி துணைத் தலைவர் மவுரியாவால், சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கானது நேற்று முடித்து வைக்கப்பட்டிருக்கிறது.

    நாம் கோரிய சீர்திருத்தம் குறித்து உச்சநீதிமன்றத்தில் முறையிடுமாறு உயர்நீதி மன்றம் அறிவுறுத்தியுள்ளது.

    காவல்துறை புகார் ஆணையமானது உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி அமைக்கப்படும் வரை மக்கள் நீதி மய்யத்தின் முன்னெடுப்புகள் தொடரும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×